எச்சரிக்கைப் பதிவு*_ பொதுவாகவே வெளியூர் சென்றால், வழியில் வருவோர் யாரானாலும், கொஞ்சம் Hot Spot ஆன் பண்ணுங்களேன், recharge பண்ணிக்குறேன்னு யாராவது கேட்டால்... உஷாராக இருங்க.



 எச்சரிக்கைப் பதிவு*_
=======================

பொதுவாகவே வெளியூர் சென்றால், வழியில் வருவோர் யாரானாலும், கொஞ்சம் Hot Spot ஆன் பண்ணுங்களேன், recharge பண்ணிக்குறேன்னு யாராவது கேட்டால்...
உஷாராக இருங்க. 

05/12/2020 அன்று எனது நண்பர் ஒருவர், சென்னை to போளூர் 148 ரூட்டில் வந்துகொண்டு இருக்கும்போது ஒரு நபர் தனது செல்போனில் பேலன்ஸ் இல்லை, கொஞ்சம் Hotspot ஆன் செய்தால் நான் எனது செல்போனில் recharge செய்து கொள்வேன் என்று கூற, எனது நண்பரும் Hotspot ஆன் செய்துள்ளார். அந்த நபரும் internet பயன்படுத்திவிட்டு போதும் hot spot ஆஃப் செய்துகொள்ளுங்கள் என்றுகூறும் வேளையில்  பஸ்நிறுத்தம் வரவே அந்த நபர் busல் இருந்து இறங்கி சென்றுவிட்டார். எனது நண்பருக்கு சந்தேகம் வரவே, மொபைலை ஓப்பன் பண்ணி பார்க்க, ஹோம் ஸ்கிரீனில் புதிதாக ஒரு அப்ளிகேஷன் இருந்ததைக்கண்டு ஓப்பன் செய்ய முயற்சிக்கும்போது, accept என்று மட்டும் press பண்ண சொல்லி காட்டவே, அந்த அப்ளிகேஷனை உடனடியாக Uninstall  செய்து அழித்துவிட்டார்.

பின்பு வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவருடைய inboxல் சில மெஸ்ஸேஜ் ஏதோ ஒரு மொபைல் நம்பருக்கு அனுப்ப முயற்சி செய்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியுற்று, உடனடியாகத் தனது பேங்க் பாஸ்வேர்டை மாற்றி, மொபைலையும் formet செய்துவிட்டார்.
பின்புதான் தெரிய வந்துள்ளது, தன்னிடம் Hotspot கேட்ட நபர் தன்னுடைய மொபைலை ஹேக் செய்ய முயற்சி செய்துள்ளதும், தான் மட்டும் அந்த அப்ளிகேஷனை உடனடியாக uninstall செய்து, அழிக்காமல் இருந்திருந்தால், 
தான் குருவி சேமிப்பது போல் சேமித்து வைத்திருந்த பணத்தை ஏமாற்றப் பட்டிருப்போம் என்று நினைத்து உறைந்து போயுள்ளார்.
 
ஆகவே, தெரியாதவர்கள் யாரும் Hotspot ஆன்பண்ண சொல்லிக்கேட்டால், கொஞ்சம் இல்லை, நிறையவே உஷாராக இருங்கள்.

எனக்கு வாட்ஸ்அப்பில் வந்தத் தகவல், 
உங்கள் பார்வைக்கு..!

--- நன்றி,
வாட்ஸ்அப் குழுவினர்





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive