பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.11.2022 - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, October 31, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.11.2022

 

திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம்: நீத்தார் பெருமை

குறள் : 29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

பொருள்:
குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

பழமொழி :

A good beginning is half the battle.

நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்குச் சமம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. சூரியன், மழை, மரம், ஆறு எதுவும் தனக்கென இருப்பதில்லை. அவைகளின் கனி, நீர், ஒளி, வெப்பம் அனைத்தும் பிற உயிர்களுக்கே. 

2. இயற்கையை போலவே நானும் தன்னலமின்றி வாழ முயல்வேன். 

பொன்மொழி :

ஒருதாய் தன் பிள்ளைகளை பெறுவதற்காக அழலாம்.. ஆனால் பெற்றதற்காக அழக்கூடாது...விவேகானந்தர்

பொது அறிவு :

1. சக்தி தரும் வெப்பத்தின் அலகு என்ன ?

 கலோரி . 

 2.ஆல்டிமீட்டர் எதை அளக்கிறது?




 உயரத்தை.

English words & meanings :

Optio-me-try- science of examining the eyes. Noun. கண்களை பரிசோதிக்கும் அறிவியல். பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் அரைத் தேக்கரண்டி தேனை கலந்து பருகினால் வறட்டு இருமலை தடுக்கலாம்

NMMS Q :

மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் இழை __________ஆகும். 

விடை: ரேயான்

நீதிக்கதை

கைமேல் பலன் கிடைத்தது

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவனாக இருந்தான். அரண்மணை ஜோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர்க்காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஜோதிடர் அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும் என்றார். மன்னன் சேவகனை அழைத்து காலையில் எங்கேயாவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் சொல் என்று கட்டளையிட்டான். சேவகன் தினமும் பொழுது விடியும் முன்பே தெருவிற்கு சென்றுவிடுவான். 

ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சியுடன் மன்னரிடம் சென்று விபரம் சொன்னான். இதைக் கேட்ட மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றான். அதற்குள் ஒரு காக்கை போய்விட்டது. மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு என்று உத்தரவிட்டான். 

சேவகன் சிரிக்க ஆரம்பித்தான். மன்னனுக்கு கோபம் அதிகமானது. ஏன் சிரிக்கிறாய் என்று சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி என்று உறுமினான். சேவகன் சொன்னான். மகா மன்னரே! இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா? என்றான். மன்னருக்கு அப்போதுதான் சகுனம் பார்ப்பது தவறு என்று உரைத்தது.

இன்றைய செய்திகள்

01.11.22

* எம்பிபிஎஸ், பிடிஎஸ் இட ஒதுக்கீடு பெற்ற 7,036 பேர் 13 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.


* தமிழகத்தில் புதிதாக XBB என்ற உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக GISAID என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

* இன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்க வேண்டும்: தமிழக வேளாண் துறை அழைப்பு.

* மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க பொது சுகாதாரத் துறை உத்தரவு.

* குஜராத் மோர்பி நகர் கேபிள் நடைபாலம் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.

* ஜெர்மனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்டேடிஸ்டா (Statista) நிறுவனம் அதிக ஊழியர்களைக் கொண்டிருக்கும் அமைப்புகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 29.2 லட்சம் ஊழியர்களைக் கொண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முதல் இடத்தில் உள்ளது.

* உலகில் எந்த நாட்டிலும் பிரம்மோஸ் போன்ற ஏவுகணை இல்லை. போட்டியே இல்லாத வர்த்தகம் என்பதால் ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம். இதை வாங்க 14 நாடுகள் ஆர்வமாக உள்ளதால், சுமார் ரூ.41 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானி ஆ.சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.

* டி20 உலகக் கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி- புள்ளி பட்டியலில் முன்னேற்றம்.

* சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு முதன்முறையாக சாம்பியன் பட்டம்: சாத்விக்-சிராக் ஜோடி சாதனை.

* துபாயில் மினி மாரத்தான் போட்டி; தமிழக வீராங்கனை லிடியா ஸ்டாலின் 2-வது இடம் பிடித்து சாதனை.

Today's Headlines


 * 7,036 MBBS, BDS reserved candidates to submit 13 documents: Directorate of Medical Education Notification

* A study by GISAID, an international research organization, has revealed that a newly mutated corona virus called XBB has been detected in Tamil Nadu.

 * All farmers must participate in today's Gram Sabha meeting: Tamil Nadu Agriculture Department invites.

*  Public Health Department orders to provide drinking water to public in hospitals.

 * Death toll rises to 141 in Gujarat Morbi Nagar cable footbridge accident

* Germany-based Statista has released a ranking of organizations with the most employees. India's Ministry of Defense tops the list with 29.2 lakh employees.

 * No country in the world has a missile like BrahMos. Export opportunities are high as it is a non-competitive trade. As 14 countries are interested in buying this, there is a possibility of earning more than Rs.41 thousand crores, according to scientist A. Sivathanu Pillai.

 * T20 World Cup: Australia beat Ireland with a huge win - improvement in the points table.

 * In Super 750 Badminton ,India got Championship for the first time,record created by Shathwick-Chirag pair .

*  Mini Marathon in Dubai; Tamil Nadu player Lydia Stalin achieved 2nd position.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Post Top Ad