பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி - முன்திட்ட விழிப்புணர்வு பேரணி 21.01.2020 அன்று நடத்த Ceo உத்தரவு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, January 19, 2020

பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி - முன்திட்ட விழிப்புணர்வு பேரணி 21.01.2020 அன்று நடத்த Ceo உத்தரவு.

பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி - முன்திட்ட விழிப்புணர்வு பேரணி 21.01.2020 அன்று நடத்த Ceo உத்தரவு.


பள்ளி மேலாண்மைக் குழு - விழிப்புணர்வு பேரணி 
2019 - 20 ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெறவுள்ளது . எனவே இப்பயிற்சி குறித்த விழிப்புணர்வு பேரணி ஒன்றினை மேற்கொள்ள சார்ந்த வட்டார கல்வி அலுவலர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ( பொ ) , வட்டார பள்ளி மேலாண்மைக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

குறிப்பு -

1 . விழிப்புணர்வு பேரணி நடைபெறும் நாள் - 21 . 01 . 2020 , அன்று காலை 9 . 00 மணியளவில்

2 . விழிப்புணர்வு பேரணி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள மாணவ மாணவியர்களைக் கொண்டு நடைபெறுதல் வேண்டும் .

3 . மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தும் , பொது மக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பேரணி மேற்கொள்ளுதல் வேண்டும் .

4 . தேசிய நெடுஞ்சாலை , மாநில சாலைகள் போன்ற போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி நடத்துவதை தவிர்த்தல் வேண்டும் .

5 . குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி மேற்கொள்ளுதல் வேண்டும் .

Post Top Ad