கல்விச்சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?


நடைமுறைகள்

பள்ளி மாற்றுச் சான்றிதழ்

இணைக்க வேண்டிய ஆவணங்கள்

கல்லூரிச் மாற்றுச் சான்றிதழ்

பள்ளி மதிப்பெண் சான்றிதழ்

கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்

தனித்தேர்வர்களுக்கு

குறிப்பு

வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச்சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள்இவற்றை சில சமயங்களில்சரிபார்த்தல் (Verification) அல்லதுநேர்காணல் போன்றகாரணங்களுக்காக வெளியில்எடுத்துச் செல்ல நேரலாம். அப்படிசெல்லும்போது பயணத்தில்தொலைந்துவிட்டாலோ அல்லதுசுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச்சீற்றங்களினால் அழிந்துவிட்டாலோஅல்லது எதிர்பாராதவிதமாக தீவிபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோமீண்டும் புதிய சான்றிதழைவிண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

ஏனெனில் இந்தச் சான்றிதழ்கள்ஒவ்வொரு காலகட்டத்திலும்பயன்படக்கூடிய முக்கியஆவணங்களாகும். மேற்படிப்பு பயில, அரசின் கடன் உதவி பெற, வேலைகளில் சேர போன்றவற்றிற்குமட்டுமல்லாது வயதுச் சான்றாகவும்பயன்படுகிற ஆவணங்கள் இவை.

தீவிபத்து, வெள்ளம், கரையான்போன்றவற்றால் சிதிலமாகி இழக்கநேரிட்டால் அதன் நகலை பெற முடியும்.

நடைமுறைகள்

முதலில் மனுதாரர் தங்கள்பகுதியிலுள்ள காவல்நிலையத்தில்தேவையான தகவல்களுடன் புகார்அளிக்க வேண்டும்.

அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தைதினசரி பத்திரிகையில் அறிவிப்புவிளம்பரம் செய்ய வேண்டும்.

இதற்கு குறைந்தது ரூ.500 வரைசெலவழிக்க நேரிடும்.

பின்னர் காவல்நிலையத்தில்சான்றிதழை கண்டுப்பிடிக்கமுடியவில்லை என்று கொடுக்கப்படும்சான்றிதழை பெற வேண்டும்.

இதனைதாசில்தாரிடம் கொடுத்துஅவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசுநிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கிவரவோலை வாங்க வேண்டும்.

பின்னர் பத்திரிகை விளம்பரத்தைவெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றைகோரிக்கை மனு ஒன்று எழுதிஅதனுடன் இணைக்க வேண்டும்.

மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம்வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோஅந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்குவிண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

அதனைமாவட்ட அதிகாரி பரிசீலனைசெய்து மாநில அரசு தேர்வு துறைஇயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ்நகல் வழங்க சிபாரிசு செய்வார்.

சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்தஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள்சான்றிதழ் நகல் பள்ளி கல்விதேர்வுத்துறை இயக்குனர்அலுவலகத்திலிருந்து அனுப்பிவைக்கப்படும்.

இதனைஇறுதியாக எந்த பள்ளியில்படித்து முடித்தோமோ, அந்த பள்ளிதலைமை ஆசிரியரிடம் பெற முடியும்.

பள்ளி மாற்றுச் சான்றிதழ்

பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) தொலைந்துபோனால்உடனடியாக காவல் நிலையத்தில்புகாரளிக்க வேண்டும். அவர்கள்கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறசான்றை வழங்குவர்.

விண்ணப்பத்துடன் வட்டாட்சியரிடம்பள்ளி மாற்றுச் சான்றிதழ்தொலைந்துவிட்டது என்ற சான்றிதழைவாங்கி இணைத்துக் கொடுக்கவேண்டும். இத்துடன் பள்ளிச் சான்றிதழ்பெறுவதற்கான கட்டணத்தையும்செலுத்தி ரசீதை இணைக்க வேண்டும்.

எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அந்தப்பள்ளித் தலைமை ஆசிரியரிடமேவிண்ணப்பிக்கலாம்.

இணைக்க வேண்டிய ஆவணங்கள்

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளிமாற்றுச் சான்றிதழ் நகல், கட்டணம்செலுத்திய ரசீது.

கல்லூரிச் மாற்றுச் சான்றிதழ்

கல்லூரி மாற்றுச் சான்றிதழ்தொலைந்துபோனால் உடனடியாககாவல் நிலையத்தில் புகாரளிக்கவேண்டும். அவர்கள் கண்டுபிடிக்கமுடியவில்லை என்கிற சான்றைவழங்குவர். 

அத்துடன் சான்றிதழ் தொலைந்ததுகுறித்து வட்டாட்சியரிடம் மனு செய்யவேண்டும். அவர் அந்தப் பகுதி வருவாய்ஆய்வாளரால் விசாரணை நடத்தியபின்னர் சான்றிதழ் தொலைந்ததுஉண்மை எனச் சான்று வழங்குவார்.

பின்னர் காவல்துறை அளித்த சான்று, வட்டாட்சியர் அளித்த சான்றுஇவற்றுடன் கல்லூரி நிர்ணயம் செய்ததேடுதல் கட்டணத்தைச் செலுத்திகல்லூரி முதல்வருக்கு விண்ணப்பிக்கவேண்டும்.

பள்ளி மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்தொலைந்து போனால் முதலில் அந்தப்பகுதியிலுள்ள காவல் நிலையத்தில்புகாரளிக்க வேண்டும்.

அத்துடன் மதிப்பெண் பட்டியலின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம், மாதம்ஆகிவற்றைக் குறிப்பிட்டு அந்தப்பகுதியில் உள்ள ஒரு முன்னணிநாளிதழில் அறிவிப்பு விளம்பரம்வெளியிட வேண்டும்.

பின்னர் காவல் நிலையத்தில்புகாரளித்ததற்கான ரசீது, பிரசுரமானவிளம்பரம் ஆகியவற்றை இணைத்துபள்ளித் தலைமை ஆசிரியர் வழியாகமாவட்டக் கல்வி அதிகாரிக்குவிண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

இதனுடன் தேடுதல் கட்டணம் வங்கிவரைவோலையாக எடுத்து அனுப்பவேண்டும்.

மனுவைப் பரிசீலித்து மாவட்டக் கல்விஅதிகாரி மாநில பள்ளிக்கல்வித்துறைக்கு விண்ணப்பம்செய்வார்.

கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்

கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்தொலைந்துவிட்டால் கடைசியாகப்படித்த கல்லூரி முதல்வருக்குவிண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டகல்லூரி முதல்வர் மதிப்பெண்சான்றிதழின் எண், பதிவு எண், தேர்வுநடந்த வருடம் ஆகியவற்றைச்சரிபார்த்து பல்கலைக்கழக  தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரிக்குப்பரிந்துரைத்து எழுதுவார்.

இத்துடன் மதிப்பெண் சான்றிதழ்பெறுவதற்கான கட்டணத்தை வங்கிவரைவோலையாக எடுத்து அனுப்பவேண்டும். மனுவைப் பெற்றுக்கொண்ட தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிமதிப்பெண் சான்றிதழ் வழங்குவார்.

விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்களுக்குள் இச்சான்றிதழ்கள்கிடைக்கப்பெறும்.

தனித்தேர்வர்களுக்கு

தனித்தேர்வர்கள் நேரடியாக  தேர்வுத்துறை இயக்குநர்  அலுவலகத்திற்கு  விண்ணப்பம்அனுப்ப வேண்டும்.  பட்டம் மற்றும்அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு  சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களைஅணுக வேண்டும்.

குறிப்பு

பள்ளி / கல்லூரி மாற்றுச்சான்றிதழ்கள், பள்ளி / கல்லூரிமதிப்பெண் சான்றிதழ்கள் புதிதாகப்பெற அந்தந்த பள்ளித்தலைமையாசிரியரையோ அல்லதுகல்லூரி முதல்வரையோ அணுகிமேலதிக விவரங்களையும், கட்டணவிவரங்களையும் தெரிந்துகொள்ளவும்.

CLICK HERE TO DOWNLOAD-Remedies on Loss of Certificate(Duplicate mark certificate and tc)





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive