DEE - ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ள Staff profile - ல் 31.01.2020 - க்குள் Update செய்ய இயக்குநர் உத்தரவு.
தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதத்தில் , 31 . 08 . 2019 நிலவரப்படி ஆசிரியர் / மாணவர் பணியாளர் நிர்ணயம் செய்வது சார்பான நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது .அதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலாளர் அவர்களால் ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தியதின் அடிப்படையில் EMIS இணையதளத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில் 2019 - 2020ஆம் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணயம் நடைபெற இருப்பதால் , அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ள Staff profile - ல் 31.01.2020 - க்குள் Update செய்யும் பணி முடித்தல் வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது .
மேலும் , இனிவரும் காலங்களில் நிர்வாக மாறுதல் ஏதேனும் வழங்க நேரிடின் , EMIS இணையதளம் வாயிலாக மட்டுமே செய்யப்பட வேண்டும் எனவும் அதைத் தவிர்த்து பிற வழிகளில் ( Manual order ) ஆணை எதுவும் வழங்கக் கூடாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட அளவில் குழு அமைத்து இந்தப் பணியினை விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. - தொடக்கக் கல்வி இயக்குநர்







0 Comments:
Post a Comment