Atsl 2020 சோதனைத் தேர்வு வழிகாட்டுதல்கள் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, January 23, 2020

Atsl 2020 சோதனைத் தேர்வு வழிகாட்டுதல்கள்

Atsl 2020 சோதனைத் தேர்வு வழிகாட்டுதல்கள்
* ATSL 2020 தேர்வு வினாத்தாளின் புறவயத் தன்மை , தேர்வை மாணவர் அணுகும் முறை ஆகியவற்றைப் பரிசோதிப்பதற்காக Pilot தேர்வு கடந்த மாதம் 08 . 12 . 2019 அன்று மாநிலம் முழுவதும் 8 மாவட்டங்களில் 48 பள்ளிகளில் நடத்தப்பட்டது .

* Pilot தேர்வில் மாணவர் பங்கேற்பும் , தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் ஈடுபாடும் பாராட்டத் தக்க வகையில் இருந்தது . இதனைத் தொடர்ந்து - Pilot தேர்வில் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகளில் உள்ள கணினி மற்றும் தொழில்நுட்ப வளங்களின் முழு திறனையும் சோதிக்க சோதனைத் தேர்வு 24 . 01 . 2020 ஒரு நாள் மட்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .

* இதற்காகப் பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களால் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது .

* இதன் அடிப்படையில் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளைச் சரிபார்க்கும் வகையிலும் , Log in செய்தல் , Internet Speed மற்றும் இதரத் தொழில்நுட்ப வளங்களைச் சோதிக்கும் வகையிலும் சோதனைத் தேர்வு நடைபெற உள்ளது .

* இந்த சோதனைத் தேர்வு வரும் 24 . 01 . 2020 அன்று தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும் . தேர்வு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் . அனைத்துப் பள்ளிகளிலும் சரியாக 2 மணிக்குக்குத் தேர்வு தொடங்கும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் .

* அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து கணினி வளங்களையும் பயன்படுத்தும் வகையில் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு மாணவர்களை தேவைக்கேற்ப அமரவைத்து இச்சோதனைத் தேர்வை நடத்த வேண்டும் .

* தம் பள்ளியில் உள்ள கணினி / மடிக்கணினி I Tab எண்ணிக்கைகு ஏற்ப மாணவ மாணவியரை இச்சோதனைத் தேர்வில் ஈடுபடுத்த வேண்டும் . தேர்வு நேரம் 90 நிமிடம் முடியும் வரை அச்சோதனைத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் .

Post Top Ad