517 பகுதி நேர துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல் சார்ந்த அரசாணை வெளியீடு


Click here to download pdf

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்களால், கடந்த 21.03.2020 அன்று சட்டமன்றத்தில் 2020-21 ஆம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, புதிய அறிவிப்புகளில், அறிவிப்பு எமன். 15 பின்வருமாறு அறிவிக்கப்பட்டது.

விடுதிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் 1000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர துப்புரவு பணியாளர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, சிறப்பு காலமுறை ஊதியம் (திருத்தியமைக்கப்பட்ட குறைந்தபட்சம் ரூ.4100, அதிகபட்சம் ரூ.12500 ) வழங்கப்படும். இதனால் மிடுதிகாம் நிலை 2 பணிபுரியும் 718 பகுதிநேர துப்புரவு பணியாளர்கள் பயன் பெறுவர். இதற்காக 2 கோடியே 12 1 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

2 மேயே படித்தப்பட்ட கடிதத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 1354 விடுதிகள் (1099 பள்ளி விடுதிகள் - 255 கல்லூரி விடுதிகள்) தற்போது செயல்பட்டு வருகின்றன என்றும் விடுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கும் பொருட்டும், மாணவ, மாணவிகளின் கொதாரத்தைக் கருத்தில் கொண்டும் 100 மானாவ, மானாவியர்களுக்கு மேல் தங்கிப் பயிலும் 65 விடுதிகளுக்கு சிறப்பு காலமுறை சாதியத்தில் முழுநேர துப்புரவாளர்களை நியமனம் செய்தும், 100 மாணாய பானாவியர்களுக்கு குறைவாக உள்ள விடுதிகளில் ரூ.2000/ தொகுப்பூதிய அடிப்படையில் பகுதிநேர துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்தும் ஆனைாயிடப்பட்டது என்றும் பகுதிநேர துப்புரவு பணியாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியத்தை ரூ.2000-த்திலிருந்து ரூ.3000/ ஆக உயர்த்தப்பட்டது என்றும் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் தெரிவித்துள்ளார்.

PG TRB -Computer Instructors 2019 - Revised Provisional Selection list


PG TRB -Computer Instructors 2019 - Revised Provisional Selection list


கணினி பயிற்றுநர்களுக்கான கணினிஅடிப்படையிலான தேர்வு 23.06.2019 முதல் 27.06.2019 வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தபட்டு தேர்வு முடிவுகள் 25.11.2019 அன்று வெளியிடபட்டது .  1:2 விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு 08.01.2020 அன்று நடைபெற்று தற்காலிக தேர்வு பட்டியல் 11.01.2020 அன்று வெளியிடபட்டது .  இதனை தொடர்ந்து தேர்வு பட்டியல் தொடர்பாக வழக்கு தொடுக்கபட்டது.
 
17.12.2020 நீதி மன்ற உத்தரவின்படி மூன்று தேர்வு மையம் ((1) கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு, நமக்கல் மாவட்டம் (2) கும்பகோணம் அண்ணை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி , தஞ்சாவூர் மாவட்டம். (3) கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்.) தேர்வு எழுதியவர்களை தவிர மற்ற பணிநாடுவோர் விபரம் வெளியிட்ட உத்தரவின் அடிப்படையில்   திருத்தப்பட்ட தற்காலிக  தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் 28.12.2020 அன்று வெளியிட்டுள்ளது

PG TRB Computer Science Revised Provisional Selection List Pdf 


PG TRB Computer Science Press News



BT-PANEL - Individual Form

BT-PANEL - Individual Form

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் நாளை தொடக்கம்


அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் கடந்த 2018-2019ம் ஆண்டில் ஏற்பட்ட வேதியியல் பாடத்துக்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டு தற்போது அதற்கான தெரிவுப் பட்டியல் பள்ளிக்கல்வித்துறைக்கு வந்துள்ளது. அவர்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்க ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நாளை தொடங்க உள்ளது. இதையடுத்து, இறத்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

* மேற்கண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் அசல் சான்றுகளின் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டும். தகுதியற்றவர்களின் பட்டியல்கள் தயாரித்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும்.

* கவுன்சலிங் மூலம் பணி நியமன ஆணைகள் பெற்றவர்கள் ஜனவரி 4ம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து பணியில் சேர வேண்டும்.

* தமிழ் வழி இட ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளி இடஒதுக்கீடு, இன சுழற்சி அடிப்படையிலான இட ஒதுக்கீடு, ஆகியவற்றை கவுன்சலிங்கின்போது சரிபார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி மன்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட பணிகளை கவனித்தல் குறித்து - உரிய அறிவுரைகள் வழங்குதல் - சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டால் பின்வருமாறு செயல்பட வேண்டும் . 

1. நீதிமன்றத்திலிருந்து வழக்கு சார்ந்த அறிவிப்பு வரப்பெற்றவுடன் அரசு வழக்கறிஞர்களை அணுகி இவ்வழக்கை நடத்துவதற்கு கடிதம் சமர்ப்பித்தல் வேண்டும் . 

2. நீதிமன்றத்தில் இருந்து வரப்பெற்ற அறிவிப்பு ( Notice ) வாதியின் உரை ( Affidavit ) நீதிமன்ற தடையாணை ( Stay order ) முதலானவற்றின் நகல்கள் தேவையான அளவிற்கு எடுக்கவேண்டும் . வழக்கு தொடுக்கப்பட்ட நிகழ்ச்சி பற்றிய வழக்கின் சுருக்கம் ( History of the Case ) தயாரித்து சமர்ப்பித்தல் வேண்டும் . 

3. ஒரு வழக்கில் பல அலுவலர்கள் சேர்க்கப்பட்டிருப்பின் அதில் எந்த அலுவலரின் ஆணை / செயல்முறைப்பற்றி வழக்காடப்படுகிறதோ , அவர் இப்பணியை செய்ய வேண்டும் . நீதிமன்றத்திலிருந்து தகவல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் இதனைச் செய்யவேண்டும் . 

4. ஒரு வழக்கில் அரசு செயலாளர் , இயக்குநர் , இணைஇயக்குநர்கள் , பிரதிவாதியாக சேர்க்கப்பட்டிருப்பினும் , வழக்கு தொடர்ந்த நபர் எந்தெந்த மாவட்டங்களை சார்ந்தவர்களோ அம்மாவட்ட அலுவலர்கள் வழக்கு சார்ந்த விவரங்களை நீதிமன்றத்திற்கு உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் .

 5. வழக்கு சார்ந்து அரசு வழக்குறைஞருடன் கடிதப் போக்குவரத்து மட்டுமின்றி நேரில் சென்று அவ்வப்போது வழக்குகள் தொடர்பாக நினைவூட்டல் / விவரங்கள் அளித்தல் வேண்டும் .

Pdf link

Touch Here

கூகுள், ஆப்பிள் நெட்பிளிக்ஸ் நிறுவனங்களில் வேலை கிடைக்க திறமை இருந்தால் போதும், பட்டப்படிப்பு அவசியமில்லை - லிங்க்டுஇன் ஆய்வு



ஆப்பிள், கூகுள், நெட்பிளிக்ஸ், சீமென்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் பணி செய்வதற்கு கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு அவசியமில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. மேலும் இது தொழில்துறையின் விதிமுறையாகவே விரைவில் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.


அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தில் கடந்த ஆண்டு பணியமர்த்தப்பட்ட 50 சதவீதம் பேர், 4 ஆண்டு கல்லூரி பட்டப்படிப்பு தகுதி இல்லாதவர்களே என்று அதன் சிஇஒ டிம்குக் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். வேலை செய்வதற்கு தேவையான திறனை பெரும்பாலான கல்லூரிகள் கற்றுத் தருவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.


எலக்ட்ரானிக் டெக்னீசியன், மெக்கானிக்கல் டிசைனர், மார்கெட்டிங் பிரதிநிதிகள் போன்ற வேலைகளில் பட்டதாரி அல்லாதவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது லிங்க்டுஇன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பழைய இரும்புக்கடையில் இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்த மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் .


 


#BREAKING | மயிலாடுதுறையில் பழைய இரும்புக்கடையில் இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்த மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் சஸ்பெண்ட் 


* சுமார் 2 டன் புத்தகங்களை எடைக்கு வாங்கிய பழைய இரும்புக்கடை உரிமையாளர் பெருமாளும் கைது.

பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு


 பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு  

பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம். -தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுக்குழுவில் முடிவு பொதுக்குழு கூட்டம் 

திருச்சியில் இன்று நடைபெற்றது .

 

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்கத்தின் மாநில முன்னாள் துணைத் தலைவர் என்.குமாரவேல், செய்தியாளர்களிடம் கூறியது :

 

''எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசு ஊழியர்களின் நலனுக்காகப் போராடும் பாரம்பரியம் கொண்டது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம். ஆனால், அண்மைக்காலமாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 

தலைமை, அந்தப் பாதையில் இருந்து விலகி, அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து, ஊழியர் விரோதப் போக்குடன் செயல்பட்டு வருகிறது.

 

எனவே, சங்க விதிகள் மற்றும் பதிவுச் சட்டங்களுக்கு மாறாக 2019, செப்.28, 29 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெற்ற சங்கத்தின் மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட மாநில நிர்வாகிகள், திருச்சியில் இன்று கூடியுள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் நீக்கப்பட்டு, எஸ்.தமிழ்ச்செல்வியைத் தலைவராகக் கொண்ட புதிய மாநில நிர்வாகிகள் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு போனஸ் ரூ.7,000, ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு கருணைத் தொகை ஆகியவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, டிச.30-ம் தேதி மாநிலம்

முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தவும், அரசுகளின் ஊழியர் விரோத நடவடிக்கைகளை விளக்கி ஜன.4-ம் தேதி முதல் ஊழியர் சந்திப்பு இயக்கம் நடத்தவும் மற்றும் ஜன.22-ம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தலைமைச் செயலகம் முன் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தவும் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த 10 ஆண்டுகளாக இந்த அதிமுக அரசு, அரசு ஊழியர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அகவிலைப்படி, சரண்டர் ஆகியவற்றை முடக்கியது, ஜிபிஎப் வட்டியைக் குறைத்தது, நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்தவாறு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய மறுப்பது ஆகியவற்றை இதற்கு அடையாளமாகக் கூறலாம்.

 
எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்த்து நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், பிப். 10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

 

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின்போது அரசு ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய்யான குற்ற வழக்குகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு

வழங்கப்பட்ட குற்றக் குறிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

 

ஆனால், இதுவரை இல்லாத வகையில், ஊழியர்களைப் பழிவாங்கும் அரசாக இந்த அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. எனவேதான், வேறு வழியின்றி பிப்.10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்''.

 

இவ்வாறு குமாரவேல் தெரிவித்தார்.

Wanted Asst Proffessor - Salary As per UGC Norms

Wanted Asst Proffessor - Salary As per UGC Norms

SRI G.V.G VISALAKSHI COLLEGE FOR WOMEN- AUTONOMOUS- WANTED ASST PROFFESSOR- SHARE TO ALL



டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடியும் ஊரடங்கு ! முதலமைச்சர் ஆலோசனை :


அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

முதலில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது அந்த தாக்கம் குறைந்து வருகிறது.இதனைக்கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டன.குறிப்பாக ஒவ்வொரு மாதமும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர் குழு மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கில் என்ன தளர்வுகள் அளிப்பது என்பது குறித்த அறிவிப்பும் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். கடந்த சில நாட்களாக உருமாறி உள்ள புதிய வகையான கொரோனா வைரஸ் எனவும், இது இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் இந்த வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறதாக செய்திகள் வெளியாகி வருகிறது.இதனால் உலக நாடுகள் மீண்டும் பீதியடைந்துள்ளன. வைரஸ் பரவல் இருப்பதால் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசு மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது பற்றியும், தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு, ஊரடங்கு தளர்வு குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

காவி உடையில் திருவள்ளுவர்" எந்த உள்நோக்கமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் :

"

 


கல்வித் தொலைக்காட்சியில் காவி நிறத்தில் திருவள்ளுவர் படம் தவறுதலாகவே ஒளிபரப்பானது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கல்வி தொலைக்காட்சியில் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் ஒளிபரப்பில் காவி உடையில் திருவள்ளுவர் ஒளிபரப்பானதால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. திருவள்ளுவரின் உடையில் காவி சாயம் இருந்ததற்கு முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, டிடிவி தினகரன், தி.க தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கல்வி தொலைக்காட்சியில் காவி உடையில் ஒளிபரப்பான திருவள்ளுவர் புகைப்படம் தொடர்பாக இன்று பள்ளிகல்வித்துறை ஆலோசனை நடத்துகிறது. அத்துடன் சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கல்வித் தொலைக்காட்சியில் காவி நிறத்தில் திருவள்ளுவர் படம் வந்ததற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அது தவறுதலாகவே ஒளிபரப்பானது. அரசின் கவனத்திற்கு வந்த பிறகு உடனடியாக காவி நிறம் உடை மாற்றப்பட்டுவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும்’ - ஸ்டாலின்



 திமுக ஆட்சி மலரும்போது ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும்’ - ஸ்டாலின் சென்னை: திமுக ஆட்சி மலரும் போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்த கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார். தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பணிபுரிந்த காலத்தில் உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.


 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பணிபுரிந்த காலத்தில் உயிரிழந்த பட்டதாரி ஆசிரியர் பெஞ்சமின், சுமா, ஆனந்தன், சிலம்புச்செல்வி ஆகியோரின் குடும்பத்திற்கான நிதியுதவியை தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் வழங்கினார் நிதியுதவி வழங்கும்போது.. இந்த நிகச்சியில் பேசிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன், ”நடைமுறையில் இருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். அவர்களுக்கு இதுவரை எவ்வித ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை.


 

ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய திமுக, மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கும்போது புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். அதன் பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின், ”மாநில தலைவர் தியாகராஜன் பேசும்போது முன்வைத்த கோரிக்கையை திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வோம். அது சார்ந்து அமைக்கப்பட்ட குழு அதற்காக தீவிரமாக பணியாற்றிவருகிறது. தேர்தல் அறிக்கையில் வருவதை முன்கூட்டியே சொல்வது ஏற்புடையதாக இருக்காது.


 

உங்களுக்கு திமுக தேர்தல் அறிக்கையில் நல்லதை அறிவிக்கும் என்ற நம்பிக்கை இருக்கும். அது போலவே உங்களை நம்பித்தான் நாங்களும் இருக்கிறோம். திமுக ஆட்சி மலரும்போது உங்களுடைய கோரிக்கைகள், குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்த கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும்” என்று உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதுமிருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

தற்போது RTI மூலம் தகவல்களை பெற இணைய வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.




தற்போதுRTI மூலம் தகவல்களை பெறஇணையவழியாகவும்விண்ணப்பிக்கலாம்.

மிகவும் எளிமையானமுறையில்கொடுக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO ONLINE APPLY LINK

FLASH NEWS- TN -EMIS NEW UPDATE AVAILABLE NOW- LINK AVAIL

FLASH NEWS- TN -EMIS NEW UPDATE AVAILABLE NOW- LINK AVAIL

 

'
SHARE TO ALL -UPDATE LINK AVAIL BELOW LINK


BREAKING | சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சந்திப்பு .


கடந்தாண்டு போராட்டம் நடத்திய அரசுஊழியர்கள் 5068 பேர் மீதான ஒழுங்குநடவடிக்கையை ரத்து செய்யக் கோரிஅனைத்து கட்சித் தலைவர்களைசந்தித்து ஆதரவு திரட்ட ஜாக்டோ ஜியோமுடிவு.






700 ரூபாய் சிலிண்டரை வெறும் ரூ.200க்கு பெறலாம்! எப்படி தெரியுமா?


பேடிஎம் தற்போது வழங்கி வரும் கேஷ்பேக் ஆஃபர் மூலம பொதுமக்கள் சிலிண்டரை வெறும் 200 ரூபாய்க்கு பெற முடியும்.

தற்போது வீட்டுக்கான கேஸ் சிலிண்டர் 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பேடிஎம் விழாக்கால சலுகையாக பல்வேறு கேஷ் பேக் ஆஃபர்களை அறிவித்துள்ளது.

அந்த வகையில் பேடிஎம் மூலம் சிலிண்டர் புக் செய்தால் 500 ரூபாய் வரை கேஷ் பேக் கிடைக்கும். இந்த சலுகை முதல்முறை பேடிஎம்மில் சிலிண்டர் புக் செய்பவர்களுக்கு பொருந்தும்.

முதல்முறை பேடிஎம் மூலம் சிலிண்டர் புக் செய்யும் வாடிக்கையாளர்கள் FIRSTLPG என்ற குறியீட்டை உள்ளிட வேண்டும். அப்படி செய்யும் போது 500 ரூபாய் கேஷ் பேக் பெற முடியும். இந்த சலுகை வரும் 31ஆம் தேதி வரை இருக்கிறது.

பேடிஎம் செயலியி5ல் ரீசார்ஜ் & பே பில்ஸ் என்ற பகுதிக்கு சென்று கேஸ் சிலிண்டர் புக் செய்து இந்த அரிய வாய்ப்பினை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Source:newstm.in

Breaking News: இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயம் _ அமைச்சர் செங்கோட்டையன்


 


" நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு உண்டு " நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் ; முதலமைச்சருடன் கலந்து பேசி பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive