SMC 28.10.2022 - பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு... - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, October 29, 2022

SMC 28.10.2022 - பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு...

அனைத்து வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் காலை வணக்கம் :

இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டதில் உறுப்பினர் வருகை மற்றும் பள்ளி மேம்பாட்டு திட்டம் TNSED Parent app ல் பதிவேற்றம் செய்யும் வழி முறைகள்...

 1. பள்ளி மேலாண்மை தலைவர்  தொலைபேசி எண் கொண்டு login செய்ய வேண்டும்.

 2. முதலில் பள்ளி மேலாண்மை குழு icon ஐ கிளிக் செய்த பின் வருகை என்ற  icon இருக்கும் அதை  click செய்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வருகையை  அப்டேட் செய்து SAVE கொடுக்க வேண்டும்.


 3.பின்பு திரையில் தோன்றும் மாதாந்திர பள்ளி மேம்பாட்டு திட்டம் என்ற icon ஐ கிளிக் செய்து திட்டமிடுதல் &மதிப்பாய்வு  பகுதிக்குச் சென்றால் கீழ் பகுதியில்,புதிய திட்டம் என்ற ஒரு + குறியீடு  இருக்கும் அதை click செய்ய வேண்டும்.


4.திரையில் சேர்க்கை மற்றும் தக்க வைத்தல், கட்டமைப்பு, கற்றல், மேலாண்மை என்ற 4 உட்கூறுகள் இருக்கும்.


5. நான்கு உட்கூறுகள் அல்லது ஏதாவது ஒன்றை தேர்வு செய்து நமது பள்ளிக்குத்

 தேவையான திட்டங்களை அதில் பதிவேற்றம் செய்யலாம்.


6. ஒரு மாதத்திற்கு 10 பள்ளி மேம்பாட்டு திட்டங்களை மட்டுமே நாம்  பதிவேற்றம் செய்ய முடியும்..


  7. மிக அத்தியாவசியமான தேவைகளை முதலில் பள்ளி மாதாந்திர மேம்பாட்டு திட்டத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


8. நிதி ஆதாரம் தேவைப்படும் திட்டங்கள் மற்றும் நிதி தேவைப்படாத திட்டங்களையும் நாம் பதிவேற்றம் செய்யலாம்.


9. பதிவேற்றம் செய்யப்பட்ட திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்ட திட்டங்களை, பள்ளி மேலாண்மை குழு தீர்மானத்தில் இயற்றி  அதை நவம்பர் 1.11.2022 அன்று நடைபெறும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் விவாதித்திட வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி அனைத்து வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தினை சிறப்பாக நடத்தி முடித்திட அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post Top Ad