தனியார் பள்ளிகளில், இரண்டாம் கட்ட, இலவசமாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மை அந்தஸ்து இல்லாத தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், அரசின் சார்பில், இலவச மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள், இன்றுடன் முடிகின்றன.
இதையடுத்து, இன்னும் நிரப்பப்படாமல்உள்ள காலி இடங்களுக்கு,இரண்டாம் கட்ட சேர்க்கையை, பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.இதற்கான அரசாணையை, பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார், நேற்று பிறப்பித்தார்.
அதன் விபரம்:வரும், 10ம் தேதி, அனைத்து பள்ளிகளிலும் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். அக்., 12 முதல் நவ., 7 வரை, 'ஆன்லைன்' வழியில் விண்ணப்பங்கள் பெறப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் பெயர், நவ., 11ல் வெளியிடப்படும். காலி இடங்களை விட, கூடுதல் விண்ணப்பங்கள் இருந்தால், அந்தந்த பள்ளிகளில் குலுக்கல் நடத்தப்படும். நவ., 15ல், மாணவர்சேர்க்கை முடியும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment