9th Science - Book Back Answers - Unit 5 - Tamil Medium Guides


 


    9th Science - Book Back Answers - Unit 5 - Tamil Medium

    Tamil Nadu Board 9th Standard  Science - Unit 5: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 5 – from the Tamil Nadu State Board 9th Standard  Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 5 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 9 students! Prepare well and aim for top scores. Thank you!

    அலகு 5: காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்

    I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

    1.பின்வருவனவற்றுள் எது மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது.
    அ)மோட்டார்
    ஆ)மின்கலன்
    இ)மின்னியற்றி
    ஈ)சாவி
    விடைகுறிப்பு:
    அ)மோட்டார்

    2.கீழ்க்கண்ட எவற்றில் மின்மாற்றி வேலை செய்கிறது?
    அ)AC இல் மட்டும்
    ஆ)DC இல் மட்டும்
    இ)AC மற்றும் DC
    விடைகுறிப்பு:
    அ)AC இல் மட்டும்

    3.மின்னோட்டத்தை AC மின்னியற்றியின்சுருளிலிருந்து வெளிச்சுற்றுக்கு எடுத்துச்செல்லும் மின்னியற்றியின் பகுதி
    அ)புலக் காந்தம்
    ஆ)பிளவு வளையங்கள்
    இ)தூரிகைகள்
    ஈ)நழுவு வளையங்கள்
    விடைகுறிப்பு:
    இ)தூரிகைகள்

    4.காந்தப் பாய அடர்த்தியின் அலகு
    அ)வெபர்
    ஆ)வெபர் / மீட்டர்
    இ) வெபர்/ மீட்டர்2
    ஈ) வெபர் மீட்டர்2
    விடைகுறிப்பு:
    இ) வெபர்/ மீட்டர்2

    II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

    1.காந்தப் புலத் தூண்ட லின் SI அலகு ___________ ஆகும்
    விடைகுறிப்பு:
    டெஸ்லா

    2. உயர் மாறுதிசை மின்னோட்டத்தை குறைந்த மாறுதிசை மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகள்  ___________ ஆகும்.
    விடைகுறிப்பு:
     இறக்கு மின்மாற்றி

    3.மின் மோட்டார் ___________ஐ மாற்றுகிறது. 
    விடைகுறிப்பு:
    மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக

    4.மின்னோட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு கருவி __________ஆகும்.
    விடைகுறிப்பு:
    மின்னியற்றி

    III.பொருத்துக.   

    1. காந்தப் பொருள்
     அயர்ஸ்டெட்
    2. காந்தமல்லாத பொருள்
    இரும்பு
    3. மின்னோட்டம் மற்றும் காந்தவியல்
    தூண்டல்
    4. மின்காந்தத் தூண்டல்
    மரம்
    5. மின்னியற்றி
    ஃபாரடே
    விடைகுறிப்பு:
    1. காந்தப் பொருள்
                                       இரும்பு

    2. காந்தமல்லாத பொருள்

    மரம்
    3. மின்னோட்டம் மற்றும் காந்தவியல்
    அயர்ஸ்டெட்
    4. மின்காந்தத் தூண்டல்
    ஃபாரடே
    5. மின்னியற்றி
    தூண்டல்

    IV.சரியா? தவறா?. தவறெனில் திருத்துக.

    1.ஒரு மின்னியற்றி இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது. 
    விடைகுறிப்பு:
    சரி
    2.காந்தப் புலக் கோடுகள் எப்போதும் ஒன்றையொன்று விலக்குகின்றன; வெட்டிக் கொள்வதில்லை. 
    விடைகுறிப்பு:
    சரி
    3.ஃப்ளெமிங்கின் இடது கை விதி மின்னியற்றி விதி எனவும் அழைக்கப்படுகிறது.
     விடைகுறிப்பு:
    தவறு 
    ஃப்ளெமிங்கின் வலது கை விதி மின்னியற்றி விதி எனவும் அழைக்கப்படுகிறது.
    4.சுருளின் பரப்பைக் குறைப்பதன் மூலம் மின் மோட்டாரின் சுழற்சி வேகத்தை அதிகரிக்கலாம். 
    விடைகுறிப்பு:
    தவறு
    சுருளின் பரப்பைக் அதிகரிப்பதன் மூலம் மின் மோட்டாரின் சுழற்சி வேகத்தை அதிகரிக்கலாம்.
    5.ஒரு மின்மாற்றி நேர்திசை மின்னோட்டத்தை மாற்றுகிறது. 
    விடைகுறிப்பு:
    தவறு 
    ஒரு மின்மாற்றி மாறுதிசை மின்னோட்டத்தை மாற்றுகிறது.
    6.ஒரு இறக்கு மின்மாற்றியில் முதன்மைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கை துணைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. 
    விடைகுறிப்பு:
    சரி

    V. சுருக்கமாக விடையளி.

    1.ஃப்ளெமிங்கின் இடக்கை விதியைக் கூறு
    • இடது கையின் பெருவிரல், ஆள்காட்டிவிரல், நடு விரல் ஆகிய மூன்றும் ஒன்றுக் கொன்று செங்குத்தாக இருக்கும்போது,
    • நடுவிரல்- மின்னோட்டத்தின் திசையையும்,(ஆள்காட்டி)சுட்டுவிரல் - ந்தப்பு புலத்தின் திசையையும் குறித்தால், கட்டை(பெரு)விரல் - கடத்தியின் திசையைக் குறிக்கிறது
    2.காந்தப் பாய அடர்த்தி வரையறு.
    •  காந்தவிசைக் கோடுகளுக்குச் செங்குத்தாக அமைந்த ஓரலகு பரப்பைக் கடந்து செல்லும் காந்தவிசைக் கோடுகளின் எண்ணிக்கை காந்தப்பாய அடர்த்தி ஆகும். 
    • அலகு  wb/ mஆகும்.
    3.மின் மோட்டாரின் முக்கியப் பகுதிகளைப் பட்டியலிடுக.
    • நிலைக்காந்தம்
    •  கம்பிச்சுருள் 
    • கார்பன் தூரிகை 
    • திசைமாற்றி.
    4.AC மின்னியற்றியின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.

    NS - இரு துருவங்கள் நிலைக் காந்தம்
    ABCD - செவ்வக வடிவ கம்பிச்சுருள்
    S.,S, - நழுவு வளையங்கள்
    B., B, - தூரிகைகள்.

    5.DC யை விட AC ன் சிறப்பியல்புகளைக் கூறுக.
    • அதிக தொலைவுகளுக்கு ACயை ஏற்று மின்மாற்றிகளை-பயன்படுத்தி கொண்டு செல்லாம். ஆற்றல் இழப்பு மிகக்குறைவு.
    • DCயை அவ்வாறு அனுப்ப இயலாது.
    • ACயை எளிதில் DCயை மாற்ற இயலும்.
    • DCயை உருவாக்குவதை விட AC யை உருவாக்குதல் எளிது.
    • பல வகையில் பயன்படும் மின்காந்தத் தூண்டலை DCயை AC-னால் உருவாக்க முடியும்.
    (குறிப்பு AC- மாறுதிசை மின்னோட்டம், DC - நேர்திசை மின்னோட்டம்)
    6.ஏற்று மின்மாற்றிக்கும் இறக்கு மின்மாற்றிக்குமான வேறுபாடுகளைத் தருக.
    ஏற்று மின் மாற்றி:
    • குறைந்த மாறுதிசை மின்னழுத்தத்தை உயர் மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றுகிறது.   (ie) (Vs >Vp)
    • இதில் முதன்மைச்சுருளில் உள்ள கம்பிச்சுருள்களின் எண்ணிக்கையை விட துணைச் சுருளில் உள்ள கம்பிச்சுருள்களின் எண்ணிக்கை அதிகம்.
    இறக்கு மின் மாற்றி:
    • உயர் மாறுதிசை மின்னழுத்தத்தை குறைந்த மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றுகிறது. 
    •  (ie) (Vs < vp)
    • முதன்மைச் சுருளிலுள்ள கம்பிச் கம்பிச்சுருள்களின் எண்ணிக்கையை விட துணைச் சுருளில் உள்ள கம்பிச்சுருள்களின் எண்ணிக்கை குறைவு.
    • (ie) (Ns <Np
    7.ஒருவானொலிப்பெட்டியில், அது வீட்டின் முதன்மைச்சுற்றிலிருந்து மின்சாரம் ஏற்று இயங்கும் வண்ணம் ஒரு மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ளது. இது ஏற்று மின்மாற்றியா அல்லது இறக்கு மின்மாற்றியா?
    •  வானொலிப் பெட்டியில் இறக்கு மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ளது திருத்தப்பட்ட மாறு திசை மின்னோட்டம் மின்கல அடுக்கின் மின்னோட்டத்தை சமன் செய்கிறது.
    •  எனவே வானொலி வீட்டின் முதன்மைச் சுற்று மற்றும் மின்கல அடுக்கின் மூலம் இயங் குகிறது.
    8.ஃபாரடேயின் மின்காந்தத்தூண்டல் விதிகளைத் தருக.
    • கடத்தியுடன் இணைந்த காந்தப்பாயம் மாறும்போது, கடத்தி வழியாக ஒரு மின்னியக்கு விசையை (EMF.) உற்பத்தி செய்யமுடியும்.
    • ஒரு மூடிய சுற்றுடன் இணைக்கப்பட்ட காந்தப்பாயத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக தூண்டப்பட்ட மின்னியக்கு விசை உருவாகும் நிகழ்வு மின்காந்தத் தூண்டல் எனப்படும

    VI. விரிவாக விடையளி.

    1.DCமோட்டாரின் தத்துவம், அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதம் ஆகியவற்றை விளக்கவும்.
    மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றும் கருவி மின்மோட்டார் ஆகும்.
       
    தத்துவம் :
    காந்தப்புலத்தில் வைக்கப்படும் ஒரு கடத்தியில் ஒரு விசையானது செயல்பட்டு அக்கடத்தியை இயங்கச் செய்கிறது.
    அமைப்பு:
    • ABCD என்ற கம்பிச்சுருள் நிலை காந்தத்தின் இரு துருவங்களுக்கு நடுவே வைக்கப்பட்டுள்ளது.
    • கம்பிச்சுருளின் முனைகள் பிளவு வளைய திசைமாற்றியில் பொருத்த ப்பட்டுள்ளது.
    • மின் கடத்தாப் பொருள்களாலான பிளவு வளையத் திசைமாற்றியின் உட்பகுதி அச்சில் இணைக்கப்பட்டுள்ளது.
    • கார்பன் தூரிகைகள் X,Yபிளவு வளைய திசைமாற்றியில் வெளிப்புறச் சுற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
    • காந்தப்புலத்திலிருந்து பெறப்படும் மின்னோட்டம் தூரிகை வழியாக கம்பிச்சுருள் AB CDக்குள் சென்று தூரிகை Y வழியாக மின்கல அடுக்கினை அடைகிறது.
    செயல்படும் விதம்:
    • கடத்தி AB யிலுள்ள மின்னோட்டம் A யிலிருந்து B க்குச் செல்கிறது.
    • கடத்தி CD யில் உள்ள மின்னோட்டம் C யிலிருந்து D க்குச் செல்கிறது.
    • இதற்கு எதிர் திசையில் கடத்திப்பிரிவின் AB மின்னோட்டம் செல்கிறது.
    • ஃபிளெமிங் இடக்கை விதிப்படி ABCD என்ற பிரிவுகளில் மின்னோட்டம் எதி ரெதிர் திசைகளில் செல்லும்போது அதன் இயக்கமும் எதிரெதில் திசையில் அமையும்.
    • கம்பிச் சுருளின் இரு முனைகளிலும் விசைஎதிரெதிர்திசையில்அமைவதால்
    • அவை சுழல்கின்றன.
    • மின்னோட்டம் ABCD வழியாக இருந்தால் கம்பிச்சுருள் முதலில் கடிகார திசையிலும், பின் எதிர் திசையிலும் சுழலும்.
    • கம்பிச் சுருள் ஒரே திசையில் இயங்க வேண்டுமானால் மின்னோட்டமானது சுழற்சியி ன் முதல் பாதியில் ABCD யிலும் பின் பாதியில் DCBA வழியாகவும் பாய வேண்டும்.
    • மின்னோட்டத்தின் திசையை மாற்ற பிளவு வளைய திசைமாற்றி பயன்படுத்தப்படுகிறது.
    • பிளவு வளையத்தில் உள்ள இடைவெளியானது முனையம் X, Y உடன் இணைந்திருக்கும்போது சுருளில் மின்னோட்டம் இருப்பதில்லை.
    • ஆனால் சுருள் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து இரு பிளவு வளையங்களில் ஏதாவது ஒ ன்று கார்பன் தூரிகைகள் X மற்றும் Y உடன் தொடர்பு கொள்ளும்
    • இந்த மின்னோட்ட திருப்புதல் ஒவ்வொரு அரை சுழற்சியிலும் நிகழ்ந்து கம்பிச்சுருளில் தொடர்ச்சியான சுழற்சியை ஏற்படுத்துகிறது.

    2.மின் மாற்றியின் இரு வகைகளை விளக்கவும்.
    மின்மாற்றி:
            குறைந்த மின்னழுத்தத்தை உயர் மின்னழுத்தமாகவும், உயர் மின்னழுத்தத்தை குறை ந்த மின்னழுத்தமாகவும் மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவி மின்மாற்றி.
    ஏற்று மின்மாற்றி:
    • ஒரு குறைந்த மாறுதிசை மின்னழுத்தத்தை உயர் மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் மின்மாற்றி ஏற்று மின்மாற்றி. அதாவது (Vs > Vp).
    • ஒரு ஏற்று மின்மாற்றியில், முதன்மைச்சுருளில் உள்ள கம்பிச் சுருள்களின் எண்ணிக்கையை விட துணைச் சுருளில் உள்ள கம்பிச்சுருள்களின் எண்ணிக்கை அதிகம். (Ns>Np)
    இறக்கு மின்மாற்றி:

    • ஒரு உயர் மாறுதிசை மின்னழுத்தத்தை குறைந்த மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் மின்மாற்றி இறக்கு மின்மாற்றி. அதாவது (Vs <vp).
    • ஒரு இறக்கு மின்மாற்றியில், முதன் மைச்சுருளில் உள்ள கம்பிச் சுருள்களின் எண்ணிக்கையை விட துணைச் சுருளில் உள்ள கம்பிச்சுருள்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். (Ns < Np)
    • மின்னோட்டமானது அதிகரிக்கிறது, மின்னழுத்தம் குறைகிறது.

    3.ஒரு AC மின்னியற்றியின் நேர்த்தியான வரைபடம் வரைக.

    S,, S,-நழுவு வளையங்கள்
    B., B,-தூரிகைகள்
    ABCD - செவ்வக வடிவ கம்பிச்சுருள்
    NS - நிலைக்காந்தம்

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive