புதிய சிம் வாங்குவோருக்கு ரூ. 399 விலையில் வி சலுகை அறிவிப்பு : - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, December 20, 2020

புதிய சிம் வாங்குவோருக்கு ரூ. 399 விலையில் வி சலுகை அறிவிப்பு :


 வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 399 விலையில் புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 399 விலையில் பிரத்யேக டிஜிட்டல் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை வலைதளத்தில் புதிய சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் இணைப்புகளுக்கு பொருந்தும்.
ரூ. 399 விலை பிரீபெயிட் சலுகையில் டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ரூ. 297 சலுகையை விட அதிக வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மேலும் வி திரைப்படங்கள் மற்றும் டிவி சேவை உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்படுகின்றன. போஸ்ட்பெயிட் சலுகையில் 150 ஜிபி டேட்டா, ரோல் ஓவர் வசதி, எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கிறது.

வி வலைதளத்தில் புதிய சிம் வாங்குவோர் ரூ. 399 சலுகையை தேர்வு செய்யலாம். இது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் கனெக்ஷன்களில் வழங்கப்படுகிறது. ரூ. 399 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

போஸ்ட்பெயிட் ரூ. 399 சலுகையில் 40 ஜிபி டேட்டா, மாதம் 100 எஸ்எம்எஸ், ஆறு மாதங்களுக்கு 150 ஜிபி டேட்டா, 200 ஜிபி ரோல் ஒவர், வி திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.


Post Top Ad