தேசிய கல்விக் கொள்கையை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்

தேசிய கல்விக் கொள்கையை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்

தேசிய கல்விக் கொள்கையை விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார். திருப்பதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஐஐடியின் நிரந்தர கட்டிடத்தின் திறப்பு விழா, மற்றும் பட்டமளிப்பு விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேசிய கல்விக் கொள்கையை விரைவிலேயே நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்த அவர், இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் பேர் இக்கொள்கை தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive