வங்கிக் கணக்கை மற்றொரு கிளைக்கு எளிதாக மாற்றுவது எப்படி? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, November 29, 2022

வங்கிக் கணக்கை மற்றொரு கிளைக்கு எளிதாக மாற்றுவது எப்படி?

  

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் சேமிப்புக் கணக்குகளை தற்போதுள்ள வங்கிக் கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு இணையதளத்தில் மாற்றுவதற்கான வசதியை வழங்குகின்றது.

ஒரு வங்கிக் கணக்கை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்றுவதற்கு வங்கிக் கிளைக்கு சென்று, நீண்ட வங்கி வரிசையில் நின்று, ஏராளமான படிவங்களை நிரப்பி, கிளை மாற்றப்படுவதற்கு சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக எளிதாக இணையதளத்தில் மாற்றும் வசதியை எஸ்பிஐ வழங்குகின்றது.

இருப்பினும், ஒருவர் தங்கள் வங்கியின் கிளையை மாற்ற விரும்பினால், ஒரு சில நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும்: 

சேமிப்பு வங்கிக் கணக்குகள் மட்டுமே இணையதளத்தில் மற்றொரு கிளைக்கு மாற்ற இயலும். அதேபோல் செயலற்ற மற்றும் முழுமையடையாத கேஒய்சி(KYC) விவரங்கள் உள்ள சேமிப்பு வங்கிக் கணக்குகளை இணையதளத்தில் கிளைகளை மாற்ற அனுமதிக்கப்படாது. 

மேலும், வங்கிக் கிளையை மாற்ற விரும்பும் நபர், அவரின் செல்போன் எண் வங்கிக் கிளையில் பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே இணையதளத்தில் மாற்ற முடியும். வங்கிக் கிளையை மாற்றுவதற்கு, மாற்ற விரும்பும் வங்கிக் கிளைக் குறியீடு முக்கியம் ஆகும். 

 

எஸ்பிஐ சேமிப்பு வங்கிக் கணக்கை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு இணையதளத்தில் மாற்றுவது எப்படி? 


* எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளமான 'www.onlinesbi.com'-க்கு செல்ல வேண்டும்.


* முகப்புப் பக்கத்தில், 'Peronal Banking' என்பதைக் கிளிக் செய்து, உங்கள் பயனர் பெயர்(user name) மற்றும் கடவுச்சொல்லைக்(password) கொண்டு உள்நுழையவும். 


* இதன் மூலம் நீங்கள் நெட் பேங்கிங்கில்(net banking) உள்நுழைந்து புதிய பக்கம் திறக்கும். 


* இப்போது, இணைய சேவைகளை பெற பக்கத்தின் மேலே உள்ள 'E-Service' விருப்பத்தை கிளிக் செய்யவும். 


* சேவைகளின் பட்டியலில், 'Transfer of Savings Account' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். 


* அடுத்து, புதிய பக்கத்தில் வங்கியில் நீங்கள் வைத்திருக்கும் கணக்குகளின் பட்டியலைக் காண்பிக்கும். நீங்கள் மாற்ற விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும். உங்களிடம் ஒரே ஒரு வங்கிக் கணக்கு இருந்தால், அது தானாகவே தேர்ந்தெடுக்கப்படும். இப்போது, நீங்கள் கணக்கை மாற்ற விரும்பும் வங்கிக் கிளையின் கிளைக் குறியீட்டை பதிவு செய்து, 'Get Branch Name' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.


* கிளையின் பெயர் உருவாக்கப்பட்டு, சரியாக இருந்தால், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்த பிறகு, பக்கத்தின் முடிவில் உள்ள தேர்வுப் பெட்டியைக் கிளிக் செய்து பின்பு 'Submit' பொத்தானைக் கிளிக் செய்யவும். 


* சமர்ப்பித்த பிறகு, புதிய பக்கத்தில் பழைய கிளைக் குறியீடு மற்றும் புதிய கிளைக் குறியீட்டைப் பயன்படுத்தி கணக்குப் பரிமாற்றத் தகவலைச் சரிபார்க்க வேண்டும். அடுத்து, 'Confirm' என்பதைக் கிளிக் செய்யவும். 


* அதன் பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். ஒரு புதிய பக்கத்திற்கு சென்று, அங்கு நீங்கள் OTP ஐ உள்ளிட்டு 'Confirm' விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். 


* இறுதியாக, திரையில் "Your branch transfer request has been successfully registered" என்று ஒரு அறிவிப்பைக் காண்பிக்கும். 


* இதற்குப் பிறகு, உங்கள் வங்கிக் கணக்கு விரைவில் மாற்றப்படும், மேலும் உங்கள் பதிவு செய்யப்பட்ட செல்போம் எண்ணுக்கு அனுப்பப்படும் செய்தியின் மூலம் அதைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

Post Top Ad