குரூப் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, October 29, 2022

குரூப் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

 

குரூப் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கானத் தேர்வு-II/IIA கடந்த (தொகுதி-II/IIA)-இற்கான 21.05.2022 அன்று நடைபெற்றது.

இதற்கிடையே மகளிருக்கான ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. மேற்படி வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அப்பணி நிறைவுற்ற பின்னர் மேற்படித் தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக செய்தி/சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தினை www.tnpsc.gov.in மட்டுமே அணுகுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

Post Top Ad