சாதி அடையாளத்தை குறிக்கும் வண்ணக் கயிறு கட்ட தடை விதித்த விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரும் : அமைச்சர் செங்கோட்டையன் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, August 15, 2019

சாதி அடையாளத்தை குறிக்கும் வண்ணக் கயிறு கட்ட தடை விதித்த விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரும் : அமைச்சர் செங்கோட்டையன்


சாதி அடையாளத்தை குறிக்கும் வண்ணக் கயிறு கட்ட தடை விதித்த விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரும் : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் என பள்ளிக்கலவித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள சாரண சாரணிய இயக்க தலைமை அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்த அமைச்சர் செங்கோட்டையன், மாணவ மாணவிகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.பின்னர் 20 ஆண்டுகளுக்கு மேல் சாரண சரணிய இயக்கத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை அமைச்சர் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அடுத்த ஆண்டு முதல் சாரண சாரணிய இயக்க மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகள் வழங்கப்படும் என்றார். மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் போது பகுதி நேர ஆசிரியர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.மேலும் இலவச நீட் பயிற்சி மையத்தில் சேர 20,000 மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளருக்கான தேர்வு விரைவில் நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

மேலும் சாதியை குறிக்கும் வண்ணக்கயிறு கட்டிவர தடை என சுற்றறிக்கை வெளியானது கவனத்திற்கு வரவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியான சுற்றறிக்கை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். சுற்றறிக்கையை திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் வரவேற்ற நிலையில், அரசின் கவனத்திற்கு வராமல் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து ஜாதி அடையாளத்தை குறிக்கும் கயிறு கட்ட தடை விதித்த விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரும் என்று கூறினார். முன்னதாக பள்ளி மாணவர்கள் சாதியை குறிக்கும் வண்ணக் கயிறு கட்டக் கூடாது என்று ஆகஸ்ட் 12ல் பள்ளிக்கலவித் துறை சுற்றறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Post Top Ad