Tamil Nadu Board 9th Standard Science - Unit 3: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 3 – from the Tamil Nadu State Board 9th Standard Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Unit 3 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 9 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 3: பாய்மங்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. நீரில் மூழ்கியிருக்கும் காற்றுக்குமிழி மேலே எழும்பும் போது, அதன் அளவுஅ) குறையும்
ஆ) அதிகரிக்கும்
இ) அதே அளவில் இருக்கும்
ஈ) குறையும் அல்லது அதிகரிக்கும்.
விடைகுறிப்பு:
ஆ) அதிகரிக்கும்
2. வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு அவற்றின் குறைந்த ______ காரணமாகும்.
அ) அடர்த்தி
ஆ) அழுத்தம்
இ) திசைவேகம்
ஈ) நிறை
விடைகுறிப்பு:
அ) அடர்த்தி
3. அழுத்த சமையற்கலனில் (pressure cooker ) உணவு விரைவாக சமைக்கப்படுவதற்கு காரணம், அதனுடைய
அ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையைக் குறைக்கிறது.
ஆ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.
இ) குறைக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.
ஈ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் உருகு நிலையைக் குறைக்கிறது.
விடைகுறிப்பு:
ஆ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.
4. நீருள்ள வாளியில், காற்றுப் புகாத அடைப்பானால் மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது. பாட்டில் கீழ்நோக்கி தள்ளப்படும்போது, அதன் அடிப்பகுதியில் செயல்படும் விசையானது அதிகரிக்கிறது. இதற்கான காரணம் என்ன?
அ) அதிக பருமனுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.
ஆ) அதிக எடையுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.
இ) ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது.
ஈ) மேலே கூறிய யாவும்
விடைகுறிப்பு:
இ) ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது.
II. கோடிட்ட இடங்களை நிரப்பு.
1. பொருளானது திரவத்தில் மூழ்கியிருக்கும் போது உணரப்படும் எடையானது அதன் உண்மையான எடையை விட __________ தோன்றும்.விடைகுறிப்பு:
குறைவாகத்
2. வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி _______ ஆகும்.
விடைகுறிப்பு:
காற்றழுத்தமானி
3. திரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசையின் எண் மதிப்பு திரவத்தின் _________ ஐப் பொறுத்தது.
விடைகுறிப்பு:
அடர்த்தி
4. பழரசம் அருந்தப் பயன்படும் உறிஞ்சு குழல் _________ மூலம் வேலை செய்கிறது.
விடைகுறிப்பு:
அழுத்தம்
III. சரியா? தவறா?. தவறெனில் திருத்துக.
1. இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட நீரின் எடை மிதப்பு விசையைத் தீர்மானிக்கிறது.விடைகுறிப்பு:
சரி
2. ஒருபொருளின் வடிவம் அப்பொருள் மிதக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.
தவறு
3. மிக உயரமான கட்டடங்களின் அடிப்பாகம் அகலமாக இருப்பதால், கட்டடம் அதிக அழுத்த த்தை புவியின் மீது செலுத்துகிறது.
விடைகுறிப்பு:
தவறு
4. ஆர்க்கிமிடிஸ் தத்துவம் வாயுக்களுக்கும் பொருந்தும்.
விடைகுறிப்பு:
சரி
IV. பொருத்துக.
|
1
|
அடர்த்தி
|
hpg
|
|
2
|
பாஸ்கல் விதி
|
பால்
|
|
3
|
பாய்மம் ஏற்படுத்தும் அழுத்தம்
|
நிறை / பருமன் |
|
4
|
பால்மானி
|
அழுத்தம்
|
|
1
|
அடர்த்தி
|
நிறை / பருமன்
|
|
2
|
பாஸ்கல் விதி
|
அழுத்தம்
|
|
3
|
பாய்மம் ஏற்படுத்தும் அழுத்தம்
|
hpg
|
|
4
|
பால்மானி
|
பால்
|
V. சுருக்கமாக விடையளி.
1. திரவம் ஏற்படுத்தும் அழுத்தம் எந்தெந்த காரணிகளைப் பொறுத்தது?- (i) ஆழம் (h)
- (ii) திரவத்தின் அடர்த்தி (p)
- (iii) புவியீர்ப்பு முடுக்கம் (g)
2. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதப்பது ஏன்?
- காற்றைவிட ஹீலியம் அடர்த்தி குறைவு.
- எனவே ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதக்கிறது.
3. கடல் நீரில் நீந்துவது ஆற்று நீரில் நீந்துவதைவிட எளிதாக இருப்பது ஏன்?
- கடல் நீரின் அடர்த்தி, ஆற்று நீரின் அடர்த்தியை விட அதிகம்,. எனவே, அதிகமான மிதப்பு விசையின் காரணமாக கடல் நீரில் நீந்துவது எளிது.
4. வளி மண்டல அழுத்தம் என்றால் என்ன?
- பூமியில்குறிப்பிட்ட உயரம் காற்றுஉள்ளது இதனை வளிமண்டலம் என்கிறோம் காற்று இடத்தை அடைத்துக் கொள்ளும்.
- மேலும் அதற்கு எடை உண்டு என்பதால் காற்றும அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த அழுத்தம் வளிமண்டல அழுத்தம் எனப்படுகிறது.
5. பாஸ்கல் விதியைக் கூறு.
- அழுத்தமுறா திரவங்களில் செயல்படும் புறவிசை, திரவங்களின் அனைத்துத் ப குதிகளுக்கும் சமமாக கடத்தப்படும்.
VI. விரிவாக விடையளி.
1. சிறிய பரப்பின் மீது செயல்படும் விசை அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது என்பதை ஒரு செயல்பாட்டின் மூலம் விளக்குக.- மணற்பாங்கான பரப்பின்மீது நிற்கவும். உங்கள் கால்கள் மணலுக்குள் ஆழமாகச் செல்லும். அதே பரப்பின் மீது படுக்கும்போது, முன்புபோல் உடல் ஆழமாக மணலுக்குள் செல்லாது.
- இரு நிகழ்வுகளிலும், மணல்மீது செயல்படும் விசையை ஏற்படுத்தும் உங்கள் உடலின் எடை மாறாமல் உள்ளது. பரப்பிற்குச் செங்குத்தாகச் செயல்படும் விசை “உந்துவிசை” எனப்படும்.
- மணலில் நிற்கும்போது செயல்படும் விசை கால்களின் பரப்பளவிற்குச் சமமான பரப்பளவில் செயல்படுகிறது.
- ஆனால் படுத்திருக்கும் நிலையில் அதே விசையானது உடலின் பரப்பளவிற்கு சமமான பரப்பில் செயல்படுகிறது.
- உடலின் பரப்பளவு கால்களின் பரப்பளவை விட அதிகமாகும். உந்துவிசையின் விளைவாக தோன்றும் அழுத்தம் அது செயல்படும் பரப்பை சார்ந்தது.
- எனவே மணலில் நிற்கும்போது ஏற்படும் உந்துவிசையின் விளைவு படுக்கும்போது ஏற்படும் உந்து விசையின் விளைவைவிட அதிகம்.
- இதிலிருந்து சிறிய பரப்பின் மீது செயல்படும் விசை அதிக அழுத்தத்தை கொடுக்கிறது எனத் தெரிகிறது.
2. காற்றழுத்தமானியின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தை விவரிக்கவும்.
- வளிமண்டல அழுத்தத்தை அளக்க காற்றழுத்தமானி என்னும் கருவி பயன்படுகிறது
- ஒரு முனை திறந்தும் ஒரு முனை மூடியும் உள்ள நீண்ட கண்ணாடிக் குழாயில் பாதரசம் நிரப்பப்பட்டு தலைகீழாக ஒரு கொள்கலனி ல் வைக்கப்பட்டுள்ளது.
- தலைகீழாக கவிழ்க்கும் போது, திறந்திருக்கும் முனையை கட்டை விரலால் மூடி, பாதரசம் உள்ள கொள்கலனில் கவிழ்க்க வேண்டும்.
- காற்றழுத்தமானியில் உள்ள பாதரசம் வெளியில் உள்ள காற்றின் அழுத்தத்தை சமன் செய்து இயங்குகிறது.
- காற்றின் அழுத்தம் அதிகரிக்கும்போது, கொள்கலனில் உள்ள பாதரசம் கண்ணாடிக் குழாயினுள் தள்ளப்படுகிறது. காற்றின் அழுத்தம் குறையும்போது, குழாயினுள் உள்ள பாதரசம் வெளியேற்றப்படுகிறது.
- குழாயின்மூடிய முனைக்கும், உள்ளேயுள்ள பாதரசத்திற்கும் இடையே காற்று இல்லாமல் வெற்றிடமாக உள்ளது.
- வெற்றிடம் எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்த இயலாது. ஆகையால் குழாயில் உள்ள பாதரசம் வளிமண்டலத்தின் அழுத்தத்தைக் துல்லியமாக வழங்குகிறது.
- இக்கருவியை ஆய்வகத்திலோ அல்லது வானிலை மையத்திலோ பயன்படுத்தலாம்.
3. பொருளின் அடர்த்தி எவ்வாறு அப்பொருள் நீரில் மூழ்குமா அல்லது மிதக்குமா என்பதைத் தீர்மானிக்கிறது?
- பொருள் நீரில் மூழ்குமா அல்லது மிதக்குமாஎன்பதுஅப்பொருளின் அடர்த்தியை நீரின் அடர்த்தியோடு ஒப்பிட்டு நிர்ணயிக்கப்படுகிறது.
- திரவத்தின் அடர்த்தியை விட பொருளின் அடர்த்தி குறைவாக இருப்பின், அப்பொருள் அத்திரவத்தில் மிதக்கும். பொருளின் அடர்த்தி அதிகமாக இருந்தால் மூழ்கும்.
ii) கல் நீரில் மூழ்கும் (அடர்த்தி அதிகம்)
4. திரவமானியின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தை படத்துடன் விவரி.
திரவமானி
- ஒரு திரவத்தின் அடர்த்தியை அல்லது ஒப்படர்த்தியை அளப்பதற்குப் பயன்படும் கருவி.
- ஒரு திரவத்தில் மூழ்கியுள்ள திரவமானியால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடை திரவமானியின் எடைக்குச் சமமாக இருக்கும்.
- திரவமானியின் அடிப்பகுதி கோள வடிவ குடுவையையும் மேற்பகுதியில் மெல்லிய குழாயையும் கொண்ட நீண்ட உருளை வடிவ தண்டைக் கொண்டது.
- குழாயின் அடிப்பகுதி பாதரசம் அல்லது காரீயக் குண்டுகளால் நிரப்பப்பட்டுள்ளது. இது திரவமானியை செங்குத்தாக மிதக்கசெயகிறது
- மெல்லிய குழாயில் உள்ள அளவீடுகள் மூலம் திரவத்தின் ஒப்படர்த்தியை நேரடியாக அளக்கமுடிகிறது.
- திரவத்தினை கண்ணாடிக் குடுவையில் நிரப்பி திரவமாணியை அதில் மிதக்கவிட வேண்டும்.
- குழாயின் அளவீடுகளை திரவத்தின் மேற்பகுதியைத் தொடும் அளவு, திரவத்தின் ஒப்படர்த்தி ஆகும்.
5. மிதத்தல் விதிகளைக் கூறு.
மிதத்தல் விதிகளாவன:
- பாய்மம் ஒன்றின் மீது மிதக்கும் பொருளொன்றின் எடையானது, அப்பொருளினால் வெளியேற்றப்பட்ட பாய்மத்தின் எடைக்குச் சமமாகும்.
- மிதக்கும் பொருளின் ஈர்ப்பு மையமும், மிதப்பு விசையின் மையமும் ஒரே நேர்கோட்டில் அமையும்.
- மிதப்பு விசை செயல்படும் புள்ளியே மிதப்பு விசை மையம் எனப்படும்.
VII. கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள்.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. ஆனால், காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
இ) கூற்று உண்மை. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை.
