நூதன ஆன்லைன் மோசடி - பள்ளி ஆசிரியை இழந்த ரூ3.25 லட்சம் மீட்பு: - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, October 7, 2020

நூதன ஆன்லைன் மோசடி - பள்ளி ஆசிரியை இழந்த ரூ3.25 லட்சம் மீட்பு:


பெருங்குடியை சேர்ந்த சம்பத்குமார் (50). கடந்த மாதம் 8ம் தேதி இவரது எஸ்பிஐ வங்கி கணக்கில் இருந்து 2 லட்சத்து 55 ஆயிரத்து 562 ரூபாய் எடுக்கப்பட்டது. இதுகுறித்து, அடையார் துணை கமிஷனர் விக்ரமனிடம் புகார் அளித்தார். மோசடி குறித்து விசாரணை நடத்த சைபர் க்ரைம் போலீசாருக்கு  அவர் உத்தரவிட்டார். 

இதையடுத்து, போலீசார் எஸ்பிஐ வங்கி நோடல் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி சம்பத்குமார் இழந்த பணத்தை மீண்டும் அவரது வங்கி கணக்கிற்கு மாற்றினர். அதேபோல், அடையார் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ஆசிரியை விசாலாட்சி (33). இவர் தனது செல்போனுக்கு ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்த போது ரீசார்ஜ் ஆகாமல் பணம் மட்டும் எடுக்கப்பட்டது.உடனே ஆசிரியை இணையதளத்தில் கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொண்ட போது, எதிர்முனையில் பேசிய நபர் பணம் திரும்ப பெற வேறு ஒரு அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்து அதில் ரூ.10 மட்டும் ரீசார்ஜ் செய்ததால் பணம் திரும்ப வந்துவிடும் என்று கூறியுள்ளார்.

அதன்படி விசாலாட்சி ரூ.10 ரீசார்ஜ் செய்த போது, அடுத்தடுத்து 74 ஆயிரத்து 999 ரூபாய் பணம் அவரது வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அடையார் துணை கமிஷனரிடம் புகார் அளித்தார். சைபர் க்ரைம் போலீசார் சம்பந்தப்பட்ட தொலைதொடர்புத்துறை நோடல் அதிகாரிகளிடம் பேசி, மோசடி நபர்களின் வங்கி கணக்கிற்கு பணம் செல்வதற்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டு ஆசிரியை வங்கி கணக்கிற்கு பணம் திரும்ப பெறப்பட்டது.

Post Top Ad