EMIS வலைதளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் சார்ந்து மாநில கூடுதல் திட்ட இயக்குநர் அவர்களின் செயல் முறைகள்!!விளக்கம்!!
EMIS வலைதளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் சார்ந்து மாநில கூடுதல் திட்ட இயக்குநர் அவர்களின் செயல் முறைகள்!!விளக்கம்!!
🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶
1. EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பள்ளி சார்ந்த அனைத்து தகவல்களும்( பள்ளியின் பெயர், மேலாண்மை வகை, தொடர்பு எண் முதலியன) சரியாக உள்ளதா என்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
2. அனைத்து தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியின் *EMIS Login ID மற்றும் Password* ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும். மேலும் தங்களாகவே Login செய்வதையும் அறிந்திருக்க வேண்டும்.
3.அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியின் மாணவ சேர்க்கையை EMIS மூலம் கண்காணிக்க வேண்டும். மேலும் தொடர்ந்து *Update* செய்யப்பட்ட வேண்டும்.
4. *EMIS* வலைதளத்தில் உள்ள *Menu* - ல் உள்ள அனைத்து பதிவேடுகளையும் பயன்படுத்தி பராமரிக்க வேண்டும்.
5. ஆசிரியர்களின் வருகை பதிவை *( Teachers Attendance) EMIS* *வலைதளத்தில்* பதிவு செய்ய வேண்டும்.
6. பல்வேறு திட்டங்களுக்கான மாணவர்களின் தேவை பட்டியல் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்களின் விவரத்தினை அதற்குரிய Tab - ல் பதிவு செய்ய வேண்டும்.
7. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
8. EMIS வலைத்தளத்தில் அதற்குரிய பகுதியில் ஆசிரியர்களுக்கான கால அட்டவணை உருவாக்கப்பட வேண்டும்.
9. கீழ்க்காணும் ஐந்து வகையான புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶
*🔵 பள்ளியின் பெயர் பலகை தெரியுமாறு உள்ள முகப்பு புகைப்படம்-1*
*🔵 நல்ல நிலையில் உள்ள கழிவறையின் புகைப்படம்-1*
*🔵பள்ளி சுற்றுச் சுவரின் புகைப்படம்-1*
*🔵 Smart classroom/ நூலகம்/ ஆய்வகம் - புகைப்படம் -1*
*🔵வகுப்பறையின் புகைப்படம் -1*