1. கூற்று: ஒரு பொருள் மதிப்பதற்கு, தனது எடைக்குச் சமமான எடையுள்ள நீரை வெளியேற்ற வேண்டும்.
காரணம்: அப்பொருள் எந்தவொரு கீழ்நோக்கிய விசையையும் உணர்வதில்லை.
விடைகுறிப்பு:
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை . மேலும், காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
2. கூற்று: நீரியல் தூக்கி பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.
காரணம்: ஓரலகு பரப்பில் செயல்படும் செங்குத்து விசையே அழுத்தம் ஆகும்.
விடைகுறிப்பு:
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
VIII. கணக்கீடுகள்.
- 100கி எடை கொண்ட மரக்கட்டையானது நீரின் மேல் மிதக்கும்போது, அவை ஒரு மேல்நோக்கிய உந்து விசையினை உணருகிறது. இந்த உந்துவிசையானது நீரில் மூழ்கியுள்ள மரக்கட்டையினால் வெளியேற்றப்பட்ட நீரின் காரணமாக ஏற்படுகிறது.
- மிதக்கும் பொருளின் உந்து விசை, அப்பொருளின் எடைக்கு சமமாகும்.
- எனவே பொருளின் தோற்ற எடையின் மதிப்பு "0" ஆகும்.
- பொருளின் தோற்ற எடை = காற்றில் பொருளின் எடை- மேல்நோக்கு விசை
- = 100 கி – 100
- கி = 0
IX. உயர் சிந்தனையை வினாக்கள்.
2. மீன்கள் எவ்வாறு நீரின் மேலும் கீழும் நீந்த முடிகிறது?
- மீனானது தனது செவுள்கள் மூலமாக சுற்றியுள்ள நீரில் இருக்கும் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு அதன் காற்றுப்பையை நிரப்புகிறது.
- இந்நிகழ்வினால் மீன்னுடைய உடலின் அடர்த்தி குறைக்கப்படுகிறது.
- மிதப்பு விசை மற்றும் புவியீர்ப்பு முடுக்கமானது ஒன்றுக்கொன்று எதிராக செயல்படுவதால் மீனினால் தொடர்ந்து அதே நிலையில் இருக்க முடிகிறது.
- பெரும்பாலான மீன்கள் இந்த முறையினை பயன்படுத்தியே நீரின் மேலும், கீழும் நீந்த முடிகிறது.
3. ஒரு பனிக்கட்டியை ஒரு குவளை நீரிலும், ஒரு குவளை ஆல்கஹாலிலும் போடும் பொழுது என்ன நிகழ்கிறது என்பதை கவனித்து விவரி.
- ஒரு பனிக்கட்டியை ஒருகுவளை நீரிலும், ஒருகுவளை ஆல்கஹாலிலும் போடும்போது, நீருள்ள குவளையில் பனிக்கட்டியானது மிதக்கிறது.
- மேலும் ஆல்கஹால் உள்ள குவளையில் பனிக்கட்டியானது மூழ்குகிறது. நீரின் அடர்த்தியே இதற்கு காரணம் ஆகும்.
4. அடியில் துளையுடன் உள்ள படகு நீரில் செல்லும்பொழுது இறுதியில் மூழ்கிவிடும். ஏன்?
- துளையுள்ள படகில் நீரானது வேகமாக உள்ளே நுழைகிறது. படகானது கனமாக இருப்பதால் அது மூழ்க தொடங்குகிறது.
- மேலும் அதற்கு சமமான நீரினை இடப்பெயர்ச்சி செய்ய முயலுகிறது.
- நீரானது தொடர்ந்து படகின் உள்ளே வருவதால், குழாயின் நீர்மட்ட அழுத்தமானது. வளிமண்டல அழுத்தத்தைவிட அதிகமாகிறது.
- இவ்வழுத்த வேறுபாடுகளால், துளையுள்ள படகானது நீரினில் அழுத்தப்பட்டு இறுதியில் மூழ்கி விடுகிறது.







0 Comments:
Post a Comment