Corona Update - இன்றைய ( 06.07.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.


                               



தமிழகத்தில் ( 06.07.2021 ) இன்று 3,479 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 34,477



சென்னையில் இன்று ஒரே நாளில் 209 பேருக்கு கொரோனா தொற்று.

12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 67

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:



கோவை - 407

ஈரோடு - 311

சேலம் - 228

திருப்பூர் - 201

மாவட்ட வாரியான பாதிப்பு.( 06.07.2021 )




மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 3,855


இன்றைய உயிரிழப்பு : 73

சென்னை மட்டும் - 5

இணைநோய் இல்லாதவர் - 18


NEET 2021 - தேர்வு தேதி அறிவிப்பு.


 

2021ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 5ஆம் தேதி நடத்தப்படும் 
இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் Pen & Paper Mode மூலமாக எழுதலாம் 

- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.




The NEET ( UG ) 2021 is going to be conducted by NTA for admission to MBBS , BDS , BAMS , BSMS , BUMS and BHMS Courses as per the relevant norms / guidelines / regulations notified by the concerned Regulatory Bodies . The Result of NEET ( UG ) - 2021 may be utilized by other Entities of Central / State Governments ( including Indian Nursing Council / Nursing Colleges / Schools , JIPMER ) for counselling / admission to relevant courses ( including B.Sc. ( Nursing ) and B.Sc. ( Life Sciences ) in accordance with their rules / norms / guidelines . NEET ( UG ) - 2021 will be conducted in 11 languages , including Hindi and English through Pen & Paper mode on 05 September 2021 . The Information Bulletin containing detailed information regarding the Test , syllabus , eligibility criteria for age , reservation , categorisation of seats , examination fee , cities of examination , State Code , etc. will be available shortly on the website https://ntaneet.nic.in , when the submission of the Application Form for NEET ( UG ) 2021 starts . The candidates who desire to appear in NEET ( UG ) 2021 are advised to keep visiting the websites : https://nta.ac.in and https://ntaneet.nic.in




JEE MAIN EXAM ANNOUNCED - ஜே.இ.இ. மெயின் தேர்வு தேதி அறிவிப்பு! - PUBLIC NOTICE 06 July 2021 - Inviting Online Application for postponed April and May sessions (Session 3 and 4) of JEE (Main)-2021 - Reg

JEE MAIN EXAM ANNOUNCED - ஜே.இ.இ. மெயின் தேர்வு தேதி அறிவிப்பு! - PUBLIC NOTICE 06 July 2021 - Inviting Online Application for postponed April and May sessions (Session 3 and 4) of JEE (Main)-2021 - Reg

ஜே.இ.இ. மெயின் தேர்வு தேதி அறிவிப்பு! பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு ஜூலை 20 முதல் 25 மற்றும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும்.

PUBLIC NOTICE 06 July 2021

Sub: Inviting Online Application for postponed April and May sessions (Session 3 and 4) of JEE (Main)-2021 - Reg.

After receiving numerous representations from the candidates to re-open the Online Application window for JEE (Main) - 2021 April Session, it has been decided to provide another opportunity to apply for/withdraw from the remaining JEE (Main)-2021 Sessions.

The candidates are required to note that (postponed) April Session (Session-3) will be conducted only for Paper 1 (B.E/B.Tech.). The candidates interested to appear in Paper 2A (B.Arch.) and/or Paper 2B (B. Planning) need to apply for the same papers only for (postponed) May Session
(Session-4). Note: A candidate has the option to apply for one Session or more than one Sessions (April May 2021) together and pay the exam fee accordingly. In other words, if a candidate wishes to apply only for one Session, he she has to pay the Examination Fee only for that Session during the application period.

The candidates who have applied earlier for April/May Session can modify their particulars (Session, Category, Subject, etc.) during the period from 6 to 8 July 2021 for (postponed) April Session and 9 to 12 July 2021 for (postponed) May Session.

Due to limited time, there will be no correction window available after the Application Form closes on 8 July 2021 for (postponed) April Session and on 12 July 2021 for (postponed) May Session. Therefore the candidates have to be extremely careful.

A candidate can also withdraw from (postponed) April May sessions by following the procedure detailed in the Application Form.

The Candidates are advised to keep visiting the official websites of NTA (www.nta.ac.in) and (jeemain.nta.nic.in) for the latest updates. For further clarification related to JEE (Main)-2021 the candidates can also contact 011-40759000 or email at jeemain@nta.ac.in.


Govt -job- Deputy Director ,Horticulture officer, -20-posts

Govt -job- Deputy Director ,Horticulture officer, -20-posts

இலவச சேர்க்கை திட்டம் அரசு ரூ.500 கோடி பாக்கி!


இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தில், தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய கல்வி கட்டணம் 500 கோடி ரூபாய் வரை பாக்கி உள்ளது.

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஐந்து முதல் 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடம் அளித்து, இலவச கல்வி வழங்க வேண்டும். அதற்கான கல்வி கட்டணத்தை, மத்திய அரசே மாநில அரசுக்கு வழங்க வேண்டும். தமிழகத்தில் இந்த சட்டத்தின்படி, மூன்றரை வயது முடிந்த குழந்தைகள், எல்.கே.ஜி.,யில் சேர்க்கப்படுகின்றனர். மத்திய அரசின் விதிப்படி, ஐந்து வயதான குழந்தைகள் தான், ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும்.எனவே, தமிழக அரசின் நடைமுறை, இந்த விதிகளுக்கு முரணாக இருப்பதால், இலவச சேர்க்கைக்கான கல்வி கட்டணத்தை, மத்திய அரசிடம் தமிழகம் பெறுவதில்லை. மாநில அரசின் நிதியில் இருந்தே, பள்ளிகளுக்கு கட்டணம் செலுத்தி வருகிறது.இந்த வகையில், இரண்டு ஆண்டுகளாக, தனியார் பள்ளிகளில் இலவசமாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, அரசு வழங்க வேண்டிய கல்வி கட்டண தொகை பாக்கி 500 கோடி ரூபாயை எட்டியுள்ளது.தமிழக அரசுக்கு நிதி பற்றாக்குறை உள்ளதால், இந்த தொகையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான இலவச மாணவர் சேர்க்கை பணிகள், நேற்று முதல் துவங்கிஉள்ளன. இதையடுத்து, முந்தைய ஆண்டுகளுக்கான கல்வி கட்டண பாக்கியை, அரசு வழங்குமாறு பள்ளி நிர்வாகிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க செயலர் நந்தகுமார் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!


மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை பெற்ற பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் கொரோனா தொற்றால் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு வரும் நிலையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும் பல்வேறு தளர்வுகள்அளிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. கொரோனா மூன்றாவது அக்டோபர், நவம்பரில் உண்டாகும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பள்ளிகள் திறப்பதில் மேலும் சிக்கல் நீடித்துள்ளது. இந்நிலையில் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பேசிய அவர் , “தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்பதே பரவலாக மக்கள் கருத்தாக உள்ளது. இந்த கருத்துக்களே அதிகம் வருவதாக ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சரின் முடிவுகளின் அடிப்படையிலேயே நீட் தேர்வு குறித்த நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்றின் மூன்றாம் கட்ட அலை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

Recruitment Notice - Clerk, steno, Division clerk, Library Assistant, Mechanic, Head Clerk, Technical Asst, Programmer, 126 permanent post

Recruitment Notice - Clerk, steno, Division clerk, Library Assistant, Mechanic, Head Clerk, Technical Asst, Programmer, 126 permanent post

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர் சேர்க்கை – ஜூலை 12 வரை இணைய வழி மூலம் விண்ணப்பிக்கலாம்.


தமிழகத்தில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான பாலிடெக்னிக் படிப்பின் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. ஜூலை 12ம் தேதி வரை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கை:

10ம் வகுப்புக்குப் பிறகு விரைவாக வேலைகளில் சேர விரும்பும் மாணவர்கள் பாலிடெக்னிக் படிப்புகளை தேர்ந்தெடுக்கின்றனர். பாலிடெக்னிக் கல்விக்கு குறைந்த செலவுகளே ஏற்படும். மேற்படிப்புகளை

தொடர முடியாதவர்கள் மதிப்பெண்கள் குறைவால் 11ம் வகுப்பில் வேண்டிய பாட பிரிவில் சேர முடியாதவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளை தேர்ந்தெடுத்து அதிகபட்சம் 2 ஆண்டுகள் கல்வி பயில்கின்றனர். பிறகு தொழில் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்கின்றனர்.

CLICK HERE-OFFICIAL ADVERTISEMENT

பாலிடெக்னிக் படிப்பை முடித்தவர்கள் பொறியியல் படிப்புகளில் சேரலாம் மற்றும் குறைந்த செலவில் அவற்றை முடிக்க முடியும். பாலிடெக்னிக் படிப்புகள் அதிக தொழில் நோக்கம் கொண்டவை. படிக்கும் போதே இலவச தொழில் பயிற்சியையும் மாணவர்கள் பெறுகின்றனர். தற்போது காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் 2021-22ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. ஜூலை 12 வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கல்வி கட்டணமாக 2,122 ரூபாய் பெறப்படுகிறது.

மேலும் www.tngptc.in அல்லது www.tngptc.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 செலுத்தி விண்ணப்பிக்கலாம் எனவும் பட்டியல் இன மாணவர்களுக்கு பதிவு கட்டணம் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் போன்ற பாடப்பிரிவுகள் இரண்டு சுழற்சிகளிலும், கணிப்பொறியியல் ஒரு சுழற்சியிலும் மாணவர்கள் சேரலாம் என காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்ட நிலையில் மாற்றுப் பணியில் இருப்பவர்களை விடுவிக்க அதிகாரிகள் தயக்கம்



பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்ட நிலையில் மாற்றுப் பணியில் இருப்பவர்களை விடுவிக்க அதிகாரிகள் தயக்கம் - அரசு பள்ளி ஆசிரியர்கள் வேதனை




பள்ளி துணை ஆய்வாளர் பதவி சீனியர் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.


தமிழக கல்வித்துறையில் பள்ளி துணை ஆய்வாளர் ( டி.ஐ. , க்கள் ) பதவியில் சீனியர் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் ( டி.இ.ஓ. , க்கள் ) பட்ட தாரி ஆசிரியர் அந்தஸ்தில் டி.இ. , க்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். இவர்கள் அரசு மற்றும் உதவிபெறும் 6 , 7 , 8 ம் வகுப்பு ஆசிரியரின் கற்பித்தல் திறன் , பள்ளி ஆண்டாய்வு , சேர்க்கை நீக்கப்பதிவேடுகள் ஆய்வு , ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்களின் உண்மை தன்மை உள்ளிட்ட ஆய்வுகளில் ஈடுபடுவர்.

இப்பதவிகளில் உயர்நிலை தலைமையாசிரியர் பதவி உயர்வு பேனலில் உள்ள சீனியர் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண் டும். ஆனால் தற்போது 90 சதவீதம் டி.ஐ. , க்கள் ஜூனியர் ஆசிரியராக உள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில் , " அ.தி. மு.க. , ஆட்சியில் அரசியல் பின்னணியில் பலர் இப்பதவிகளை கைப்பற்றி உள்ளனர்.

ஜூனியர் நிலையில் உள்ளவர்களால் சீனியர் ஆசிரியர்கள் திறனை ஆய்வு செய்வதில் பல மாவட்டங்களில் ' ஈகோ ' சர்ச்சை எழுகிறது. இதை தவிர்க்க தகுதியுள்ள சீனி யர்களை இப்பதவியில் நியமிக்க கமிஷனர் நந்தகுமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்றனர்.


ஐ.டி.ஐ., 'அட்மிஷன்' பதிவு துவக்கம்


 சென்னை:எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், திறன் வளர்ப்பு பயிற்சி மேற்கொள்ளும் வகைகளில், ஐ.டி.ஐ., என்ற தொழிற்பயிற்சி நிலையங்களில், பல்வேறு படிப்புகள் நடத்தப்படுகின்றன.

நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்ககம் அறிவித்துள்ளது. அரசு, அரசு உதவி மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,க்களில் சேர, www.skilltraining.tn.gov.in என்ற, இணையதளம் வழியே வரும் 28க்குள் விண்ணப்ப பதிவு மேற்கொள்ள வேண்டும்.சந்தேகங்கள் இருந்தால், 94990 55612 மற்றும் 94990 55618 என்ற எண்களில், 'வாட்ஸ் ஆப்' மற்றும் 'வாய்ஸ் கால்' வழியே தொடர்பு கொள்ளலாம்.




டி.சி., இன்றி மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் அதிகரிப்பு


 சென்னை:மாற்றுச் சான்றிதழ் இன்றி மாணவர்களை சேர்க்க, அரசு அனுமதித்து உள்ளதால், தனியார்பள்ளி மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர்வது அதிகரித்துள்ளது.



அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, கடந்த கல்வி ஆண்டுக்கான கட்டணப் பாக்கியை வசூலித்து, அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாணவர்களை தரம் உயர்த்தும் பணிகளை மேற்கொண்டு உள்ளன.இதில், கடந்த ஆண்டு கட்டணம் செலுத்தாமல், பாக்கி உள்ளவர்களில் பலர், கட்டணத்தை செலுத்துவதற்கு பதில், வேறு பள்ளிகளுக்கு மாறி வருகின்றனர்.



பல மாவட்டங்களில், தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோர், அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர். 'கட்டணப் பாக்கி செலுத்தினால் மட்டுமே, மாற்றுச் சான்றிதழ்களை வழங்குவோம்' என, தனியார் பள்ளி நிர்வாகத்தினர் கெடுபிடி காட்டுவதால், மாற்றுச் சான்றிதழ் வாங்காமலேயே, மாணவர்கள் பிற பள்ளிகளுக்கு மாறுகின்றனர்.



தமிழக அரசின் சார்பில், 2010ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளில் சேர்வதற்கு மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை என, கூறப்பட்டுள்ளது. இதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என, அ.தி.மு.க., ஆட்சியில், பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.அந்த உத்தரவை பயன்படுத்தி, தற்போது மாற்று சான்றிதழ் இன்றி, அரசு பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.



இதனால், பல ஆயிரம்கட்டணப் பாக்கியில் இருந்து, பெற்றோர் தப்பித்துள்ளனர். அதேநேரம், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளோ, மாணவர்களிடம் கட்டணம் பெற முடியாமல்,நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.




எம்.பில்., படிப்பை நடத்துவதா; வேண்டாமா? ; அரசின் உத்தரவால் பல்கலைகள் குழப்பம்!



சென்னை : தமிழக அரசின் மாறுபட்ட அறிவிப்பு மற்றும் புதிய கல்வி கொள்கை மீதான எதிர்ப்பால், எம்.பில்., படிப்பை நடத்துவதா, வேண்டாமா என, பல்கலைகள் குழப்பம் அடைந்துள்ளன. படிப்பை நடத்தினால், தமிழக பல்கலைகளுக்கு மத்திய அரசின் நிதியுதவி பாதிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

முதுநிலை பட்டதாரிகளுக்கான, எம்.பில்., படிப்புக்கு வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டதால், புதிய கல்வி கொள்கைப்படி, எம்.பில்., படிப்புக்கு, நடப்பு கல்வி ஆண்டு முதல், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டாம் என, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானிய குழு, உயர்கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதைப் பின்பற்றி பல மாநிலங்கள், எம்.பில்., படிப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

ஆலோசனை

தமிழகத்தில், சென்னை பல்கலையில் நடந்த, உயர் கல்வித்துறை செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்ற சிண்டிகேட் கூட்டத்திலும், எம்.பில்., மாணவர் சேர்க்கையை நிறுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில், எம்.பில்., படிப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழக அரசு, புதிய கல்வி கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதால், தமிழகத்தில் எம்.பில்., படிப்பை நிறுத்தினால், புதிய கல்வி கொள்கையை ஏற்று கொண்டதாகி விடும் என, அதிகாரிகள் மத்தியில் கருத்துகள் பரிமாறப்பட்டன. இதையடுத்து, 'எம்.பில்., படிப்பு நிறுத்தப்படாது; சென்னை பல்கலை உட்பட, அனைத்து பல்கலையிலும் தொடரும்' என, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை அதிகரித்து உள்ளது.



பணி நியமனம்

இதுபற்றி, பெயர் வெளியிட விரும்பாத பேராசிரியர்கள் கூறியதாவது: ஏற்கனவே, எம்.பில்., படித்து முடித்தவர்களுக்கு, உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட பணி வாய்ப்புகள் இல்லை. ஆராய்ச்சிக்கான உதவி தொகையும் கிடைப்பதில்லை. 'நெட், செட்' தேர்வில் தேர்ச்சி மற்றும் பிஎச்.டி., படிப்புகளின் அடிப்படையிலேயே, உதவி பேராசிரியர் பதவிகளுக்கு, பணி நியமனம் நடக்கிறது. தற்போதைய நிலையில், எம்.பில்., படிப்பில் சேர்வது, அதற்கு கட்டணம் செலுத்துவது என, அதற்கான காலமும், செலவும் எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு உதவியாகஇருக்காது.

இந்த காலகட்டத்தில், பிஎச்.டி., படித்தாலாவது, அது பட்டதாரிகளின் வேலைவாய்ப்புக்குஉதவும். மேலும், யு.ஜி.சி.,யின் உத்தரவுகளை பின்பற்றினால் மட்டுமே, மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் பேராசிரியர்களுக்கான சம்பளம், ஆராய்ச்சி உதவித்தொகை உள்ளிட்டவைபல்கலைகளுக்கு கிடைக்கும். தமிழக பல்கலைகள், ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ளதால்,யு.ஜி.சி., உத்தரவை மீறி, எம்.பில்., படிப்பை நடத்தும் போது, யு.ஜி.சி.,யின் நிதியுதவி பாதிக்கும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


அகவிலைப்படி உயர்வு எப்போது?


அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகலாம் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது

வனத்துறை காலியிடங்கள் நிரப்ப ஐகோர்ட் உத்தரவு


வனத்துறை காலியிடங்கள் நிரப்ப ஐகோர்ட் உத்தரவு

தமிழக வனத்துறையில் காலிப் பணியி டங்களை நிரப்பக் கோரிய வழக்கில், ‘ஆட் சேர்ப்பை விரைவில் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.

மதுரை கே.கே.நகர் வெரோனிகா மேரி தாக் கல் செய்த பொதுநல மனுவில், 'தமிழக வனத் துறையில் வனக்காவலர், வனக்காப்பாளர் அனு மதிக்கப்பட்ட பணியிடங்கள் 1,700. இதில் 644 பணியிடங்கள் காலியாக உள்ளன. முன்னுரிமை அடிப்படையில் வனக்காவலர், வனக்காப்பாளர் மற்றும் இதர காலிப் பணியிடங்களை நிரப்ப

உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார். தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் உத்தரவு: கொரோனா பரவல் காரணமாக 16 மாதங்க ளாக ஆட்சேர்ப்பில் பின்னடைவு ஏற்பட்டிருக் கலாம். வனத்தை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்பு முயற்சியை தடுக்கவும், அரசு உடனடி நடவ டிக்கை எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆட்சேர்ப்பை எவ்வளவு விரைவில் நடத்த முடியுமோ, அவ்வளவு விரைவில் நடத்துவதை உறுதி செய்ய மாநில அரசை இந்நீதிமன்றம் வலி யுறுத்துகிறது. வழக்கை பைசல் செய்கிறோம். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஜூலை 26 முதல் 40 மையங்களில் போலீஸ் உடற்தகுதி தேர்வு


ஜூலை 26 முதல் 40 மையங்களில் போலீஸ் உடற்தகுதி தேர்வு தமிழக போலீஸ் துறையில் இரண்டாம் நிலை காவலர் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 26 முதல் 40 மையங்களில் உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள், இரண்டாம் நிலை காவலர்கள், தீயணைப்பாளர் என 11,741 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கடந்தாண்டு டிச.,13ல் நடந்தது.
இதன் முடிவு கடந்த பிப்.,19ல் வெளியிடப்பட்டது.வெற்றி பெற்றவர்களுக்கு மார்ச் 8 ல் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு நடத்தப்பட இருந்தது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் ஜூலை 26 முதல் இரண்டாம் கட்ட தேர்வு நடக்க உள்ளதாக சீருடை பணியாளர் தலைவர் சீமா அகர்வால் அறிவித்துள்ளார். இதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 40 மையங்களை தயாராக வைத்திருக்கும்படி கமிஷனர்கள், எஸ்.பி.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


மின்வாரியத்தில் பணியிடமாற்றம் கோரி ஜூலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க உத்தரவு


மின்வாரியத்தில் பணியிடமாற்றம் கோரி ஜூலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க உத்தரவு

RTE-மாணவர் சேர்க்கை -தகுதியான விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆக 9-ம் தேதி இணையதளத்திலும், பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும்- மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் - அறிவிப்பு


தனியார் பள்ளிகளில்இலவச& கட்டாயக்கல்விஉரிமைச்சட்டத்தின்கீழ்மாணவர்சேர்க்கை. 
ஜூலை 5 முதல் ஆகஸ்ட்3 வரைhttps://t.c o/EjjzZfEuwx இணையதளத்தில் நடைபெறும்.

💢தகுதியான விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்டவிண்ணப்பங்கள்ஆக9-ம்தேதிஇணையதளத்திலும், பள்ளியின்தகவல்பலகையிலும்வெளியிடப்படும்.

- மெட்ரிக்பள்ளிகள்இயக்குநர்கருப்பசாமிஅறிவிப்பு

ஜூலை மூன்றாவது வாரத்தில் பள்ளிகளை திறக்கவேண்டும் - தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை


கற்றல் முடக்கம்- மாணவர்கள் பாதிப்பு.
கொரோனா பெருந்தொற்று குறைந்துவருவதால் ஜூலை மூன்றாவது வாரத்தில் பள்ளிகளை திறக்கவேண்டும்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர்
 பி.கே.இளமாறன்
வேண்டுகோள் .


கடந்த மார்ச் 2020 முதல் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு 2021 சிலநாட்கள் 10,12 ஆம் வகுப்பு மாணவர்கள் தவிர மற்றவகுப்பு மாணவர்களை பள்ளிகளுக்கு வரச்சொல்லவில்லை.
    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கற்றல்-கற்பித்தல் பணி முடக்கத்தில் உள்ளது. கல்வித்தொலைகாட்சி - இணையவழி கல்வியென்பது ஒருவழிப்பயிற்சியாகும் அது முழுமையாகப் பயன்தராது. கொரோனா பெருந்தொற்று தமிழ்நாட்டில் 36 ஆயிரத்தைக் கடந்த நிலையில் மாண்புமிகு. தமிழகமுதல்வர் அவர்களின் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் 90 %சதவீதம் குறைத்தது தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பாராட்டி வரவேற்கின்றோம். மக்கள் வாழ்க்கையும் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறார்கள்.அனைத்துசெயல்களும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. ஆகையால் மாணவர்களின் நலன்கருதி முடங்கிப்போயிருக்கும் கற்றல்பணியினை தொடங்கப் பள்ளிகளை திறக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகிறது. குறிப்பாக தொடக்கக்கல்வி மாணவர்கள் எழுத்துகளே மறந்துபோகும் நிலை உருவாகியுள்ளது. உயர்,மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறைந்துள்ளது. எனவே முற்றிலுமாக கொரோனா தொற்று குறையாதக் காரணத்தினால் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை தினந்தோறும் 5 பாடவேளைகளுடனும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையிலும் பள்ளிகள் இயங்குவதற்கு ஆவனச் செய்ய வேண்டும். மேலும் பள்ளிகள் திறந்தவுடன் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆலோசனைகளை பெற்றோர்களுக்கு வழங்கிடவேண்டும்.மாணவர்கள் நெடுங்காலம் கற்றல் தொடர்பில்லாமல் இருந்துவருவதால் முதல் ஒரு வாரம் மாணவர்களுடன் ஆசிரியர்கள் கலந்துரையாடி மனரீதியாகக் கற்றல் சூழலுக்கு கொண்டுவந்தபிறகு பாடங்களை நடத்த அறிவுறுத்தவேண்டும்.தேவையான அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் பாதுகாப்பு உபகரணங்கள் சானிடைசர், சோப்பு உள்ளிட்டவைகளுடன் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சத்துமாத்திரைகள் வழங்கிடவேண்டும். தற்போதையச்சூழலில் கல்வியின் தேவையறிந்து மாணவர்களின் நலன்கருதி பள்ளிகளை ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்கிட. ஆவனச்செய்ய வேண்டி
 மாண்புமிகு. முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
 பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716




Recent Posts

Total Pageviews

Code

Blog Archive