துணை மருத்துவப் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடக்கம் !


தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங்(BSc Nursing), பி.ஃபார்ம்(B.Pharm.), பி.எஸ்சி ரேடியோ கிராபி, ரேடியோ தெரபி, அனஸ்தீசியா, கார்டியாக் உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இந்த படிப்புகளுக்காக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது.

இப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 15ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 17ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

அதாவது, விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்த பின்னர், அதை நகல் எடுத்து உரிய சான்றிதழ்களுடன் வரும் 17ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வுக் குழு செயலாளருக்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive