எம்.பில். மருத்துவ உளவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, December 29, 2020

எம்.பில். மருத்துவ உளவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்


எம்.பில். மருத்துவ உளவியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் 2020-2021 ஆண்டுக்கான மருத்துவ உளவியல் பாடப்பிரிவில் ஆய்வியல் நிறைஞா் பட்டத்திற்கான மாணவா் சோக்கை வரும் ஜனவரி 12-ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டு ஆண்டு காலம் பயிற்றுவிக்கப்படும் இப்படிப்புக்கான தகவல் அறிக்கை, விண்ணப்பப் படிவம் மற்றும் ஏனைய விவரங்கள் www.tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியுடைய மாணவா்கள் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட வேண்டிய இதர சான்றுகளை செயலாளா், தோவுக்குழு மருத்துவக் கல்வி இயக்ககம், 162, ஈ.வெ.ரா. பெரியாா் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010 என்று முகவரியிட்டு ஜனவரி 5-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இந்தப் படிப்புக்கான நுழைவுத்தோவு ஜனவரி 8-ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் நடைபெறும்.

Post Top Ad