மத்திய அரசு வழிகாட்டுதல்களின்படி, கல்லூரிகள் / உயர் கல்வி நிறுவனங்கள் ஆகியவை, சோதனைக்கூடம் மற்றும் ஆய்வக வேலை தேவைப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஸ்ட்ரீம்களில் பி.எச்.டி மற்றும் பி.ஜி மாணவர்களுக்கு மட்டுமே மீண்டும் திறக்கப்பட முடியும்.
அக்டோபர் 15 ம் தேதி பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று கூறி, மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) முன்னர் ஒரு ஆணையை பிறப்பித்தது.
உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அன்லாக் 5.0 (Unlock 5.0) வழிகாட்டுதல்களில், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும், அக்டோபர் 15-க்குப் பிறகு, கட்டம் கட்டமாக பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை மீண்டும் திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
0 Comments:
Post a Comment