TRB - BEO Exam Model Question Paper And Answer - Teacher's Care Academy
TRB - BEO Exam Model Question Paper And Answer - Teacher's Care Academy - Download here
TRB - BEO Exam Model Question Paper And Answer - Teacher's Care Academy
TRB - BEO Exam Model Question Paper And Answer - Teacher's Care Academy - Download here
TN EMIS Attendance App - Update New Version 0.0.11
ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது..

TN EMIS CELL - UPDATE STUDENTS ATTENDANCE APP NEW VERSION 0.011 - CLICK HERE ....
புதிய புத்தகங்களில் அதிக பாடங்கள் - 5, 8ம் வகுப்பு பொது தேர்வு வேண்டாம் - கல்வித்துறை செயலரிடம் அளித்துள்ள மனு
'இளம் மாணவர்களின் படைப்பாற்றலை தடுத்து, அழுத்தம் தரும் மனப்பாட கல்வியை ஊக்குவிக்கும், பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, தமிழக அரசை, தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலர் நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள், பள்ளி கல்வித்துறை செயலரிடம் அளித்துள்ள மனு:
புதிய பாடத் திட்டம், இந்த ஆண்டு அமலான நிலையில், பாட புத்தகங்கள் தாமதமாகவே வழங்கப்பட்டன. புதிய புத்தகங்களில், புதிய முறையில் அதிக பாடங்கள் இருப்பதால், அவற்றை மாணவர்களுக்கு புரிய வைத்து, பாடம் நடத்த கூடுதல் அவகாசம் தேவை.
இந்நிலையில், ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு திடீரென பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது, மாணவர்களின் புரிந்து படிக்கும் திறனை தடுப்பதுடன், அவசரமாக பாடங்களை நடத்தி முடித்து, மாணவர்களுக்கு மனப்பாடம் செய்ய, பயிற்சி அளிக்க துாண்டும் வகையில் உள்ளது. இதன் காரணமாக, மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை துாண்டும் முறைகளை, ஆசிரியர்கள் தொடர முடியாது.
பொது தேர்வுக்கு மனப்பாடம் செய்ய வேண்டியுள்ளதால், அவர்கள் பாடம் சாராத மற்ற இணை செயல்பாடுகளான, விளையாட்டு, யோகா, கைவினை போன்ற, பல்வேறு தனித்திறன் பயிற்சிகளை விட்டு விலகும் அபாயம் உள்ளது.
புதிய பாட திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ள நோக்கத்தையும், இந்த பொதுத்தேர்வு முறை பாதிக்கும். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு விரிவாக ஆலோசனை செய்து, குழந்தைகள் நிலையில் உள்ள, இளம் மாணவர்களின் வயது, அவர்களின் உடல், மனத்திறன்களை மருத்துவ அடிப்படையில் ஆய்வு செய்து, முடிவு எடுக்க வேண்டும். மேலும், அவர்களின் கற்பனையான படைப்பாற்றல், சிந்தனை திறனை வளர்க்கும் வகையில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.
தமிழக அரசின் கல்வி டிவி சேனல்- தகுதியானவர்களை ஒருங்கிணைப்பாளராக நியமித்து கல்வி சேனலின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு
தமிழக அரசின் கல்வி டிவி சேனல் ஒருங்கிணைப்பாளர்மீது நடவடிக்கை எடுக்கவும், புதிய ஒருங்கிணைப்பாளரை நியமித்து கல்வி டிவி சேனலின் தரத்தை மேம்படுத்தவும் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை வளர்நகரைச் சேர்ந்த ஆர்.அருண் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் கே.நீலமேகம் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், "தமிழக அரசு சார்பில் கல்வி டிவி 26.8.2019-ல் தொடங்கப்பட்டது.
இந்த சேனல் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.கல்வி டிவி ஒருங்கிணைப்பாளராக அமலன் ஜெரோம் நியமிக்கப்பட்டுள்ளார்இவர் சேலம் கொளத்தூர் எஸ்.எஸ்.காட்டுவளவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பெயரளவில் பணிபுரிந்து, கடந்த 4 ஆண்டுகளாக பணிக்கு செல்லாமல் சம்பளம் பெற்று வருகிறார்.
கடந்த 2017- 2018 கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில்பயிலும் மாணவர்களின் கற்றல்திறனை மேம்படுத்த, 'தாயெனப்படுவது தமிழ்', 'உலகெல்லாம் தமிழ்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது.இத்திட்டப்படி இசை, நடனம், அனிமேஷன் போன் யுக்திகளை பயன்படுத்தி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணர்களின் கற்றல் திறனை அதிகரிப்பதற்கான சிடி தயாரிப்பு பணி அமலன் ஜெரோமின் மனைவி நடத்தி வரும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.இந்நிறுவனம் சிடியை அரசிடம் கொடுப்பதற்கு முன்பாக யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு பல கோடி ரூபாய் சம்பாதித்தது.இது தொடர்பாக அமலன்ஜெரோம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் 29.1.2019-ல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழக அரசின் கல்வி டிவி ஏழை, எளிய கிராமப்புற குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி கல்விகற்றலை எளிமையாக்கவும், அனைவருக்கும் கல்வி என்றநோக்கத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள நோக்கம். இத்திட்டத்தை நிறைவேற்ற ஆற்றல், அறிவு, ஆளுமை உள்ள ஆயிரக்கணக்கான ஆசியர்களை விட்டு, ஊழல் வழக்கை சந்தித்து வரும் அமலன் ஜெரோமை கல்வி டிவி க்கு ஒருங்கிணைப்பாளராக நியமித்திருப்பது சட்டவிரோதம்.எனவே ஊழல் வழக்கு அடிப்படையில் அமலன் ஜெரோமை பணி நீக்கம் செய்து, தகுதியானவர்களை கல்வி சேனலில் ஒருங்கிணைப்பாளராக நியமித்து கல்வி சேனலின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருக்கிறது.
இந்த மனு இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
-தி இந்து நாளிதழ்
டி' பிரிவு ஊழியா்களை 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!!
தமிழகத்தில் அரசு 'டி' பிரிவு ஊழியா்களை 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தமிழக மருத்துவத்துறை அனைத்து பணியாளா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் சங்கத்தின் தலைவா் வெங்கடாசலம் தாக்கல் செய்த மனு: மருத்துவத்துறையில், மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், ஆய்வக தொழில்நுட்பநா்கள் மற்றும் நிா்வாக அதிகாரிகள் ஆகியோருக்கு 8 மணி நேர வேலை திட்டம் அமலில் உள்ளது.
இதே துறையில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள், சமையல் பணியாளா்கள், ஆண் மற்றும் பெண் செவிலிய உதவியாளா்கள், முடி திருத்துவோா், சலவைப் பணியாளா்கள், அறுவை சிகிச்சை அரங்கு ஊழியா்கள் உள்ளிட்ட 'டி' பிரிவு பணியாளா்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலா் 2015 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தாா்.
அந்த உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் உயா்நீதிமன்றம் எங்களது கோரிக்கையை பரிசீலிக்க சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவிட்டது. ஆனால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆகவே சுகாதாரத்துறை செயலா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மருத்துவத்துறையில் 'டி' பிரிவு ஊழியா்களுக்கு 8 மணி நேர வேலைத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஜெ.நிஷாபானு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், 'டி' பிரிவு ஊழியா்களை 12 மணி நேரம் வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்துவது இல்லை.
1999ஆம் ஆண்டு முதல் 8 மணி நேர வேலைத் திட்டமே அமலில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 'டி' பிரிவு ஊழியா்களை 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனக் கூறி, சுகாதாரத்துறைச் செயலா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து வழக்கு விசாரணையை முடித்துவைத்தாா்
அரசு துறைகள், கல்வி நிலையங்களில் குழந்தைகளை வேலையில் சேர்க்க தடை
சென்னை: 'பள்ளி, கல்லுாரிகள் மற்றும் அரசு துறைகளில், எந்த இடத்திலும், குழந்தை தொழிலாளர் முறை இருக்கக் கூடாது' என, தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும், குழந்தைகளின் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான விதிமுறைகள், தொழிலாளர் நல ஆணையர் வாயிலாக, அனைத்து பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைகள், அரசு துறை நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.விதிமுறைகள் என்ன?
● அனைத்து அலுவலகங்களிலும், அரசு துறைகளிலும், குழந்தை தொழிலாளர் முறை இருக்கக்கூடாது. ஆபீஸ் பாய் வேலை, சாதாரண திறன் சாராத தொழில்களில் ஈடுபடுத்துவது, அலுவலக ஊழியர்களுக்கு உதவியாளர் என, அனைத்து நிலைகளிலும், சிறுவர், சிறுமியரை பணியமர்த்த கூடாது
● நிரந்தரமாகவோ, தினக்கூலி அடிப்படையிலோ, குழந்தைகளை வேலைகள் செய்ய பணிக்கக்கூடாது
● அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள், பல்கலைகள் உள்ளிட்டவற்றின் கேன்டீன்கள், விடுதிகள் போன்றவற்றின் சாதாரண வேலைகளுக்கு கூட, அவர்களை பயன்படுத்த கூடாது
● விதிகளை மீறி, குழந்தைகளை வேலைக்கு பயன்படுத்துவது கண்டறியப் பட்டால், மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு 25 லட்சம் பேர் பங்கேற்பு
சென்னை: நாடு முழுவதும் நேற்று நடந்த, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில், 25 லட்சம் பேர் பங்கேற்றனர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் உள்ள பள்ளிகள், இந்திய பாதுகாப்பு துறை நடத்தும் சைனிக் பள்ளிகள், நவோதயா பள்ளிகள் மற்றும் இந்த பாடத் திட்டத்தில் இணைந்த தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வோர் ஆண்டும், சி.பி.எஸ்.இ., வாரியம் சார்பில், இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று நாடு முழுவதும், ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. நாடு முழுவதும், 110 நகரங்களில், 2,935 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.
தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் மொபைல் போன் இயங்காத வகையில், ஜாமர் வசதிகளுடன் தேர்வு நடத்தப்பட்டது. விண்ணப்பித்த, 28.32 லட்சம் பேரில், 25 லட்சம் பேருக்கு மேல், தேர்வில் பங்கேற்றனர்.மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு அமைக்கப்பட்ட வினாத்தாள் எளிதாக இருந்ததாக, பெரும்பாலான பட்டதாரிகள் தெரிவித்தனர். கணித பகுதி கொஞ்சம் கடினமாக இருந்ததாகவும் சிலர் கூறினர்.
மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களை அருகாமையில் உள்ள பள்ளிகளுடன் இணைப்பா?
தமிழகத்தில் 410 தொடக்கப்பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்து இருக்கிறது.
தமிழகம் முழுவதும் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று சமீபத்தில் சென்னை கோட்டூர்புரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மேற்கொண்ட கணக்கெடுப்பில், மாநிலம் முழுவதும் 410 தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 5-க்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.மேலும் 1,531 தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக உள்ளதும் கணக்கெடுப்பில் தெரியவந்து இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களை அருகாமையில் உள்ள பள்ளிகளுடன் இணைப்பது பற்றி தொடக்கக்கல்வி இயக்ககம் ஆலோசித்து வருகிறது.
அடுத்த கல்வியாண்டில் (2020-21) இருந்து இந்த பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைப்பது அல்லது தற்காலிகமாக மூடுவது குறித்து முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்கும் போது, பழைய பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் இலவச போக்குவரத்து வசதி ஏற்படுத்தித்தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாககல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
How To Use Kavalan - sos Android Mobile App
பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் தனித்திறன் வாய்ந்த மொபைல் ஆப்.
பொதுமக்களின், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக காவல்துறையால் அறிமுகம் செய்யப்பட்ட காவலன் செயலியை ஆண்டிராய்டு மற்றும் ஐபோனில் எளிமையாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஆண்டிராய்டு பிளே ஸ்டோரிலும், ஐபோன் “ஆப் ஸ்டோரிலும்” காவலன் செயலியை பதிவிறக்கம் செய்யலாம்....
மொபைல் எண், பிறந்த தேதி, முகவரியையும் ஏதேனும் 3 முக்கியமான மொபைல் எண்களையும் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
ஆபத்தை எதிர்கொள்ள நேரிட்டால், செயலியில் SOS என்று பொறிக்கப்பட்டுள்ள சிகப்பு நிற பொத்தானை தொட்டவுடன், 5 விநாடிகளில் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் சென்றுவிடும்.
