இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் நாளை வினியோகம்


ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான, இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள், நாளை முதல், பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படுகின்றன.தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கால், பள்ளிகள் திறக்க, இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. 

இருப்பினும், தனியார் பள்ளிகள், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. அரசு சார்பில், வீடியோ பாடங்கள், கல்வி தொலைக்காட்சி மூலம், கற்பித்தல் பணி நடந்து வருகிறது. இதற்காக, முதல்பருவ பாடப்புத்தகங்கள், ஏற்கனவே மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளன. 

வழக்கமாக, அக்., 3 முதல், இரண்டாம் பருவ பாட வகுப்பு தொடங்கும். பள்ளிகள் திறக்காததால், முதல் பருவ பாடப்புத்தகங்களே நடத்தப்படவில்லை. இந்நிலையில், சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு, இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள், நாளை முதல் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இப்புத்தகங்களை, மறு உத்தரவு வரும் வரை, பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்க கூடாது என, முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive