வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, முக்கிய கோவில்களில், கட்டணமில்லாத சிறப்பு தரிசனம், அரசுஊழியர்கள், ஆசிரியர்கள், டாக்டர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்டபல்வேறு கவர்ச்சிகரமானஅறிவிப்புகளை, தேர்தல் அறிக்கையில்இடம்பெற செய்வது குறித்து, தி.மு.க.,வில் நேற்று ஆலோசனைநடந்தது.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில்இடம்பெறக் கூடிய முக்கிய அம்சங்கள், கவர்ச்சிகரமான திட்டங்கள், வாக்குறுதிகள் குறித்து முடிவுசெய்வதற்காக, தேர்தல் அறிக்கைதயாரிக்கும் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில், எட்டு பேர்நியமிக்கப்பட்டனர். இக்குழுவின், முதல்ஆலோசனைக் கூட்டம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில்நேற்று, சென்னை, அறிவாலயத்தில்நடந்தது. கூட்டத்தில், பொருளாளர்டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராஜா, அந்தியூர் செல்வராஜ், மகளிர்அணி செயலர் கனிமொழி, கொள்கைபரப்பு செயலர் திருச்சி சிவா, செய்திதொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி ஆகியோர்பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவாதித்தது குறித்து, கட்சிவட்டாரங்கள் கூறியதாவது: குடும்பத்தில், படித்த ஒருவருக்கு, அரசுவேலை, போலீசாருக்கு வாரவிடுமுறை, அரசு மருத்துவமனைகளில்உயர் தரமான சிகிச்சை, பள்ளிக்குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவுஆகிய அறிவிப்புகள், தேர்தல்அறிக்கையில் இடம்பெறலாம். ஏரி, குளங்களை துார்வரும் திட்டம், பராமரிக்கும் திட்டம், கூவம் ஆற்றைசுத்தப்படுத்தி, மக்கள் பயன்பாட்டிற்குவருவதற்கான திட்டம் ஆகியவைகுறித்தும், இக்கூட்டத்தில்ஆலோசிக்கப்பட்டது.
மேலும், பெரிய கோவில்களில், பக்தர்களுக்கு கட்டணமில்லாமல்சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிப்பது, கோவில் அர்ச்சகர்களுக்கு சம்பளஉயர்வு வழங்குவது, கனிம வளங்கள், ஆற்று மணல் பாதுகாப்பு திட்டங்கள்குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இவையும், தேர்தல் அறிக்கையில்இடம்பெறலாம். மதுவிலக்கைபடிப்படியாக அமல்படுத்துவது, பெண்கள் பெயரில் நிலம் பதிவுசெய்யும்போது, பதிவுக் கட்டணம், 50 சதவீதம் குறைத்தல் உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் குறித்தும், குழுவினர் ஆலோசித்துள்ளனர். இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள்கூறின.
கூட்டம் முடிந்த பின், தி.மு.க., தலைமைவெளியிட்ட அறிக்கை: வரும், 2021ல்நடைபெற உள்ள சட்டசபைபொதுத்தேர்தலை ஒட்டி, தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்கும்பணிக்கு, டி.ஆர்.பாலு தலைமையிலானகுழு அமைக்கப்பட்டு உள்ளது.தேர்தல்அறிக்கையில் இடம்பெற வேண்டியபொது அம்சங்கள் குறித்தும், தங்கள்மாவட்டத்தில் உள்ள பிரச்னைகள்குறித்தும், நேரில் அல்லது அஞ்சல்வாயிலாக, கட்சி நிர்வாகிகள், கட்சித்தொண்டர்கள் அனுப்பி வைக்கலாம். அத்துடன் மின்னஞ்சல் வாயிலாகதெரிவிக்க விரும்புவோர், manifesto2021@dmk.in என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.








0 Comments:
Post a Comment