Tnpsc - முறைகேடு புகார் எதிரொலி வேறு மாவட்டத்தில் தேர்வு எழுதுவதற்கான காரணத்தை பதிவு செய்வது கட்டாயம் விண்ணப்பிக்கும் நடைமுறையில் திருத்தம! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, January 23, 2020

Tnpsc - முறைகேடு புகார் எதிரொலி வேறு மாவட்டத்தில் தேர்வு எழுதுவதற்கான காரணத்தை பதிவு செய்வது கட்டாயம் விண்ணப்பிக்கும் நடைமுறையில் திருத்தம!

Tnpsc - முறைகேடு புகார் எதிரொலி வேறு மாவட்டத்தில் தேர்வு எழுதுவதற்கான காரணத்தை பதிவு செய்வது கட்டாயம் விண்ணப்பிக்கும் நடைமுறையில் திருத்தம!

வேறு மாவட்டங்களுக்குச் சென்று தேர்வு எழுதுபவர்கள் இனி அதற்கான காரணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசுத் துறைகளில் குரூப்-4 தொகுதியில் காலியாக உள்ள 9,398 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது.

இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 16 லட்சம் பேர் எழுதினர். இதில் 12 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் குரூப் -4 தேர்வில் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை மையமாக தேர்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக தேர்வை நடத் திய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பி எஸ்சி) தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப் பிக்கும் நடைமுறைகளில் சில திருத்தங்களை டிஎன்பிஎஸ்சி மேற்கொண்டுள்ளது.

அதன்படி தேர்வர்கள் சொந்த மாவட்டத்தைத் தவிர்த்து வேறு மாவட்டங்களில் சென்று தேர்வு எழுத விரும்பினால் அதற்குரிய விவரங்களை விண்ணப்பிக்கும்போது கட் டாயம் தெரிவிக்க வேண்டும்.அப்போதுதான் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.இந்த நடைமுறை தற்போது தொடங்கியுள்ள குரூப்-1 தேர்வுக் கான விண்ணப்பப்பதிவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு தேர்வர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.இதேபோல், தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பன போன்ற எச்சரிக்கைகளும் அறிவிக்கையில் இடம்பெற் றுள்ளன.

இதுதவிர குரூப்-4 முறைகேடு தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளதாகவும்தக வல்கள் வெளியாகியுள்ளன.

Post Top Ad