Tamil Nadu Board 9th Standard Science - Unit 1: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 1 – from the Tamil Nadu State Board 9th Standard Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Unit 1 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 9 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 1: அளவீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
அ) மி.மீ < செ.மீ <மீ < கி.மீ
ஆ) மி.மீ > செ.மீ > மீ > கி.மீ
இ) கி.மீ < மீ < செ.மீ < மி.மீ
ஈ) மி.மீ > மீ > செ.மீ > கி.மீ
விடை குறிப்பு:
அ) மி.மீ < செ.மீ <மீ < கி.மீ
2. அளவுகோல், அளவிடும் நாடா மற்றும் மீட்டர் அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?
அ) நிறை
ஆ) எடை
இ) காலம்
ஈ) நீளம்
விடை குறிப்பு:
ஈ) நீளம்
3. ஒரு மெட்ரிக் டன் என்பது
அ) 100 குவின்டால்
ஆ) 10 குவின்டால்
இ) 1/10 குவின்டால்
ஈ) 1/100 குவின்டால்
விடை குறிப்பு:
ஆ) 10 குவின்டால்
4. கீழ்க்கண்டவற்றுள் எது நிறையை அளவிடும் கருவியல்ல?
அ) சுருள் தராசு
ஆ) பொதுத் தராசு
இ) இயற்பியல் தராசு
ஈ) எண்ணியல் தராசு
விடை குறிப்பு:
அ) சுருள் தராசு
II. கோடிட்ட இடங்களை நிரப்பு.
1. __________ ன் அலகு மீட்டர் ஆகும்.விடை குறிப்பு:
நீளம்
2. 1 கி.கி அரிசியினை அளவிட __________ தராசு பயன்படுகிறது.
விடை குறிப்பு:
பொதுத்
3. கிரிக்கெட் பந்தின் தடிமனை அளவிடப் பயன்படுவது __________ கருவியாகும்.
விடை குறிப்பு:
வெர்னியர்
4. மெல்லிய கம்பியின் ஆரத்தை அளவிட __________ பயன்படுகிறது.
விடை குறிப்பு:
திருகு அளவி
5. இயற்பியல் தராசைப் பயன்படுத்தி அளவிடக் கூடிய துல்லியமான நிறை __________ ஆகும்.
விடை குறிப்பு:
10 மி.கிராம்
III. சரியா? தவறா?. தவறெனில் திருத்துக.
1. மின்னோட்டத்தின் SI அலகு கிலோகிராம்.விடை குறிப்பு:
தவறு
மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர்
2. கிலோமீட்டர் என்பது ஒரு SI அலகுமுறை
விடை குறிப்பு:
தவறு
மீட்டர் என்பது ஒரு SI அலகு முறை
3. அன்றாட வாழ்வில், நாம் நிறை என்ற பதத்திற்குப் பதிலாக எடை என்ற பதத்தைப் பயன்படுத் துகிறோம்.
விடை குறிப்பு:
சரி
4. இயற்பியல் தராசு, பொதுத் தராசை விடத் துல்லியமானது. அது மில்லிகிராம் அளவிற்கு நிறையைத் துல்லியமாக அளவிடப் பயன்படுகிறது.
விடை குறிப்பு:
சரி
5. ஒரு டிகிரி செல்சியஸ் என்பது 1K இடைவெளி ஆகும். பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் என்பது 273.5K
விடை குறிப்பு:
சரி
6. வெர்னியர் அளவியின் உதவியால் 0.1 மிமீ அளவிற்கும், திருகு அளவியின் உதவியால் 0.01 மி.மீ அளவிற்கும் துல்லியமாக அளவிட முடியும்.
விடை குறிப்பு:
சரி
IV. பொருத்துக.
|
1.
|
இயற்பியல் அளவு
|
SI அலகு
|
|
அ)
|
நீளம்
|
கெல்வின்
|
|
ஆ)
|
நிறை
|
மீட்டர்
|
|
இ)
|
காலம்
|
கிலோகிராம்
|
|
ஈ)
|
வெப்பநிலை
|
விநாடி
|
|
இயற்பியல் அளவு
|
SI அலகு
|
|
|
அ)
|
நீளம்
|
மீட்டர்
|
|
ஆ)
|
நிறை
|
கிலோகிராம்
|
|
இ)
|
காலம்
|
விநாடி
|
|
ஈ)
|
வெப்பநிலை
|
கெல்வின்
|
|
2.
|
கருவி
|
அளவிடப்படும்பொருள்
|
|
அ)
|
திருகு அளவி
|
காய்கறிகள்
|
|
ஆ)
|
வெர்னியர் அளவி
|
நாணயம்
|
|
இ)
|
சாதாரணத்தராசு
|
தங்க நகைகள்
|
|
ஈ)
|
மின்னணுத்தராசு
|
கிரிக்கெட் பந்து
|
|
கருவி
|
அளவிடப்படும்பொருள்
|
|
|
அ)
|
திருகு அளவி
|
நாணயம்
|
|
ஆ)
|
வெர்னியர் அளவி
|
கிரிக்கெட் பந்து
|
|
இ)
|
சாதாரணத்தராசு
|
காய்கறிகள்
|
|
ஈ)
|
மின்னணுத்தராசு
|
தங்க நகைகள்
|
V. கூற்று மற்றும் காரண வகை வினாக்கள்.
பின்வருமாறு விடையளி:அ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி
1. கூற்று (A):ஒரு பையின் நிறை 10கி.கி என்பது அறிவியல் பூர்வமாக சரியான வெளிப்படுத்துதல் ஆகும்.
காரணம் (R): அன்றாட வாழ்வில் நாம் நிறை என்ற வார்த்தைக்குப் பதிலாக எடை என்ற வார்த் தையைப் பயன்படுத்துகிறோம்.
விடை குறிப்பு:
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்.
2. கூற்று (A): 0°c = 273.16 K நாம் அதை முழு எண்ணாக 273 K என எடுத்துக் கொள்கிறோம்.
காரணம் (R): செல்சியஸ் அளவை கெல்வின் அளவிற்கு மாற்றும் போது 273 ஐக் கூட்டினால் போது மானது
விடை குறிப்பு:
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்
3. கூற்று (A): இரண்டு வான் பொருட்களுக்கு இடையே உள்ள தொலைவு ஒளி ஆண்டு என்ற அலகினால் அளக்கப்படுகிறது.
காரணம் (R): ஒளியானது தொடர்ந்து ஒரு ஆண்டு செல்லக்கூடிய தொலைவு ஓர் ஒளி ஆண்டு எனப்படும்.
விடை குறிப்பு:
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்
VI. மிகச்சுருக்கமான விடையளிக்க.
1. அளவீடு என்றால் என்ன?- ஒரு பொருளின் பண்பு அல்லது நிகழ்விற்கு அளவு மற்றும் எண்மதிப்பை வழங்கும் முறை
2. SI அலகு - வரையறு.
- SI அலகு முறை என்பது பண்டைய அலகு முறைகளைவிட நவீன மயமான மற்றும் மேம்படுத்தப்பட்ட அலகு முறை.
- உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை.
3. SI அலகின் விரிவாக்கம் என்ன?
- International system of units. (பன்னாட்டு அலகு முறை)
4. மீச்சிற்றளவு - வரையறு.
- ஒரு அளவுகோலினால் அளக்க முடிந்த மிகச் சிறிய அளவு.
5. திருகு அளவியின் புரிக்கோல் பற்றி உனக்கு என்ன தெரியும்?
- திருகு அளவியில், திருகின் அச்சுக்கு இணையாக மில்லி மீட்டர் அளவுகள் குறிக்கப்பட்ட அளவுகோல்.
6. 2 மீ நீளம் கொண்ட ஒரு மெல்லிய கம்பியின் விட்டத்தை உனது கருவிப் பெட்டியிலிருக்கும் அள வுகோலால் உன்னால் கண்டறிய முடியுமா?
- முடியாது. அளவுகோலால் கம்பியின் விட்டத்தை கண்டறிய முடியாது.
- கம்பியின் விட்டத்தை திருகு அளவி கொண்டு கண்டறிய முடியும்.
VII. சுருக்கமாக விடையளி.
1. SI அலகுகளை எழுதும்போது கவனிக்க வேண்டிய விதி முறைகள் யாவை?- அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் அலகு குறிப்பிடும்போது முதல் எழுத்து பெரிய எ ழுத்தாக இருக்கக்கூடாது. (எ.கா) newton, henry
- குறிப்பிட்ட பெயரால் வழங்கப்படாத அலகுகளின் குறியீடுகளை சிறிய எழுத்தால் (Small Letter) எழுத வேண்டும். (எ.கா) metre என்பது m மற்றும் kilogram என்பது kg.
- அலகுகளின் குறியீடுகளை பன்மையில் எழுதக் கூடாது. (எ.கா) 10kg என்பதை 10kgs என எழுதக்கூடாது.
2. நிலையான அலகு முறையின் தேவை என்ன?
- முந்தைய காலங்களில், வெவ்வேறு அலகு முறைகள் வெவ்வேறு நாட்டு மக்களால் பயன் படுத்தப்பட்டது.
- இதனால் இரண்டாம் உலகப்போரின் முடிவில், உலக அளவிலான அலகு முறைக்கான அ வசியம் ஏற்பட்டது.
- ஆகவே, 1960ஆம் ஆண்டு பாரிஸ் நகரில், எடைகள் மற்றும் அளவுகளுக்கான பொது மாநாட்டில் SI அலகு முறையானது (பன்னாட்டு அலகுமுறை) உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டது.
3. நிறை மற்றும் எடையை வேறுபடுத்துக.
நிறை:
- அடிப்படை அளவு.
- எண் மதிப்பு மட்டும் கொண்ட அளவு எனவே இது ஸ்கேலர் அளவாகும்.
- இடத்திற்கு இடம் மாறாது.
- இயற்பியல் தராசினால் அளவீடு செய்யப்படுகிறது.
- இதன் அலகு கிலோகிராம்.
- வழி அளவு.
- எண் மதிப்பு மற்றும் திசைப் பண்பு கொண்டது,. இது வெக்டர் அளவாகும்.
- இடத்திற்கு இடம் மாறுபடும்.
- இது சுருள்வில் தராசு கொண்டு அளவீடு செய்யப்படுகிறது.
- இதன் அலகு நியூட்டன்.
4. வெர்னியர் அளவுகோலின் மீச்சிற்றளவை எவ்வாறு கணக்கிடுவாய்?
VIII. விரிவாக விடையளி.
1. ஒரு உள்ளீடற்ற தேநீர் குவளையின் தடிமனை எவ்வாறு கண்டறிவாய்?- முதலில் திருகு அளவியின் புரியிடைத் தூரம், மீச்சிற்றளவு மற்றும் சுழிப்பிழை ஆகியவற் றைக் கண்டுபிடிக்கவும்
- திருகு அளவியின் இரு சமதளப் பரப்புகளுக்கு இடையே உள்ளீடற்ற தேனீர் குவளையை வைக்கவும்
- பற்சட்ட அமைப்பின் உதவியால் திருகைத் திருகி தேனீர் குவளையை நன்றாகப் பற்றிக் கொள்ளுமாறு செய்யவும்
- புரிக்கோல் காட்டும் அளவையும் (PSR) புரிக்கோலின் வரை கோட்டுடன் இணையும் தலைக்கோல் பிரிவையும் (HSC) குறித்துக்கொள்ளவும்
- தேனீர் குவளையின் தடிமன் = P.S.R. + திருத்தப்பட்ட H.S.R. அதாவது P.S.R + (HSC + ZC) L.C
- தேனீர் குவளையின் வெவ்வேறு பகுதிகளைத் திருகு அளவியின் சமதளப் பரப்புகளுக்கிடையே வைத்து சோதனையைத் திரும்பச் செய்யவும்.
- அளவீடுகளை அட்டவணைப்படுத்தி கடைசிக் கட்டத்தில் உள்ள பல்வேறு அளவுகளின் சராசரி தேனீர் குவளையின் தடிமனைக் கொடுக்கும்.
- சுழிப்பிழை இல்லை
- சுழித்திருத்தம் தேவையில்லை.
- தேனீர் குவளையின் தடிமன் =……………………….. மி.மீ
2. ஒரு ரூபாய் நாணயத்தின் தடிமனை எவ்வாறு கணக்கிடுவாய்?
- திருகு அளவி உதவியுடன் ஒரு ரூபாய் நாணயத்தின் தடிமனை கணக்கிடலாம்.
- முதலில் மீச்சிற்றளவு, சுழிப்பிழை, சுழிதிருத்தம் ஆகியவற்றை கணக்கிடவும்.
- திருகு அளவியின் இரு சமதளப் பரப்புகளுக்கு இடையே மெல்லிய நாணயத்தை வைத்து புரிக்கோல்
- அளவு (PSR) மற்றும் தலைக்கோல் பிரிவு (HSC) ஆகியவற்றை குறிக்கவும்.
- நாணயத்தின் தடிமன் PSR + (HSC+ ZC) LC
- நாணயத்தின் வெவ்வேறு பகுதிகளைத் திருகு அளவியின் சமதளப் பரப்புகளுக்கிடையே வைத்து சோதனையைத் திரும்பச் செய்யவும்.







0 Comments:
Post a Comment