தமிழ்நாட்டில் அனைத்து
பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் இருக்க வேண்டும் என்று
உயர்நீதிமன்றம் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. பள்ளி வாகனங்களுக்கு
பல விதிகள் இருக்கும் போது ஆட்டோ ரிக்சாகளுக்கு என்ன விதிகள் இருக்கிறது என
நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் முறையாக
பின்பற்றவும் உயர்நிதிமன்ற நீதிபதிகள் உத்தரவு அளித்துள்ளனர்.
குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோ, ரிக்சாக்களில் பெற்றோர்கள் எப்படி அனுப்புக்கின்றனர் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்து பள்ளிகளும் வாகன விதிகளை முறையாக பின்பற்ற பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளார். உடனடியாக அனைத்து பள்ளி கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்ற தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். நாகர்கோவிலை சேர்ந்த சுயம்புலிங்கம் தாக்கல் செய்த பொதுநல வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.