இன்ஜினியரிங் பொதுப்பிரிவு கவுன்சிலிங் நாளை துவக்கம்


 


இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையில், சிறப்பு ஒதுக்கீட்டு கவுன்சிலிங் முடிந்தது. நாளை பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவுக்கான கவுன்சிலிங் துவங்க உள்ளது. இதில், 1.10 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, 'ஆன்லைன்' கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், அக்டோபர், 1ல் துவங்கியது. முதலில், சிறப்பு பிரிவு மாணவர் கவுன்சிலிங் நடந்தது. இவர்களுக்கான ஒதுக்கீடு நேற்று முடிந்தது. 



பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங், நாளை துவங்க உள்ளது. இதில், 1.10 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.நான்கு கட்டங்களாக, பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. எந்தெந்த தரவரிசையில் உள்ள மாணவர்கள், எப்போது கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என்ற விபரம், இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியின் இணையதளத்தில், இன்று வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


மொத்தம், 1.60 லட்சம் இடங்களுக்கு, கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. மாணவர்கள் தங்கள் விருப்பங்களை, ஆன்லைனில் பதிவு செய்து, ஆன்லைனிலேயே இடங்களை பெறும் வகையில், கவுன் சிலிங் கமிட்டியின் இணையதளத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சிறப்பு ஒதுக்கீட்டு கவுன்சிலிங்கை பொறுத்தவரை, மாணவர்கள் பெரும்பாலும், கணினி சார்ந்த பிரிவுகளையே தேர்வு செய்துள்ளனர்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive