
பள்ளி மாணவர்களுக்கு தொண்டைஅடைப்பான், கக்குவான், ரணஜன்னிபோன்ற நோய்த் தொற்று பாதிப்புஏற்படுவதை தடுக்கும் வகையில்ஆண்டுதோறும் பொது சுகாதாரத் துறைசார்பில் தடுப்பூசி போடப்படுகிறது. அதன்படி, 1-ம் வகுப்பு (6 வயது) படிக்கும் மாணவர்களுக்கு டிபிடி(டிப்தீரியா பெர்டூசிஸ் டெட்டனஸ்) தடுப்பூசி, 5-ம் வகுப்பு (10 வயது), 10-ம்வகுப்பு (16 வயது) படிக்கும்மாணவர்களுக்கு டிடி (டெட்டனஸ்டிப்தீரியா) தடுப்பூசியும்போடப்படுகிறது.
தற்போது கொரோனா காரணமாகபள்ளிகள் திறக்கப் படவில்லை. எனவேபள்ளிக் குழந்தைகளுக்காக சிறப்புமுகாம் நடத்தி தடுப்பூசி போட சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி பள்ளிக் குழந்தைகளுக்கானதடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கோவையில் இன்று (திங்கள்கிழமை) தொடங்கி டிசம்பர் மாதம் 18-ந் தேதிவரை நடக்கிறது. அதன்படி திங்கள், வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாள்களில் அந்தந்த கிராமங்களிலுள்ளஅங்கன்வாடி மையங்கள், அரசுஆரம்பசுகாதார நிலையங்கள், துணைசுகாதார நிலையங்களில் சிறப்புமுகாம்கள் நடத்தப்பட்டு பள்ளிமாணவர்களுக்கு தடுப்பூசி போடஉள்ளதாக சுகாதாரத் துறையினர்தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாகசுகாதார துறை அதிகாரிகள்கூறுகையில், கோவை மாவட்டத்தில் 5 முதல் 6 வயது வரை உள்ள 48,365 மாணவர்கள், 10 வயதுள்ள 52,169 மாணவர்கள், 16 வயதுள்ள 50,652 மாணவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 51 ஆயிரத்து 186 மாணவர்களுக்குதடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள், சிறப்பு முகாம்களில்பங்கேற்று கட்டாயம் தடுப்பூசிபோட்டுக்கொள்ள வேண்டும் என்றனர்.







0 Comments:
Post a Comment