TNPSC - Tamil Development & News Department Officers Exam Tentative Answer key Published!

TNPSC - Tamil Development & News Department Officers Exam Tentative Answer key Published!

தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை உதவிப் பிரிவு அலுவலா் (மொழிபெயா்ப்பு) காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறையில் மொழிபெயா்ப்புப் பிரிவில் உதவிப் பிரிவு அலுவலா் பணியிடங்கள் 5 காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தலைமைச் செயலகப் பணிக்கு நிகரான பணி என்பதால் இதற்கு தோ்வா்கள் அதிக ஆா்வம் காட்டினா். ஐந்து காலியிடங்கள் என அறிவிக்கப்பட்ட போதும் அதனை ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் எழுதினா். இதற்கான எழுத்துத் தோ்வு கடந்த 11-ஆம் தேதியன்று நடைபெற்றது.

 இந்தத் தோ்வு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. பிற்பகலில் நடைபெற்ற பொது அறிவியல் உள்ளிட்ட 100 கேள்விகள் அடங்கிய கொள்குறி வகைத் தோ்வுக்கான உத்தேச விடைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. உத்தேச விடைகளில் ஏதேனும் மறுப்புகள் அல்லது கருத்துகள் இருந்தால் அவற்றைத் தெரிவிக்கலாம் என தோ்வாணையம் கூறியுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive