பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.11.2022 - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, November 6, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.11.2022

 

 திருக்குறள் :

பால்:அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம் :அறன் வலியுறுத்தல்

குறள் : 33
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

பொருள்:
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

பழமொழி :

The secret of success is the consistency of purpose.

நோக்கத்தின் உறுதியே வெற்றியின் ரகசியம்

இரண்டொழுக்க பண்புகள் :

1. அன்பையும் மரியாதையும் பிறருக்கு தயங்காமல் கொடுப்பேன் 

2. மகிழ்ச்சி என்னும் பெரிய பழத்தை விட நம்பிக்கை என்னும் சிறிய விதை பெரிதாக வளர்ந்து அநேக பழங்கள் கொடுக்கும் எனவே நம்பிக்கை விதை செல்லுமிடமெல்லாம் விதைப்பேன்

பொன்மொழி :

ஒரு மனிதனால் செலவிடக்கூடிய மிகவும் மதிப்புமிக்க விடயம் நேரம். --தியோபிராஸ்டஸ்

பொது அறிவு :

1. ஆயிரம் ஏரிகளின் பூமி என்று அழைக்கப்படுவது? 

பின்லாந்து. 

2.இந்தியாவின் நீல மலைகள் என்று அழைக்கப்படுவது எது? 

நீலகிரி குன்றுகள்.

English words & meanings :

Silvics - study of tree's life. Noun. மரங்கள் வாழ்வு குறித்த அறிவியல் படிப்பு

ஆரோக்ய வாழ்வு :

அதிமதுரம் அல்லது முலேத்தி தொண்டை வலியை கையாள்வதில் மிகவும் பயனுள்ள ஆயுர்வேத பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இவற்றை பல வழிகளில் உட்கொள்ளலாம். தொண்டை வலிக்கு இது ஒரு பழமையான தீர்வாகும்

NMMS Q :

இளகும் நெகிழி என்பது__________ஆகும். 

விடை: பாலி எத்திலீன்

நவம்பர் 07


மேரி க்யூரி அவர்களின் பிறந்தநாள்
மேரி க்யூரி  (ஆங்கிலம்:Marie Salomea Skłodowska-Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934[1]) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903[2], 1911[3] ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.


சி.வி.இராமன் அவர்களின் பிறந்தநாள்


சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்

சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஓர் அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.

அழ. வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள்
அழ. வள்ளியப்பா (நவம்பர் 71922மார்ச் 161989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.

நீதிக்கதை

 பஞ்சவர்ண கிளி

நீண்ட காலத்திற்கு முன்னர் உலகத்தில் பறவைகள் இருந்தன. ஆனால், அவை எல்லாம் ஒரேமாதிரி சாம்பல் நிற வண்ணத்தில் இருந்தன. ஒரு வசந்த காலத்தில், பறவைகளின் அரசன் பறவைகளுக்கு அழைப்பு விடுத்ததை அறிந்து எல்லாப் பறவைகளும் அரசன் முன்னால் கூடின. கூட்டமாக கூடி வந்த பறவைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பி மகிழ்ந்தன. சில பறவைகள் சில மீட்டர் வரை பறந்தன. சில தத்தி தத்தி நடந்தன. சில நொண்டிச் செல்வது போல் நகர்ந்தன. அவைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன. 

அரசப்பறவை, ஓர் இறக்கையை வானத்தை நோக்கி திருப்பியது. வானத்தில் ஒரு பெரிய வானவில் தோன்றின. உடனே எல்லா பறவைகளும் வானத்திலுள்ள வண்ணங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டன. ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சள், காவி, சிவப்பு என்று அவைகள் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தன. ஓர் அழகான பெரிய வானவில்லை அவர்கள் அதுவரை பார்த்ததே இல்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு நிறத்தைக் கொடுக்கப்போகிறேன். உங்களுக்கு எந்த நிறம் பிடிக்குமோ அதை நீங்கள் வானவில்லில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியது பறவைகளின் அரசன். அடுத்த வினாடி ஒவ்வொரு பறவையும் தனக்கு பிடித்தமான நிறத்தைப் பறிக்க முயன்றன. 

ஒரு கிளி முன்னால் வந்தது. எனக்கு பச்சை வர்ணமே பிடிக்கும் என்று சொல்லி, அது பச்சை நிறத்தைப் பெற்றுக்கொண்டது. அதை பச்சைக்கிளி என்று அழைத்தனர். ஒரு குருவி ஓடி வந்தது. அது மஞ்சள் நிறத்தை அணிந்து கொண்டது. அதை எல்லோரும் மஞ்சள் குருவி என்று அழைத்தனர். எல்லோரையும் தள்ளி விட்டப்படி ஒரு குருவி முன்னால் வந்து சிவப்பு நிறத்தைப் பெற்றுக்கொண்டது. அதை எல்லோரும் செங்குருவி என்று கூப்பிட்டனர். இப்படி எல்லா பறவைகளும் தாங்கள் விரும்பிய நிறத்தைப் பெற்றுக்கொண்டன. ஆனால், ஒரே ஒரு சின்னஞ்சிறிய குருவி மட்டும் தனக்கு நிறம் கிட்டாமல் நின்று கொண்டிருந்தது. 

அரசப்பறவை அந்தக் குருவியைப் பார்த்தது. நீ ஏன் மற்றவர்களைப் போல் வர்ணம் கேட்கவில்லை? என்று கேட்டது. வரிசையில் எனது முறை வரும் என்று நான் காத்திருந்தேன் என்று சொன்னது அந்த சின்னஞ்சிறு பறவை. எல்லா நிறங்களும் முடிந்து விட்டதே! என்ன செய்வது? என்றது. அரசப்பறவை. அதைக் கேட்டதும், அந்த சின்னஞ்சிறு பறவை அழுதுகொண்டே, நான் எப்போதும் இந்த சாம்பல் நிறத்தில் தான் இருக்க வேண்டுமா? என்றது. அரசப்பறவை சொன்னது, நீ மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்கிறாய்! இப்படிப்பட்ட நீ சாம்பல் வர்ணத்தில் இருத்தல் கூடாது, என்று சொல்லி எல்லாப் பறவைகளையும் திருப்பி அழைத்தது. ஒவ்வொரு பறவையிடம் இருந்தும், அது கொஞ்சம் வர்ணத்தை எடுத்து, அந்த சிறிய பறவைக்கு கொடுத்தது. அதனால் அந்த சின்னஞ்சிறிய பறவை, இப்போது மிகவும் அழகாய் காணப்பட்டது. அதைப் பார்த்து மகிழ்ந்த பறவையின் அரசன், அதற்கு பஞ்சவர்ண கிளி என பெயர் வைத்தான். 

நீதி :
பொறுமையாக இருந்தால் நமக்கு கிடைப்பது கிடைக்கும்.

இன்றைய செய்திகள்

07.11.22

* தமிழகத்தில் பள்ளிக் கட்டிடங்கள் எங்கெல்லாம் பழுதடைந்து உள்ளதோ, அவற்றையெல்லாம் இடித்துவிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

* தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும், 16 மாவட்டங்களில் இன்று  கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு மீண்டும் திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

* சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிர்களை இம்ம்மாதம் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்று தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை தெரிவித்துள்ளது.

* ஹைதராபாத், டெல்லி, பெங்களூருவில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வீடு வாங்க முன்னுரிமை.

* டான்சானியாவில் ஏரியில் விழுந்து நொறுங்கிய விமானம்: 20 பயணிகள் மீட்பு; பலர் மாயம்.

* டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அபாரவெற்றி.

* ஆசிய குத்து சண்டை சாம்பியன்ஷிப்: 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா.

* பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் மரியா சக்காரி, சபலென்கா தங்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறினர்.

Today's Headlines

* Wherever the school buildings are damaged the CEOs are advised to demolish it. Information by Education Minister Anbil Mahes Poyyamozhi

* Chennai Metrology Department predicted that there may be rains for four more days in TN and there will be heavy rains in 16 districts

* The school buildings which are built before 2011 need not apply for project permission Chennai High Court cleared the doubts regarding this 
Samba, thaaladi and seasonal paddy crops are to be insured information by Tamilnadu Agriculture and Farmers' Welfare Association.

* In Hyderabad, Bangalore, and Delhi NRI people are given preference to buy houses. 

* In Tanzania there is a plane crash in a lake: 20 people were rescued many absconded. 

* In T20 World Cup Cricket Match India won marvelously by defeating Zimbabwe.

* In Women's Tennis Championship Maria Sakkari and Sabelenga captured the first two places in their category and moved upward in Semifinals.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Post Top Ad