அணுசக்திக் கழகத்தில் வேலை வேண்டுமா? 10, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்:


அணுசக்திக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Directorate of Purchase and stores துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 1/DPS/2020

பணி: Stenographer Grade-II
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.35,400
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும், நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Stenographer Grade-III
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.25,500
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும், நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Upper Division Clerk
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.25,500
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Purchase Officer/Store Keeper
காலியிடங்கள்: 63
சம்பளம்: மாதம் ரூ.25,500
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 60 சதவீதம் மதிப்பெண்கலுடன் பி.எஸ்சி., பி.காம் அல்லது சிஎஸ்சி, இசிஇ, மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

உடற்தகுதி: ஆண்கல் 152 செ.மீ உயரமும், பெண்கள்148 செ.மீ உயரமும், உயரத்திற்கேற்ற எடையை பெற்றிருக்க வேண்டும். தெளிவான கண் பார்வைத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு, திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வின்போது ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்கலின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மையங்கள்: மும்பை, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்கரு, இந்தூர்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, பெண்கள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்க www.dpsdae.formflix.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.12.2020

மேலும் விவரங்கள் அறிய https://dpsdae.formflix.in/notification.php என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive