9th Science - Book Back Answers - Unit 2 - Tamil Medium
Tamil Nadu Board 9th Standard Science - Unit 2: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 2 – from the Tamil Nadu State Board 9th Standard Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Unit 2 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 9 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 2: இயக்கம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. திசைவேகம் காலம் வரைபடம் உள்ளடக்கும் பரப்பளவு எதனைப் பிரதிபலிக்கிறது?
அ) நகரும் பொருளின் திசைவேகம்
ஆ) நகரும் பொருள் அடைந்த இடப்பெயர்ச்சி
இ) நகரும் பொருளின் வேகம்
ஈ) நகரும் பொருளின் முடுக்கம்
விடைகுறிப்பு:
ஆ) நகரும் பொருள் அடைந்த இடப்பெயர்ச்சி
2. கீழ்க்கண்டவற்றில் எது பெரும்பாலும் சீரான வட்ட இயக்கம் அல்ல?
அ) சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்
ஆ) வட்டப் பாதையில் சுற்றி வரும் பொம்மை ரயிலின் இயக்கம்
இ) வட்டப் பாதையில் செல்லும் பந்தய மகிழுந்து
ஈ) கடிகாரத்தில் மணி முள்ளின் இயக்கம்
விடைகுறிப்பு:
இ) வட்டப் பாதையில் செல்லும் பந்தய மகிழுந்து
3. கீழ்வரும் வரைபடத்தில் சீரான இயக்கத்தில் நகரும் ஒரு பொருளைக் குறிப்பிடுவது எது?
4. மையவிலக்கு விசை ஒரு
அ) உண்மையான விசை
ஆ) மையநோக்கு விசைக்கு எதிரான விசை
இ) மெய்நிகர் விசை
ஈ) வட்டப் பாதையின் மையத்தை நோக்கி இயங்கும் விசை
விடைகுறிப்பு:
ஆ) மையநோக்கு விசைக்கு எதிரான விசை
II. கோடிட்ட இடங்களை நிரப்பு.
1. வேகம் ஒரு ___________ அளவு. அதே சமயம் திசைவேகம் __________ ஒரு அளவு.
விடைகுறிப்பு:
ஸ்கேலர், வெக்டர்
2. தொலைவு - கால வரைபடத்தின் எந்த ஒரு புள்ளியிலும் சாய்வின் மதிப்பைத் தருவது ____________
விடைகுறிப்பு:
வேகம்
3. எதிர்மறை முடுக்கத்தை __________ என்றும் கூறலாம்.
விடைகுறிப்பு:
வேக இறக்கம்
4. இடப்பெயர்ச்சி காலம் வரைபடத்தில் உள்ள பரப்பளவு குறிப்பிடுவது __________
விடைகுறிப்பு:
திசைவேகம்
III. சரியா? தவறா?. தவறெனில் திருத்துக.
1. நகரத்தின் நெருக்கடி மிகுந்த கடுமையான போக்குவரத்திற்கிடையே செல்லும் ஒரு பேருந்தின் இயக்கம் சீரான இயக்கத்துக்கு ஒரு உதாரணம்.
விடைகுறிப்பு:
தவறு
நகரத்தின் நெருக்கடி மிகுந்த கடுமையான போக்குவரத்திற்கு இடையே செல்லும் ஒரு பேருந்தின் இயக்கம் சீரற்ற இயக்கத்திற்கு ஒரு உதாரணம்.
2. முடுக்கம் எதிர்மறை மதிப்பும் பெறும்
விடைகுறிப்பு:
சரி
3. எந்தவொரு கால இடைவெளியிலும் ஒரு பொருள் கடந்த தூரம் சுழி ஆகாது. ஆனால் இடப்பெயர்ச்சி சுழி ஆகும்
விடைகுறிப்பு:
சரி
4. ஈர்ப்பு விசையால் தடையின்றி தானே விழும் ஒரு பொருளின் திசைவேகம் - காலம் வரைபடமானது X-அச்சுக்கு இணையாக ஒரு நேர்கோடாக இருக்கும்.
விடைகுறிப்பு:
தவறு
ஈர்ப்பு விசையால் தடையின்றித் தானே விழும் ஒரு பொருளின் திசைவேகம் காலம் வரைபடமானது X- அச்சுக்கு சாய்வாக ஒரு நேர்கோடாக அமையும்.
5. ஒரு பொருளின் திசைவேகம் - காலம் வரைபடம் ஒரு நேர்கோடாக இருந்து, அது காலத்தினுடைய அச்சுக்கு சாய்வாக இருந்தால் அதன் இடப்பெயர்ச்சி - காலம் வரைபடம் ஒரு நேர் கோடாக அமையும்.
விடைகுறிப்பு:
சரி
IV. கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள்.
சரியானதைத் தேர்ந்தெடு:
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரி யான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. ஆனால், காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
இ) கூற்று உண்மை. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை.
1. கூற்று : ஒரு பொருளின் முடுக்குவிக்கப்பட்ட இயக்கம் அதன் திசைவேக அளவு அல்லது திசைமாற்றம் அல்லது இரண்டும் மாற்றம் அடைவதால் ஏற்படுவது.
காரணம் : ஒரு பொருளின் முடுக்கம் அதன் திசைவேகத்தின் அளவு மாறுபடுவதால் மட்டுமே நிகழும். அது திசை மாற்றத்தைப் பொறுத்தது அல்ல.
விடைகுறிப்பு:
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை
2. கூற்று : மகிழுந்து அல்லது மோட்டார் சைக்கிளில் உள்ள வேகமானி அதன் சராசரி வேகத் தை அளவிடுகிறது.
காரணம்: மொத்தத் தூரத்தை நேரத்தால் வகுத்தால் அது சராசரி திசை வேகத்துக்கு சமம்.
விடைகுறிப்பு:
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. ஆனால், காரணம் கூற்றின் தவறான விளக்கம்
3. கூற்று : ஒரு பொருளின் இடப்பெயர்ச்சி சுழி. ஆனால் அப்பொருள் கடந்த தூரம் சுழி இல்லை .
காரணம்: இடப்பெயர்ச்சி தொடக்க நிலைக்கும் முடிவு நிலைக்கும் இடையே உள்ள குறுகிய பாதை ஆகும்.
விடைகுறிப்பு:
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்
V. பொருத்துக.
|
பட்டியல் I
|
பட்டியல் II
|
|
சமகால அளவுகளில்சம இடைவெளியைக் கடக்கும் ஒருபொருளின்
இயக்கம்.
|
|
|
சீரற்ற முடுக்கம்
|
|
|
நிலையான எதிர்மறை
முடுக்கம்
|
|
|
சீரான முடுக்கம்
|
|
விடைகுறிப்பு:
|
பட்டியல் I
|
பட்டியல் II
|
|
சமகால அளவுகளில்சம
இடைவெளியைக் கடக்கும் ஒருபொருளின்
இயக்கம்.
|
|
|
சீரற்ற முடுக்கம்
|
|
|
நிலையான எதிர்மறை
முடுக்கம்
|
|
|
சீரான முடுக்கம்
|
|
VI. மிகச்சுருக்கமான விடையளிக்க.
1. திசைவேகம் - வரையறு.
இடப்பெயர்ச்சி மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்திற்கான இடப்பெயர்ச்சி ஆகும்.
2. தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி ஆகியவற்றை வேறுபடுத்து.
தொலைவு:
- திசையைக் கருதாமல் நகரும் பொருள் கடந்து வந்த உண்மையான பாதையின் அளவு
- 2.ஸ்கேலார் அளவு.
இடப்பெயர்ச்சி:
- ஒரு குறிப்பிட்ட திசையில் இயங்கும் பொருளொன்றின் நிலையில் ஏற்படும் மாற்றம்.
- வெக்டர் அளவு
3. சீரான இயக்கம் குறித்து நீங்கள் அறிந்தது என்ன?
நகரும்பொருள் சம தொலைவுகளைச் சமகால இடைவெளிகளில் கடப்பது ஆகும்.
4.வேகம் மற்றும் திசைவேகம் ஒப்பிடுக.
வேகம்:
- தொலைவு மாறுபாட்டு வீதம்.
- ஸ்கேலார் அளவு.
திசைவேகம்:
- இடப்பெயர்ச்சி மாறுபாட்டு வீதம்
- வெக்டர் அளவு
5. எதிர்மறை முடுக்கம் குறித்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்?
- இறுதித் திசைவேகம், தொடக்க திசை வேகத்தை விடக் குறைவாக இருந்தால், திசைவேகமானது நேரம் செல்லச் செல்ல குறையும் மற்றும் முடுக்கம் எதிர்மதிப்பு பெறும்.
- எதிர் முடுக்கத்தை வேக இறக்கம் (or) ஒடுக்கம் எனலாம்.
6.சீரான வட்ட இயக்கம் முடுக்கப்பட்டதா? உங்கள் விடைக்கு விளக்கம் அளிக்கவும்.
- ஆம், முடுக்கப்பட்டது.
- சீரான வட்ட இயக்கத்தில் திசைவேகத்தின் திசை மாறுபடுவதால் முடுக்கப்பட்ட இயக்கம் ஆகும்.
7. சீரான வட்ட இயக்கம் என்றால் என்ன? சீரான வட்ட இயக்கத்துக்கு இரண்டு உதாரணங்கள் தருக.
- பொருள் ஒன்று வட்டப் பாதையில் மாறாத வேகத்தில் சீராக செல்லுவது,
- எ.கா: பூமி சூரியனைச் சுற்றி வருதல், நிலவு பூமியைச் சுற்றி வருதல்.
VII. விரிவாக விடையளி.
1.வரைபட முறையைப் பயன்படுத்தி இயக்கச் சமன்பாடுகளை வருவி.
இயக்கத்தில் இருக்கும் ஒரு பொருளுக்கு வரைபட முறையின் மூலம் சமன்பாடுகளைப் பெற முடியும்.
வரைபடத்தில் 'D' என்ற தொடக்கப் புள்ளியிலிருந்து 'u ' என்ற திசைவேகத்துடன் இயங்கும் பொருளொன்றின் திசைவேகம் தொடர்ச்சியாக அதிகரித்து 't’ காலத்திற்கு பின் 'B' என்ற புள்ளியை அடைகிறது.
பொருளின் தொடக்க திசைவேகம் u = OD = EA
பொருளின் இறுதித் திசைவேகம் v = OC = EB
காலம் t = OE = DA
ஃ வரைபடத்திலிருந்து AB = DC ஆகும்.
(i) முதல் இயக்கச் சமன்பாடு:
(ii) இரண்டாம் இயக்கச் சமன்பாடு:
வரைபடத்தில் DOEB என்ற நாற்கரத்தின் பரப்பளவு 1 காலத்தில் பொருள் கடந்த தொலைவைக் குறிக்கிறது.
S = நாற்கரத்தின் பரப்பளவு DOEB
= செவ்வகத்தின் பரப்பளவு DOEA + முக்கோணத்தின் பரப்பளவு DAB
iii) மூன்றாவது இயக்கச் சமன்பாடு:
வரைபடத்தில் நாற்கரம் DOEB யின் பரப்பளவானது 'I', காலத்தில் பொருள் கடந்த தொலைவைக் குறிக்கிறது. இங்கு பரப்பு DOEB என்பது சரிவகத்தை குறிக்கும்.
S =சரிவகம் DOEB- யின் பரப்பளவு
2. பல்வேறு வகையான இயக்கங்களை விளக்குக.
- நேரான இயக்கம் நேர்கோட்டில் செல்லும் பொருளின் இயக்கம்.
- வட்ட இயக்கம் - பொருள் வட்டப்பாதையில் செல்லுதல்,
- அலைவு இயக்கம் - ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு முன்னும் பின்னுமாக அல்லது இட வலமாக இயங்கும் பொருள் எ.கா தனி ஊசல் .
- சீரான இயக்கம் - சம தூரத்தை, சம கால இடைவெளியில் கடந்து செல்லும் பொருளின் இயக்கம்.
- ஒழுங்கற்ற இயக்கம் - நேரம் காலம் இவற்றை சாராத பொருளின் இயக்கம். எ.கா பூச்சிகளின் இயக்கம்
VIII. பயிற்சி கணக்குகள்
1. ஒரு பந்து 20 மீட்டர் உயரத்தில் இருந்து மெதுவாக கீழே விடப்பட்டது. அதன் சீரான திசைவேக மாறுபாட்டு வீதம் 10மீ/விநாடி. அது எந்த திசைவேகத்தில் தரையைத் தொடும்? தரையைத் தொடுவதற்கு ஆகும் காலம் எவ்வளவு?
தொடக்க திசைவேகம் u = 0
g = 10 மீ/வி h = 20 மீட்டர் v = காலம் t = ?
2.ஒரு தடகள வீரர் 200 மீட்டர் விட்டம் உடைய வட்டப் பாதையை 40 விநாடியில் கடக்கிறார். 2 நிமிடம் 20 விநாடிக்குப் பிறகு அவர் கடந்த தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி எவ்வளவு?
3.ஒரு பந்தய மகிழுந்து 4 மீ/ விநாடி என்ற சீரான முடுக்கத்தில் பயணிக்கிறது. புறப்பட்ட 10 விநாடியில் - அது கடந்த தூரம் என்ன?
0 Comments:
Post a Comment