9th Science - Book Back Answers - Unit 4 - Tamil Medium Guides


 


    9th Science - Book Back Answers - Unit 4 - Tamil Medium

    Tamil Nadu Board 9th Standard  Science - Unit 4: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 4 – from the Tamil Nadu State Board 9th Standard  Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 4 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 9 students! Prepare well and aim for top scores. Thank you!

    அலகு 4: மின்னனூட்டமும் மின்னோட்டமும்

    I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

    1.ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்
    அ) எலக்ட்ரான்களின் ஏற்பு
    ஆ) புரோட்டான்களின் ஏற்பு
    இ) எலக்ட்ரான்களின் இழப்பு
    ஈ) புரோட்டான்களின் இழப்பு
    விடைகுறிப்பு: 
    இ) எலக்ட்ரான்களின் இழப்பு

    2. சீப்பினால் தலைமுடியைக் கோதுவதனால்
    அ) மின்னூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன 
    ஆ) மின்னூட்டங்கள் இடம் பெயர்கின்றன
    இ) அ அல்லது ஆ
    ஈ) இரண்டும் அல்ல
    விடைகுறிப்பு: 
    ஆ) மின்னூட்டங்கள் இடம் பெயர்கின்றன

    3. மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில்.__________ எதிர்மின்னூட்டத்தில்___________
    அ) தொடங்கி ; தொடங்கும்
    ஆ) தொடங்கி, முடிவடையும்
    இ) முடிவடைந்து; தொடங்கும்
    ஈ) முடிவடைந்து; முடியும்
    விடைகுறிப்பு: 
    ஆ) தொடங்கி, முடிவடையும்

    4. ஒரு மின்னூட்டத்திற்கு அருகில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை அத னருகில் கொண்டு வர செய்யப்படும்  __________ அளவாகும்.
    அ) விசையின்
    ஆ) திறமையின்
    இ) போக்கின்
    ஈ) வேலையின்
    விடைகுறிப்பு: 
    ஈ) வேலையின்

    5. மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின் பாய்விற்குக் காரணம்__________
    அ) எலக்ட்ரான்கள்
    ஆ) நேர் அயனிகள்
    இ) அ மற்றும் ஆ
    ஈ) இரண்டும் அல்ல
    விடைகுறிப்பு: 
    இ) அ மற்றும் ஆ

    6.மின்னோட்டத்தின் வெப்ப விளைவு __________என அழைக்கப்படும்.
    அ) ஜூல் வெப்பமேறல்
    ஆ) கூலூம் வெப்பமேறல்
    இ) மின்னழுத்த வெப்பமேறல்
    ஈ) ஆம்பியர் வெப்பமேறல்
    விடைகுறிப்பு: 
    அ) ஜூல் வெப்பமேறல்

    7.மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு___________
    அ) வெப்ப விளைவு
    ஆ) வேதி விளைவு
    இ) பாய்வு விளைவு
    ஈ) காந்த விளைவு
    விடைகுறிப்பு: 
    ஆ) வேதி விளைவு

    8.ஒரு கம்பியின் மின்தடை எதைப் பொறுத்து அமையும்?
    அ) வெப்பநிலை
    ஆ) வடிவம்
    இ) கம்பியின் இயல்பு
    ஈ) இவையனைத்தும்
    விடைகுறிப்பு: 
    ஈ) இவையனைத்தும்

    II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

    1.எலக்ட்ரான்கள் ___________ மின்னழுத்தத்திலிருந்து மின்னழுத்தத்திற்கு நகரும்
    விடைகுறிப்பு: 
    அதிக, குறைந்த

    2.எலக்ட்ரான்கள் நகரும் திசைக்கு எதிர்திசையில் நகர்வது _________ மின்னோட்டம் எனப்படும்
    விடைகுறிப்பு: 
     மரபு

    3.ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாயிணைப்புச் சூழலை ஒப்பிடுகையில் ______________க்கு ஒப்பானது.
    விடைகுறிப்பு: 
    இறைப்பான்