அடுத்த 5 நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விடுவார்கள்.
Kavalan - sos Android Mobile App Download Link....
8 th std- Spoken English Teacher's Module
English language comes to our support in our commercial dealings throughout the globe. It is the language of the latest business management in the world. India’s ability in English has brought glories to many Indian businesses. Thus, English is not only a means for international commerce, but also it has become essential for inter-state commerce and communication.
English can be said as a link language. Different people can communicate with one another with the help of English. Advanced knowledge in science, technology, computers and medicine is available in English. The results of the latest researches and developments come to India through the medium of English. Thus, if English is not given appropriate importance, we can lag behind in the higher fields of study. Experts believe that the world has become one family due to English.
Today, English has been firmly rooted in India. It has become a part of Indian life. Thus, English has gained great importance for the good faith of India. It has become a second language of India for the better progress of the country.
7th std- Spoken English Teacher's Module
english is a language.lt is an intemational language .lt is spoken all over the world.the people of the world communicata with each other by this lainguag .this languag is used in everyday life-at home,in the market,in the office,at school,in college ,etc.lt is also the medicion of communication through email and intemet.moreover, english has been the medium of education in all parts of the world.many important subgect like english,science, economics,history,geography,medicine,engenerring,etc.are taught in english.without understanding english the intemational student cannot get scholarship in america,britain,japan,china or other rich countries.
english language is also importanc to understand literature like poems,stories,essays,dramas or films.the most important world literature is written in english. the politicians should understand english lf they cannot speak english,they cannot know world politica,they cannot communicate their ideas to the foreigners. also,english is used in industries, factories and commerce.therefore,the value and importance of english languag is increasing day by day.lt is used in different aspects of life.in our country, those who do not speak,write or understand english languag,they seem to be backward.thus,this languag has become the languag of human progress and prosperity.
6th std- Spoken English Teacher's Module
English is very important in today's world. It is the most important subject taught in schools. Now the main language for communication is English. If we go in any abroad country, the language through which we communicate is English. I think the language which we all should learn to speak is English. It is prevalent in many countries including America, China, Russia, Indonesia and many others.
The scope of English is so much that even in India, most subjects are taught in English language. So, it means that the Government also thinks that English is the language which everybody should know. Now-a-days the students also tend to concentrate on the subject English. Teachers also wants and thinks that students should pay as much heed to English as possible.
"காபி வித் கமிஷனர்" - Ias அதிகாரிகளை சந்தித்த அரசுப்பள்ளி மாணவர்கள்
காபி வித் கமிஷனர் என்ற பெயரில் மாநகராட்சி ஆணையருடன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி மாதம் ஒருமுறை நடத்தப்படும் என்று ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார், சென்னை ரிப்பன் மாளிகையில், ‘காபி வித் கமிஷனர்’ என்ற பெயரில் பள்ளி மாணவர்களுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. கல்வித்துறை துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், பணிகள் துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன், மாநகர கல்வி அலுவலர் பாரதிதாசன், உதவி கல்வி அலுவலர் முனியன் கலந்துகொண்டனர்.
மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்களது சந்தேகங்களை கேட்டறிந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆணையரிடம் உரையாடினர். அப்போது ஒரு மாணவி, “நாங்கள் அரசு பள்ளி மாணவர்களாக இருப்பதால் அரசு பஸ்சில் எங்களை ஏற்ற மறுக்கின்றனர். பேருந்தை நிறுத்தாமல் செல்கின்றனர்” என்றார்.
ஆணையர் பிரகாஷ், “நீங்கள் அரசு பள்ளியில் படிப்பதை தாழ்வாக கருதவேண்டாம். பல்வேறு உயர் பதவிகளில் இருப்பவர்கள் அரசு பள்ளியில்தான் படித்துள்ளனர். எனவே, அதுபற்றி கவலைப்படாமல் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். இதுபோன்ற பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்படும்” என்றார்.
மற்றொரு மாணவர்: எங்கள் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை. ஆணையர், “ உங்கள் பள்ளியில் இருக்கும் இடத்தில் விளையாட்டு வசதி செய்து தரப்படும். மாணவர்: ‘ஐஏஎஸ் ஆக என்ன செய்ய வேண்டும்’. ஆணையர்: ‘ஐஏஎஸ் படிப்பது கஷ்டமானது அல்ல, இந்தியாவில் உள்ள 80 சதவீதம் ஐஏஎஸ் அதிகாரிகள் பின்தங்கிய வகுப்பில் இருந்து படித்து வந்தவர்கள் தான். எனவே நன்றாக படித்தால் ஐஏஎஸ் ஆகமுடியும்’.
தொடர்ந்து, பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசு பள்ளிகளின் தரத்தினை உயர்த்த, மாணவர்களின் சேர்க்கையை உயர்த்த பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தொழில்நுட்பம் சார்ந்த, திறன் மேம்பாடு போன்ற செயல்கள் குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மியாவாக்கி முறையில் காடுகள் அமைக்க 30 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள்ளாக இதன் பணிகள் துவங்கப்படும்.
மழைக்காலத்திற்காக போடப்பட்ட சாலை அமைப்பதற்கும், பல்வேறு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் தரமானதாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஊழல் முறைகேடு நடந்திருந்தால் சென்னை மழை பெய்த பொழுது வெள்ளம் போன்ற பாதிப்புகளில் சிக்கியிருக்கும். ஊழல் என்பது தவறான குற்றச்சாட்டு. இவ்வாறு அவர் கூறினார்.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை

அங்கன்வாடி குழந்தைகளுக்கு ரூ.16 கோடி மதிப்பில் வண்ண சீருடை வழங்க ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 54,439 அங்கன்வாடி மையங்கள் உள் ளன. இங்கு 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சத் துணவு, சுகாதாரம், முன்பரு வக் கல்வி ஆகியவை வழங் கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டு களாக, அங்கன்வாடி மையங் களுக்கு குழந்தைகள் ஒழுங் காக வருவது இல்லை.
எனவே, அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளின் எண் ணிக்கையை அதிகரிக்கும் விதமாக, ஒரு குழந்தைக்கு ரூ.262.50 மதிப்பில் 2 செட் வண்ண சீருடைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு குழந்தைகளுக்கு வண்ண சீருடை வழங்க ரூ.16.04 கோடி மதிப்பில் 6 லட்சத்து 11 ஆயிரத்து 907 வண்ண சீருடைகள் கொள் முதல் செய்யப்பட உள்ளன. இதற்கு டெண்டர் கோரப் பட்டுள்ளது. இதற்கான அவகாசம் முடியும் நாளான வரும் 31-ம் தேதி மாலை டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது.
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு: தனித்தோ்வா்கள் டிச.11 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகளை எழுத விரும்பும் தனித்தோ்வா்கள் வரும் 11-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வுகளை பழைய பாடத்திட்டத்தில் ஏற்கெனவே எழுதி தோ்ச்சி பெறாத மாணவா்கள், வரும் மாா்ச் மற்றும் ஜூன் பருவங்களில் நடைபெறும் பொதுத் தோ்வுகளை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம். கடந்த ஆண்டு நேரடித் தனித்தோ்வா்களாக பிளஸ் 1 வகுப்பு தோ்வெழுதி தோ்ச்சி பெறாதவா்கள், தற்போது பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வெழுதுவதற்கும், பிளஸ் 1 வகுப்புத் தோ்வில் தோ்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சோ்த்து விண்ணப்பிக்கலாம்.
மேலும், தனித்தோ்வா்கள் மீண்டும் தோ்வெழுத, சேவை மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவா்கள் தற்போது பயிலும் பள்ளிகள் மூலமே தோ்வெழுதுவதற்கு உரிய கட்டணத்தைச் செலுத்தலாம். மாணவா்கள் பிளஸ் 1 வகுப்பு பொதுத் தோ்வை ஏற்கெனவே நேரடித் தனித் தோ்வராக எழுதி தோ்ச்சிப் பெற்ற தோ்வா்களும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தோ்வெழுத விண்ணப்பிக்கலாம். தோ்வு எழுத விரும்புவோா் டிசம்பா் 11 முதல் 20-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தத் தோ்வுகள் சாா்ந்த விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவா்கள் அறிந்து கொள்ளலாம் என அதில் கூறியுள்ளாா்.