மத்திய அரசு தொலைத் தொடர்பு துறையில் வேலை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, January 16, 2020

மத்திய அரசு தொலைத் தொடர்பு துறையில் வேலை

மத்திய அரசு தொலைத் தொடர்பு துறையில் வேலை
மத்திய அரசிற்கு உட்பட்ட தொலைத் தொடர்பு துறையில் காலியாக உள்ள துணை பிரிவு பொறியாளர் மற்றும் இளநிலை தொலைத் தொடர்பு அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 101 பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தொலைத் தொடர்புத் துறை

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 101




பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

துணை பிரிவு பொறியாளர்

காலிப் பணியிடங்கள் : 90

ஊதியம் : மாதம் ரூ.47,600 முதல் ரூ.1,51,100 வரையில்

இளநிலை தொலைத்தொடர்பு அதிகாரி

காலிப் பணியிடங்கள் : 11

ஊதியம் : மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.




கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 56 வயத்திற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்க விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : Department of Telecommunication சார்பில் வெளியிடப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 02.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.dot.gov.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

Post Top Ad