    4.இந்தியாவில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம் _________ Hz அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம் ஆகும். 
    விடைகுறிப்பு: 
    50

    III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

    1.மின்னியல் நடுநிலை என்பது சுழி மின்னூட்டம் அல்லது சமமான அளவு நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் உள்ளதைக் குறிக்கும்.
    விடைகுறிப்பு: 
    சரி

    2.ஒரு மின்சுற்றில் அம்மீட்டர் பக்க இணைப்பில் இணைக்கப்படும். 
    விடைகுறிப்பு: 
    தவறு
    ஒரு மின்சுற்றில் அம்மீட்டர் தொடர் இணைப்பில் இணைக்கப்படும்.

    3.மின்பகு திரவத்தினுள் ஆனோடு எதிர்மின் குறி உடையது. 
    விடைகுறிப்பு: 
    தவறு
    மின்பகு திரவத்தினுள் ஆனோடு நேர்மின் குறி உடையது.

    4.மின்னோட்டம் காந்த விளைவை ஏற்படுத்தும். 
    விடைகுறிப்பு: 
    சரி

    IV.  பொருத்துக.  

    1. மின்னூட்டம்
    ஓம்
    2. மின்னழுத்த வேறுபாடு
    ஆம்பியர்
    3. மின்புலம்
    கூலூம்
    4. மின்தடை
    நியூட்டன் கூலூம்
    5. மின்னோட்டம்
    வோல்ட்
    விடைகுறிப்பு: 
    1. மின்னூட்டம்
    கூலூம்
    2. மின்னழுத்த வேறுபாடு
    வோல்ட்
    3. மின்புலம்
    நியூட்டன் கூலூம்
    4. மின்தடை
    ஓம்
    5. மின்னோட்டம்
    ஆம்பியர்

    V. கருத்துரு வினாக்கள்.

    1.உயர் மின்திறன் கம்பியில் அமர்ந்திருக்கும் ஒரு பறவை பாதுகாப்பாகவே உள்ளது. எப்படி?
              பறவை பாதுகாப்பாக இருக்க காரணம் அது ஒரு கம்பியில் மட்டுமே அமர்திருப்பது.மேலும் மின்னழுத்த வேறுபாடு சுழி ஆகும். 

    2.சூரிய மின்கலத்தின் மின்னழுத்தம் எப்போதும் மாறாமல் இருக்குமா? கலந்தாய்வு செய்க.
               சூரிய மின்கலம் ஒளி மின்னழுத்த விளைவு தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இதில் மின்னழுத்தம் எப்போதும் ஒரே சீராக இருக்காது. இதனால் மின்னோட்டம், மின்னழுத்தம், மின் தடை ஆகியவை மாறுபடும்.

    3.மாறு மின்னோட்டத்தின் மூலம் மின் முலாம் பூச முடியுமா? காரணம் கூறு.
               காலத்தைப் பொறுத்து (A.C ) மாறுமின்னோட்டத்தின் திசை மாறிக் கொண்டே இருப்பதால் மின் முலாம் பூச முடியாது மின்முலாம் பூச (DC) நேர்த்திசை மின்னோட்டத்தை பயன்படுத்த வேண்டும்.

    VI. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

    1.இரு மின்னூட்டங்களுக்கு இடையேயான நிலைமின்னியல் விசை எந்த காரணிகளைச் சார்ந்தது?
    • மின்னூட்ட மதிப்பு
    • மின்னூட்டங்களுக்கு இடையேயான தொலைவு
    • அவற்றுக்கிடையேயான ஊடகத்தின் தன்மை
    2.மின்விசைக் கோடுகள் என்றால் என்ன?
               ஓரலகு நேர் மின்னோட்டம் நகருகின்ற நேர் அல்லது வளைவு கோடுகள் மின்விசைக் கோடுகள் எனப்படும். இது மின்புலத்தைக் குறிக்கும் கோடுகள் ஆகும்

    3.மின்புலம் - வரையறு.
               ஒரு புள்ளியில் வைக்கப்படும் ஓரலகு நேர்மின்னூட்டத்தினால் உணரப்படும் விசையே அப்புள்ளியில் மின்புலம் எனப்படும்.

    4.மின்னோட்டம் - வரையறு. அதன் அலகினைத் தருக.
    • மின்சுற்றின் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பு மின்னோட்டம் ஆகும். 
    • இதன் SI அலகு: ஆம்பியர் (A)
    5.ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் கருவிகள் ஏதேனும் இரண்டி னைக் கூறுக.
    • மின் சலவைப் பெட்டி, 
    • நீர் சூடேற்றி, 
    • மின் அடுப்பு

    6.வீட்டு உபயோக மின் பொருள்கள் எவ்வாறு இணைக்கப்படுகின்றன? தொடரிணைப்பிலா? பக்க இணைப்பிலா? காரணங்கள் தருக.
    பக்க இணைப்பு:
    • இந்த இணைப்பில் மின் சாதனங்களுக்கு  இடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு சமமாக இருக்கும். 
    • ஒவ்வொரு சாதனத்தையும் தனித் தனியாக ON,OFF செய்ய இயலும்.ஆனால் தொடரிணைப்பில் இது முடியாது.
    • தொடரிணைப்பில் ஒரு மின் சாதனத்தில் பழுது ஏற்பட்டால் மற்ற சாதனங்கள் இயங்காது.
    7.மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்களைக் கூறுக.
    தரையிணைப்பு:
    • அதிகப்படியான மின்னோட்டம் நம்மை தாக்காமல் இந்த இணைப்பின் வழியே பூமிக்கு சென்று விடும்.
    முறிசாவி :
    • குறிப்பிட்ட அளவிற்கு மேல் மின்னோட்டம் பாய்ந்தால் இணைப்பை துண்டித்து விடும்.
    மின்னுருகு இழை :
    • மின் சுற்றில் அதிகமின்னோட்டம் பாயும் போதுமின்னுருகு இழை உருகி இணைப்பை துண்டித்துவிடும்.

    VII. பயிற்சி கணக்குகள்.

    1.நெகிழிச் சீப்பு ஒன்றை தலைமுடியில் தேய்ப்பதனால் அது 0.4C மின்னூட்டத்தைப் பெறுகிறது எனில்,
    (அ)எந்தப் பொருள் எலக்ட்ரானை இழந்தது? எது எலக்ட்ரானைப் பெற்றது?
    (ஆ)இந்நிகழ்வில் இடம் பெயர்த்தப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?
    விடைகுறிப்பு:
    (அ) தலைமுடி எலக்ட்ரான்களை இழக்கும். சீப்பு எலக்ட்ரான்களை பெற்றுக் கொள்ளும்.
     


    2.2.5A அளவு மின்னோட்டம் மின்விளக்கு ஒன்றின் வழியே 2 மணி நேரம் பாய்ந்தால், அதன் வழியே செல்லும் மின்னூட்டத்தின் மதிப்பைக் கணக்கிடுக.

    3.மின்தடையம் ஒன்றில் பாயும் மின்னோட்டம் (1) மற்றும் அதன் குறுக்கே உருவாகும் மின்ன ழுத்த வேறுபாடு (V) ஆகியவற்றின் மதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மின்தடையத்தின் மின் தடை மதிப்பு என 


    1(ஆம்பியர்)

    0.5

    1.0

    2.0

    3.0

    4.0

    V (வோல்ட்)

    1.6

    3.4

    6.7

    10.2

    13.2

     

    1(ஆம்பியர்) - 0.5, 1.0, 2.0, 3.0, 4.0
    V (வோல்ட்) - 1.6, 3.4, 6.7, 10.2, 13.2 
    குறிப்பு: V-1 வரைபடத்தை வரைந்து அதன் சாய்வை எடுக்கவும். 
    மின்தடையின் மதிப்பானது (R), சாய்விலிருந்து பெறப்படுகிறது. 

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive