PG TRB Computer Instructors Grade - I (PG Cadre) for the year 2018-2019 Selection list

PG TRB Computer Instructors Grade - I (PG Cadre) for the year 2018-2019 Selection list

Flash News : 13 ஆம் தேதி முதல் பொங்கல் விடுமுறை? நாளை அறிவிப்பு!

Flash News : 13 ஆம் தேதி முதல் பொங்கல் விடுமுறை? நாளை அறிவிப்பு!

தமிழகத்தில் 13 ஆம் தேதி முதல் பொங்கல் விடுமுறை அறிவிப்பது குறித்து நாளை முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.

பொங்கலுக்கு எத்தனை நாள் விடுமுறை - அமைச்சர் செங்கோட்டையன் பதில்

பொங்கலுக்கு எத்தனை நாள் விடுமுறை - அமைச்சர் செங்கோட்டையன் பதில்

பள்ளி தலைமை ஆசிரியரின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்

பள்ளி தலைமை ஆசிரியரின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அமைந்துள்ள கபிலர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.


இப்பள்ளியில் கடந்த நவம்பரில் தலைமையாசிரியராக அருள்ஜோதி என்பவர் பொறுப்பேற்றார். இவர், பணியில் சேர்ந்த நாள் முதல் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளியில் அளவிற்கு அதிகமாக முடி வைத்திருந்த பிளஸ் ஒன், பிளஸ்டூ மாணவர்களுக்கு தமது சொந்த செலவில் கடந்த மூன்று நாட்களாக இரண்டு சிகை அலங்கார கலைஞர்களை பள்ளிக்கே வரவழைத்து முடி திருத்தம் செய்துள்ளார். 


பள்ளி தலைமை ஆசிரியரின், இத்தகைய செயலுக்கு பெற்றோர், மற்றும் சக ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். விரைவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், சிகை அலங்காரம் மேற்கொள்ளப்படும் என்றும் தலைமை ஆசிரியர் அருள்ஜோதி தெரிவித்தார். 

அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு நான்தான் தாய் மாமன் !... ஆந்திர முதலமைச்சர் உருக்கம் !!

அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு நான்தான் தாய் மாமன் !... ஆந்திர முதலமைச்சர் உருக்கம் !!



ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்று  ஜெகன் மோகன் முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்தது பல அதிரடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இதன் முதல் படியாக அரசு பள்ளிகளில் வழங்கக்கூடிய மதிய உணவு திட்டத்தில் 6 நாட்களுக்கும் வெவ்வேறு விதமான உணவு வகைகள் வழங்குவதோடு ஒரு இனிப்பு மற்றும் வேகவைத்த முட்டை வழங்கப்பட்டு வருகிறது.



இதே போல் ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு பிள்ளையும் கட்டாயம் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பக் கூடிய தாய்மார்களுக்கு ஆண்டுக்கு 15,000  ரூபாய் வழங்கும் அம்ம வடி  திட்டத்தை முதலமைச்சர்  ஜெகன்மோகன் ரெட்டி சித்தூரில் தொடங்கிவைத்தார். 

அப்பொழுது பேசிய ஜெகன்மோகன் ,  குடும்ப வறுமையின் காரணமாக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அவர்களின் வருங்காலத்தை கேள்விக்குறியாக மாற்றக்கூடிய நிலை உள்ள நிலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால் ஆண்டுக்கு 15,000 ரூபாய் அந்த  தாயாரை கவுரவிக்கும் விதமாக  வழங்கப்பட்டுள்ளது. 


இதன் மூலமாக 82 லட்சம் மாணவ மாணவிகளுக்கும் 42 லட்சம் தாயார் பயன் அடைகின்றனர். இதற்காக அரசு 6456 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொண்டு மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. 


அதில் அன்று – இன்று திட்டத்தின்கீழ் 45 ஆயிரம்  அரசு பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள்  அமைத்து தரப்படும். அதன்படி 15715 பள்ளிகள் புனரமைக்கப்பட உள்ளது. இதில் கழிவறை, சுத்தமான குடிநீர்,  நாற்காலிகள், மின்விசிறி, சுற்றுசுவர், தரமான கட்டிடம் , பெயிண்டிங் செய்து அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிற்து.

வரும் கல்வியாண்டில் பள்ளி திறக்கும் அதே நாளில்  ஒவ்வொரு பிள்ளைக்கும் ஸ்கூல் கிட் வழங்கப்பட உள்ளது. அதில் 3 செட் சீருடை,  புத்தகம், ஷூ ,  பெல்ட்,  பை ஆகியவை அடங்கிய கிட் வழங்கப்பட உள்ளது. மேலும் மதிய உணவு தினமும் ஒரே சாப்பாடு வழங்கினால் அது பிள்ளைகளுக்கு  அறுவெறுப்பை ஏற்படுத்து நிலை உள்ளதால் தினந்தோறும் ஒரு மெனு வழங்கப்பட உள்ளது. 



அதில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை பருப்பு சாதம்,  புளியோதரை, வெஜிடபிள் சாதம், கிச்சிடி,  கீரை சாதம், சாம்பார் சாதம் மற்றும் ஒரு இனிப்பு மற்றும் கடலை மிட்டாய் வழங்கப்பட உள்ளது. அத்துடன் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் வேகவைத்த முட்டை வழங்கப்படும். 

இவை அனைத்தையும் ஒரு தாய் மாமனாக இருந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளேன் என்றும் ஜெகன் மோகன் தெரிவித்தார்.

தமிழ்வழி இட ஒதுக்கீடு - Tnpsc புதிய முடிவு!!

தமிழ்வழி இட ஒதுக்கீடு - Tnpsc புதிய முடிவு!!

TNPSC தேர்வில் தமிழ்வழிக்கல்வி படித்தவர்களுக்கு 20 சதவீத பணிவாய்ப்பு வழங்கப்படுகிறது.
இது கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட நல்ல முடிவாகும்.

ஆனால் இதிலும் அவர்கள் பணிவாய்ப்பு பாதிக்கும் வகையில் ஆங்கில வழியில் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் தொலைநிலைக் கல்வியில் ஏதோ ஒரு பட்டத்தை தமிழ்வழி பயின்று சான்றிதழ் பெற்று பணியில் சேர்கின்றனர்.

இதனை தவிர்க்கும் வகையில் பள்ளி முதல் கல்லூரி வரை தமிழ்வழி பயின்றவர்கள் மட்டுமே 20 சதவீத இடங்களைப் பெறும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.

பள்ளி தலைமை ஆசிரியை சாக்கடையில் சடலமாக மீட்பு

பள்ளி தலைமை ஆசிரியை சாக்கடையில் சடலமாக மீட்பு

பகுதிநேர M.Phil பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியானவை எவை? RTI பதில்!

பகுதிநேர M.Phil பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியானவை எவை? RTI பதில்!

Teachers Wanted...

Teachers Wanted...



பருவ விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் நாளில் விடுப்பு ( Cl , El ) எடுக்கலாமா? பள்ளிக்கல்வித்துறை Rti பதில்!

பருவ விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் நாளில் விடுப்பு ( Cl , El ) எடுக்கலாமா? பள்ளிக்கல்வித்துறை Rti பதில்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கணக்கீட்டாளர் வேலை

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கணக்கீட்டாளர் வேலை
அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள கணக்கீட்டாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரேவற்படுகின்றன.




பணியிடங்கள்: தமிழ்நாடு முழுவதும்

நிறுவனம்: தமிழ்நாடு மின்சார வாரியம்

பணி: கணக்கீட்டாளர்

காலியிடங்கள்: 1300

சம்பளம்: மாதம் ரூ. 19,500 - 62,000

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: கலை, அறிவியல் அல்லது வணிகவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன், அளவீட்டு கருவிகள் மூலம் கணக்கீடு செய்வதற்கும், மீதிவண்டி ஓட்டுவதற்கும் தெரிந்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 , டிப்ளமோ தேர்ச்சி பெற்ற பின்னர் பட்டப்பிடிப்பில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பத்தாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.




தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுக் கட்டணம்: பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500, அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2020/1/10/Assessor_Notification_and_Annexures_2019-2020.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.




ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.02.2020

கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா? அழைக்கிறது காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி

கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா? அழைக்கிறது காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மற்றும் செங்கற்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிகளை நிரப்புதவற்கான புதிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பயன்பெறவும்.




நிறுவனம்: மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்.

மொத்த காலியிடங்கள்: 80

பணியிடம்: காஞ்சிபுரம்

பணி: அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்

வங்கிகள் வாரியான காலியிடங்கள் விவரம்:

வங்கி: காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி
பணி: அலுவலக உதவியாளர் - 39
சம்பளம்: மாதம் ரூ.10,500 - 31,650/-

பணி: ஓட்டுநர் - 05
சம்பளம்: மாதம் ரூ.11,250 - 33,075




வங்கி: நகர கூட்டுறவு வங்கி
பணி: அலுவலக உதவியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.9,200 - 25,250

வங்கி: நகர கூட்டுறவு கடன் சங்கம்
பணி: அலுவலக உதவியாளர் - 07
சம்பளம்: மாதம் ரூ.11,000 - 34,700

வங்கி: தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி
பணி: அலுவலக உதவியாளர் - 11
சம்பளம்: மாதம் ரூ.12,300 - 35,150




பணி: அலுவலக உதவியாளர்- 17
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 27,610

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதும், இலகுரக ஓட்டுநர் பணியில் 2 ஆண்டு அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் காஞ்சிபுரம் மற்றும் செங்கற்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் மேல் கூறப்பட்டுள்ள பணிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். http://kpmdrb.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து சம்மந்தப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள வங்கிகளின் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.




பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவுச் சங்கங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், எண்.5A, வந்தவாசி சாலை, ஒருங்கிணைத்த கூட்டுறவு அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் 631 501.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டம் செலுத்த தேவையில்லை. மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும்.




மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://kpmdrb.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளTN Cooperative Bank Recruitment 2020 அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். விண்ணப்பப்படிவங்களை பெறுவதற்கு அறிவிப்பு லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.02.2020

முதுநிலை ஆசிரியா் தேர்வு பட்டியல் ரத்து

முதுநிலை ஆசிரியா் தேர்வு பட்டியல் ரத்து
வேதியியல் பாட முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் தேர்வு பட்டியல் ரத்து செய்யப்பட்டதற்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி எம்.பி. வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியம் நடத்திய வேதியியல் பாட முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் பணிக்கான போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தேர்வுப் பட்டியலை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.




அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் 17 பாடங்களுக்கான 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பா் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. அவற்றில், வேதியியல், இயற்பியல், உள்ளிட்ட 12 பாடங்களுக்கு தோந்தெடுக்கப்பட்டோரின் பட்டியல் கடந்த ஆண்டு நவம்பா் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இவற்றில், வேதியியல் பாட ஆசிரியா்கள் தோவில் இடஒதுக்கீட்டு முறை சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பட்டியலினத்தவருக்கும் துரோகம் இழைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்பட்டியலை ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளுக்கு உட்பட்டு புதிய பட்டியலை தயாரித்து வெளியிடும்படி வலியுறுத்தியிருந்தேன்.




ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட தேர்வு வாரியம், அதன் நிலைப்பாடு தான் சரியானது என்று கூறி பிடிவாதம் பிடித்தது. இதையடுத்து ஆசிரியா் தேர்வு வாரியத்தின் தவறான முடிவால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குகளில் தீா்ப்பளித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், ஆசிரியா்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை என்று கண்டனம் தெரிவித்தாா்.மேலும், வேதியியல் பாடத்துக்கான ஆசிரியா் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளின்படி புதிய பட்டியலை தயாரிக்கும்படி தேர்வு வாரியத்துக்கு ஆணையிட்டுள்ளாா். இது, சமூக நீதிக்கும், சமூகநீதியை மீட்க பாமக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றி என்று அவா் கூறியுள்ளாா்.

வருமான வரி தாக்கல் படிவம் விதிகள் தளர்வு

வருமான வரி தாக்கல் படிவம் விதிகள் தளர்வு
புதுடெல்லி: வருமான வரி தாக்கல் படிவம் தொடர்பாக அறிவித்த புதிய விதிகளை, மத்திய நேரடி வரிகள் வாரியம் மீண்டும் மாற்றம் செய்துள்ளது. ஆண்டுக்கு 50 லட்சம் வரை சம்பள வருவாய் ஈட்டும் தனிநபர்கள் ஐடிஆர்-1, வர்த்தகம் மூலம் வருவாய் ஈட்டும் தனிநபர்கள் ஐடிஆர்-4 படிவம் தாக்கல் செய்கின்றனர். இந்நிலையில், ஒன்றுக்கு மேற்பட்டவர்களை பங்குதாரராக கொண்டு சொந்த வீடு வைத்துள்ள தனி நபர்கள் நடப்பு நிதியாண்டுக்கான கணக்கு தாக்கலில் ஐடிஆர்-1 சஹஜ், ஐடிஆர்-4 சுகம் படிவங்களை பயன்படுத்த முடியாது என மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) அறிவித்திருந்தது.



இதுபோல், ஆண்டுக்கு ₹1 லட்சம் மின் கட்டணம் செலுத்தியவர்கள், வெளிநாட்டு பயணத்தில் ₹2 லட்சத்துக்கு மேல் செலவு செய்தவர்கள் எளிய முறையில் கணக்கு தாக்கல் செய்ய முடியாது. இந்த கெடுபிடி விதிகளை சிபிடிடி தளர்த்தியுள்ளது. இதன்படி, ஒன்றுக்கு மேற்பட்டவர்களை பங்குதாரராக கொண்டு சொந்த வீடு வைத்துள்ள தனி நபர்கள், பிற விதிகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் எளிய முறையிலான ஐடிஆர்-1 சகஜ், ஐடிஆர்-4 சுகம் படிவங்களை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது.

பள்ளிகளை முன்னறிவிப்பின்றி பார்வையிடும் போது கல்வி அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள்!

பள்ளிகளை முன்னறிவிப்பின்றி பார்வையிடும் போது கல்வி அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள்!

வட்டாரக் கல்வி அலுவலர்கள் ( BEOS ) பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் , ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் , நலத்திட்டங்கள் செயல்படுத்துதல் , பள்ளி சுற்றுப்புறச் சூழல் ஆகியவை சிறந்து விளங்கிடப் பள்ளிகளை முன்னறிவிப்பின்றி பார்வையிடுதல் ( Surprise Visit ) மற்றும் ஆண்டாய்வு செய்தல் ( Annual Inspection ) மிகவும் அவசியமாகும் . எனவே பள்ளிகளை முன்னறிவிப்பின்றி பார்வையிடுதல் , ஆண்டாய்வு

பள்ளிப் பரிமாற்றத் திட்டம்!!

பள்ளிப் பரிமாற்றத் திட்டம்!!



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளிப் பரிமாற்றத் திட்டம் சார்பில் கிராமப்புற பள்ளிகளை நகர்ப்புற பள்ளிகளுடன் இணைக்கும் நோக்கில் கொண்டபெத்தான் நடுநிலைப்பள்ளி மாணவ/வியர் ஆண்டார் கொட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளியை பார்வையிட்டனர். இந்நிகழ்விற்கு ஆண்டார் கொட்டாரம் தலைமையாசிரியர் முனியாண்டி தலைமை வகித்தார். கொண்டபெத்தான் தலைமையாசிரியர் தென்னவன் ஆசிரியப் பயிற்றுநர் உமா முன்னிலை வகித்தனர். ஆசிரியை ஜமிலா வரவேற்றார். ஆண்டார் கொட்டார பள்ளி  குழந்தைகள் கொண்டபெத்தான் பள்ளி குழந்தைகளை கைகுலுக்கி வரவேற்றனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டற. இரு பள்ளி மாணவ/வியர் ஒருவருக்கொருவர் தங்கள் பள்ளிகள் குறித்து கலந்துரையாடினர். ஆண்டார் கொட்டாரம் பள்ளியிலுள்ள ஆய்வகம், நூலகம், கணினி அறை, ஒலி ஒளி கண்காட்சி வகுப்பறை , மூலிகைத் தோட்டம், பல வகையான மரங்கள் அமைந்த தோட்டம் முதலியவற்றைப் பார்வையிட்டனர். மேலும் களப்பயணமாக பள்ளிக்கு அருகிலுள்ள அம்மா பூங்கா, மாநகராட்சி கழிவு நீர் வெளியேற்றும் அலுவலகம், கழிவு நீரேற்று தொழிற்சாலை முதலியவற்றை பார்வையிட்டனர். மாணவி சத்யா கூறும் போது,

 " பள்ளிப் பரிமாற்றுத்திட்டம் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அரசு உயர்நிலைப் பள்ளியிலுள்ள வசதிகளை பார்த்து வியப்படைந்தேன். களப்பயணம் எனது அறிவை விரிவு செய்கிறது. இத்திட்டம் மிகுந்த பயனைத் தருகிறது என்றார். திட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் தீபா கிறிஸ்டபெல், ஜெருசா மெர்லின், சிந்தாதிரை ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.

10ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து தவறான வாசகம் நீக்கம் - பள்ளிக்கல்வித்துறை!

10ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து தவறான வாசகம் நீக்கம் - பள்ளிக்கல்வித்துறை!

10ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் குறித்த தவறான வாசகம் இடம் பெற்றுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அந்த வாசகம் நீக்கப்படும் என்றும் ஏற்கனவே உள்ள புத்தகத்தில் ஸ்டிக்கர் கொண்டு ஒட்டப்படும் என்றும் இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும் உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

நோட்டுப் புத்தகங்கள் மூலம் திருவள்ளுவா் உருவம் மாணவர்கள் சாதனை!!

நோட்டுப் புத்தகங்கள் மூலம் திருவள்ளுவா் உருவம் மாணவர்கள் சாதனை!!

கோவையில் 29,971 நோட்டு புத்தகங்களைக் கொண்டு திருவள்ளுவா் உருவத்தை உருவாக்கி தனியாா் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனா்.

கோவை கேம்போா்டு இன்டா்நேஷனல் பள்ளியில் தமிழ் கலாசாரம், பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் பொங்கல் விழா, திருவள்ளுவா் தின விழா ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதையொட்டி 29,971 எழுதாத புதிய நோட்டு புத்தகங்களைக் கொண்டு திருவள்ளுவரின் உருவத்தை வடிவமைக்கும் கின்னஸ் சாதனை முயற்சி நடைபெற்றது.

இதில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான 170 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு 2 மணி நேரத்தில் திருவள்ளுவரின் உருவத்தை வடிவமைத்தனா். இதற்காக அவா்களுக்கு 14 வண்ண அட்டைகளால் ஆன 29,971 நோட்டு புத்தகங்கள் தேவைப்பட்டன. இதற்கு முன்பு அபுதாபியில் 702.8 சதுர மீட்டரில் திருவுருவம் வடிவமைத்ததே கின்னஸ் சாதனையாக உள்ளது. இதை முறியடிக்கும் வகையில் தற்போது கேம்போா்டு பள்ளியில் 1,114.82 சதுர மீட்டரில் உருவாக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் திருவுருவம் பழைய சாதனையை முறியடித்திருப்பதாக பள்ளியின் தலைவா் அருள் ரமேஷ், தாளாளா் பூங்கோதை அருள் ரமேஷ், முதல்வா் பூனம் சியல் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

காலியிடங்களால் திணறும் கல்வித்துறை! நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை கமிஷனரிடம் கோரிக்கை!

காலியிடங்களால் திணறும் கல்வித்துறை! நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை கமிஷனரிடம் கோரிக்கை!

பள்ளிக்கல்வித்துறை யில் , 26 உதவியாளர் , 150 கண்காணிப்பாளர் உட் பட முக்கிய பணியிடங் கள் நிரப்ப , நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற , கோரிக்கை வலுத்துள்ளது .

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக சீர்த்திருத்த நடவ டிக்கைகளுக்கு பின் , 120 மாவட்ட கல்வி அலுவல கங்களாக பிரிக்கப்பட்டுள் ளன . இதில் , 26 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு ( டி . இ . ஓ . , ) , உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன . புதிய கல்வி மாவட்டங் களில் போதிய பணியாளர் கள் இல்லாததால் , நிர்வாக பணிகள் மேற்கொள்வ தில் சிரமம் நீடிக்கிறது .

எனவே , 150 கண்காணிப் பாளர் பணியிடங்கள் உரு வாக்கி , விரைவில் நிரப்ப வேண்டுமென , பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலு வலர்கள் சங்கம் சார்பில் , கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யனிடம் , சமீபத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது . பள்ளிக்கல்வி நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் சீனிவாசன் கூறு கையில் , “ நிர்வாக பணி கள் தேக்கமின்றி நடக்கும் வகையில் , 62 புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக் கப்பட்டன .

இங்கு , முக்கிய பணியிடங்கள் காலி யாக உள்ளன . மேலும் , முதன்மை கல்வி அலுவலருக்கு , கற்பித்தல் சார்ந்த , ஆய்வுப்பணிகளுக்கு உத வும் பொருட்டு , இரு உத வியாளர்கள் உள்ளனர் . இவர்கள் , உயர்நிலை , மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக இருப்பதால் , நிர்வாக சிக் கல்களுக்கு , தீர்வு காண முடியாத நிலை நீடிக்கிறது . எனவே , இயக்குனர கத்தை போல , அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் , நிர் வாக அலுவலர் பணியி டம் உருவாக்கி , அமைச்சு பணியாளர்களை நியமித் தால் , அலுவலக பணிகள் தேக்கமின்றி நடக்கும் , ' ' என்றார் .

Flash News : அனைத்து ஆசிரியர்களுக்கும் புதிய Login id மற்றும் Password - நாளை ( 11.12.2019 ) முதல் பயன்படுத்த உத்தரவு.

Flash News : அனைத்து ஆசிரியர்களுக்கும் புதிய Login id மற்றும் Password - நாளை ( 11.12.2019 ) முதல் பயன்படுத்த உத்தரவு.

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive