ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் C-DAC நிறுவனத்தில் வேலை! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, December 9, 2020

ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் C-DAC நிறுவனத்தில் வேலை!


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் C-DAC எனும் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள சப்போர்ட் இன்ஜினியர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.25 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் (CDAC)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : சப்போர்ட் இன்ஜினியர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 03

கல்வித் தகுதி : B.E/B.Tech/MCA உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.25,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cdac.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 11.12.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

HRD Human Resource Department Centre for Development of Advanced Computing Tidel Park, 8th Floor, D- Block (South) No.4 Rajiv Gandhi Salai, Taramani, Chennai - 600113

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cdac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

source: tamil.careerindia.com

Post Top Ad