பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல்கட்டமாக சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இந்த ஆண்டில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து 60,000 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில் 1,12406 பேர் தகுதிபெற்றனர். இதனைத் தொடர்ந்து தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். இந்நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது.
முதல்கட்டமாக இன்று முதல் 5-ஆம் தேதி வரை சிறப்புப் பிரிவு மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
விளையாட்டுப் பிரிவினர் 1409 பேருக்கும், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் 855 பேருக்கும், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் 149 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுப் பிரிவினர் 1409 பேருக்கும், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் 855 பேருக்கும், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் 149 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் தனியார் கல்லூரி மேலாண்மை பிரிவில் இருந்து 27,476 இடங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. கடந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்ற 27 பொறியியல் கல்லூரிகள் நடப்பாண்டில் பங்கேற்கவில்லை.
அதேபோல், 8 புதிய கல்லூரிகள் கலந்தாய்வில் கலந்து கொள்ள உள்ளன. விண்ணப்பித்தவர்களில் 2,682 விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, பொதுப் பிரிவு மற்றும் தொழிற்பாடப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 8-ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதையடுத்து, பொதுப் பிரிவு மற்றும் தொழிற்பாடப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 8-ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment