மதுரை எய்ம்ஸ் பணிக்கு டிசம்பரில் ஒப்பந்தம் கையெழுத்து:


 மதுரை": ''மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு டிச., அல்லது ஜனவரியில் இந்தியா, ஜப்பான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும்,'' என, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர் கூறியதாவது:

தமிழகத்தில் தினசரி, 80 ஆயிரம் முதல், 90 ஆயிரம் வரை சளி மாதிரிகள் சோதிக்கப்படுகின்றன. பிற மாநிலங்களை விட குறைவான பாதிப்பே உள்ளது.கேரளா மற்றும் சில வடமாநிலங்களில் பண்டிகை கொண்டாட்டங்களால் கொரோனா அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் பண்டிகை, மழை, குளிர் காலம் துவங்குகிறது. இக்காலத்தில் கண்டிப்பாக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது, கைகழுவுவதில் அஜாக்கிரதை வேண்டாம். இதை வாழ்க்கை முறையோடு இன்னும் சில காலத்திற்கு பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான இறுதி திட்டமதிப்பீடு தயாரிக்கும் பணியில் ‛ஜிக்கா' குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.டிச., அல்லது ஜன.,ல் மத்திய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்வர். உடனடியாக பணிகள் துவங்கிவிடும். மாநில அரசு வசம் எந்த பணிகளும் நிலுவையில் இல்லை.இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் வினய், டீன் சங்குமணி, சுகாதார துணை இயக்குனர் அர்ஜூன்குமார் உடனிருந்தனர்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive