தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட். சிறப்புக்கல்வி பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை இன்று (அக். 1)முதல் தொடங்குகிறது.
2021ஆம் ஆண்டுக்கான பி.எட். சிறப்புக்கல்வி பட்டப்படிப்புக்கான இணையவழி விண்ணப்பம் மற்றும் விளக்கக் கையேடு இன்று முதல் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
பி.எட். சிறப்புக் கல்வி படிப்பு - பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு மற்றும் அறிதிறன் குறைபாடு ஆகிய பிரிவுகளிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வழங்கப்படுகிறது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டப்பிடிப்பு அல்லது பட்ட மேற்படிப்பைப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் .
விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி : அக்டோபர் 31. 044 2430 6617, 98416 85515 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அதே போல் www.tnou.ac.in என்ற இணையத்திலும் தகவல்களை பெறலாம்.
0 Comments:
Post a Comment