அனைத்து பள்ளிகளிலும் 25.01.2020 ( சனிக்கிழமை ) தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்க வேண்டும்! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, January 21, 2020

அனைத்து பள்ளிகளிலும் 25.01.2020 ( சனிக்கிழமை ) தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்க வேண்டும்!

அனைத்து பள்ளிகளிலும் 25.01.2020 ( சனிக்கிழமை ) தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்க வேண்டும்!
 
தேசிய வாக்காளர் தின உறுதிமொழி 25.1.2020

25.01.2020 அன்று 10வது தேசிய வாக்காளர் தினம் சேலம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது . இந்நிகழ்வின் தொடர்ச்சியாக அன்றைய தினம் தேசிய வாக்காளர் தினம் குறித்த உறுதிமொழியை வாசிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . எனவே சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் , இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழியினை 25.1.2020 அன்று காலை 11 . 00 மணியளவில் பள்ளி மாணவ மாணவர்களைக் கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .
வாக்காளர் உறுதிமொழி 

ஜன நாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம் , நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும் , சுதந்திரமான , நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும் , மேலும் , ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் , மதம் , இனம் , சாதி , வகுப்பு , மொழி , ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டு தலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம் .

Post Top Ad