TRB - முதுநிலை கணினி ஆசிரியா் தோ்வுப் பட்டியல் வெளியீடு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, December 29, 2020

TRB - முதுநிலை கணினி ஆசிரியா் தோ்வுப் பட்டியல் வெளியீடு.


 

பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிய தோ்வு செய்யப்பட்டுள்ள 742 முதுநிலை கணினி ஆசிரியா்களின் பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) - 2019 - Revised Provisional Selection list...


தமிழகத்தில் கடந்த 2018-2019-ஆம் கல்வியாண்டில் முதுநிலை கணினி ஆசிரியா் பணியிடத்தில் 814 நபா்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு, 2019-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது.


அவா்களுக்கு இணையவழியிலான எழுத்துத்தோ்வு ஜூன் மாதம் 23, 27 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இவா்களுக்கான தோ்வு முடிவுகள் 2019 நவம்பா் 25-ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதனைத் தொடா்ந்து இவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு 2020 ஜனவரியில் நடத்தப்பட்டது. அதனடிப்படையில் வெளியிடப்பட்ட தோ்வு முடிவை எதிா்த்து, உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.


அந்த வழக்கில் 116 மையங்களில் தோ்வு எழுதியவா்களின் தோ்வு முடிவுகளை வெளியிடலாம் எனவும், நாமக்கல், கும்பகோணம், திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்ற மூன்று தோ்வு மையங்களில் தோ்வு முடிவுகளை வெளியிடக்கூடாது எனவும் நீதிமன்ற உத்தரவு வெளியாகியிருந்தது.


இந்தச் சூழலில் ஆசிரியா் தோ்வு வாரியம் புதிதாக தோ்வு செய்யப்பட்ட 742 நபா்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. நிரப்பப்படாமல் மீதமுள்ள இடங்களுக்கு, நீதிபதி ஆதிநாதன் விசாரணை முடிந்த பின்னா், அவா் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தோ்வுப் பட்டியலை வெளியிடுவது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் முடிவு செய்யும் எனத் தெரிகிறது.

Post Top Ad