இனி ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் உதயமாகும் தமிழ்மொழி..!

இனி ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் உதயமாகும் தமிழ்மொழி..!


இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) இந்தியாவில் அமைந்துள்ள உயர்கல்விக்கான தன்னாட்சி பொது நிறுவனங்கள் ஆகும்.

இந்தியா முழுவது அமைந்துள்ள இந்நிறுவனம் ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்குக்கான ஜே.இ.இ (joint entrance examination) நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது.



இதற்கு முன்னர் (ஐ.ஐ.டி) படிக்க வரும் மாணவர்களுக்கு நுழைவு தேர்வில் ஆங்கிலம், ஹிந்தி , குஜராத்தி போன்ற சில மொழிகளில் மட்டுமே எழுத்தி வந்தனர். இதனால் மற்ற மொழியில் பயிலும் மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு வரும் 2021-ம் ஆண்டு முதல் தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட 11 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நுழைவுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கிடையே மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்று வருகிறார்கள்.



12-வது தேர்ச்சியா? மத்திய ஆயுர்வேத அறிவியல் கழகத்தில் வேலை!

12-வது தேர்ச்சியா? மத்திய ஆயுர்வேத அறிவியல் கழகத்தில் வேலை!

மத்திய அரசிற்கு உட்பட்ட ஆயுர்வேத அறிவியல் ஆய்வுக் கழகத்தில் காலியாக உள்ள 66 கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

நிர்வாகம் : மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆய்வுக் கழகம்

மேலாண்மை : மத்திய அரசு



மொத்த காலிப் பணியிடங்கள் : 66

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :-

பணி : Upper Division Clerk (Group "C")

காலியிடங்கள் : 14

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில்

பணி : Lower Division Clerk (Group "C")

காலியிடங்கள் : 52

கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சிபெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.



ஊதியம் : மாதம் ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

வயது வரம்பு :

மேற்கண்ட பணியிடங்களுக்கு 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு செய்யும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம் : புதுதில்லி, அவுரங்காபாத், சென்னை, லக்னோ சண்டிகர், கொல்கத்தா, கவுகாத்தி

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100



விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.ccras.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ccras.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.



ரூ.30,000 ஊதியத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் வேலை வாய்ப்பு!

ரூ.30,000 ஊதியத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் வேலை வாய்ப்பு!


தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கணக்காளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், பியூன் உள்ளிட்ட 170 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை நிறுவனம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 170

பணியிடம் : தமிழ்நாடு

பணி மற்றும் காலிப் பணியிட விவரம்:-



கணக்காளர் - 02

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.30,000

திட்ட இணையாளர் - 01

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.30,000

Office Messenger/ Peon - 02

வயது வரம்பு : 35 வயதிற்குள் உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.8,000

மாவட்ட திட்ட உதவியாளர் - 10

ஊதியம் : மாதம் ரூ.15,000

வட்டார ஒருங்கிணைப்பாளர் - 18



ஊதியம் : மாதம் ரூ.20,000

வட்டார திட்ட உதவியாளர் - 137

ஊதியம் : மாதம் ரூ.15,000

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :

Director cum Mission Director,

Department of Integrated Child Development Services,

No.1, Dr.M.G.R Salai, Taramani, Chennai - 600 113.



இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://icds.tn.nic.in/files/Notification.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 17.12.2019 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.




5, 8ம் வகுப்பு பொது தேர்வில் முதல் பருவ பாடங்கள் ரத்து?

5, 8ம் வகுப்பு பொது தேர்வில் முதல் பருவ பாடங்கள் ரத்து?


சனி, 30 நவம்பர், 2019..      ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொது தேர்வில், நடப்பாண்டு மட்டும், முதல் பருவ பாடங்களை ரத்து செய்வது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசனையை துவக்கியுள்ளது.மத்திய அரசு உத்தரவுப்படி, தமிழகத்தில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு நடக்குமா; நடக்காதா என, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சந்தேகங்கள் இருந்தன.              அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேர்வுக்கான கால அட்டவணையை, அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.பொதுத்தேர்வில் மூன்றாம் பருவ பாடங்கள் மட்டும் இடம் பெறுமா அல்லது மூன்று பருவ பாடங்களில் இருந்தும், கேள்விகள் இடம் பெறுமா என, தேர்வுத்துறை விளக்கவில்லை. முதல் பருவ புத்தகங்கள், தற்போது மாணவர்களிடம் இல்லை.....         எனவே, புத்தகம் இல்லாத பாடங்களுக்கு எப்படி தயாராவது என, மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு பாட புத்தகங்கள் தாமதமாகவே வழங்கப் பட்டுள்ளன. அதனால், பல பாடங்கள் நடத்தப்படவில்லை. இது குறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதனால், பொது தேர்வுக்கு, எந்த பாடங்களில் இருந்து வினாக்களை அமைக்கலாம் என, தேர்வுத்துறை ஆலோசனையை துவக்கியுள்ளது..       இது குறித்து, அதிகாரி கள் கூறியதாவது:முதலாம் பருவ பாடங்கள் இல்லாததால், அந்த பாடங்களை தவிர்த்து, இரண்டாம் பருவம், மூன்றாம் பருவ பாடங்களில் இருந்து, வினாத்தாள் தயாரிக்க முடியும். நடப்பாண்டுக்கு மட்டும், இந்த நடைமுறையை பின்பற்றலாமா என, ஆய்வு செய்து வருகிறோம். இதுபற்றிய விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


Sslc Maths Half Yearly Question Paper - Blue Print

Sslc Maths Half Yearly Question Paper - Blue Print

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக 

சென்னை,


 செங்கல்பட்டு, 

புதுக்கோட்டை, 

சிவகங்கை,

 திருவாரூர், 

நாகை மற்றும் 

காரைக்கால் மாவட்டப் பள்ளிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர்கள் சனிக்கிழமை விடுமுறை அறிவித்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு.


CTET DEC 2019 - HALL TICKET


டிசம்பர் 2019,  8 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை சிபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

CTET DEC 2019 - HALL TICKET - Direct Lunk...


ஆசிரியர்கள் தேவை!! (தர்மபுரி)

ஆசிரியர்கள் தேவை!! (தர்மபுரி)

தர்மபுரி அருகே அமைந்துள்ள
தனியார் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை.

♟English
♟Maths
♟Science
♟Accountancy & Commerce.

நேர்முகத்தேர்வு
நடைபெறும்நாள் : 07/12/2019.

IndianPublic School,
Parayapatti Pudur, G.K.Road, Harur, Dharmapuri-Dt
04346-242245 & +91 8903332513
04346-242245
indiancbse@gmail.com



Tn- Emis செயலியில் Tntp இல் உள்நுழைந்து அதன் கல்வி வளங்களை எவ்வாறு பயன்படுத்துவது?

Tn- Emis செயலியில் Tntp இல் உள்நுழைந்து அதன் கல்வி வளங்களை எவ்வாறு பயன்படுத்துவது?

இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட TN EMIS எனும் செயலி மூலம் தற்பொழுது மாணவர் வருகை பதிவு செய்துகொண்டு வருகிறோம். அந்த செயலியிலேயே நாம் எவ்வாறு TNTP -ல் உள்நுழைவது, பயன்படுத்துவது பற்றி பார்ப்போம்.

```TN-EMIS APP```

⬇️

```INPUT- USERNAME ->```
*(Aadhar last 8 digit)*

```PASSWORD ->```
*(Aadhar last 4 digit@birth of year)*

⬇️

```CLICK TNTP icon```

⬇️
```Go to academic resources```

⬇️
```Select class```

⬇️
```Select term```

⬇️
```Select Subject```

⬇️
```Select topic```

⬇️
```Play video / download pdf```

*Kindly Follow this steps and use TNTP



நாளை 30.11.2019 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெறும் என அறிவிப்பு.



நாளை 30.11.2019 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெறும் என அறிவிப்பு.




பி.எட்., பட்டதாரிகளா..? அரசுப்பணிக்கு அழைப்பு.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

பி.எட்., பட்டதாரிகளா..? அரசுப்பணிக்கு அழைப்பு.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

🌹👉தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரிய 97 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

👉தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரிய 97 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " பள்ளிக்கல்வித் துறையின் கீழ், வட்டார கல்வி அலுவலருக்குரிய 2018 - 19ஆம் ஆண்டிற்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

👉இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான தேதி, விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் அறிவிக்கப்படும்.

97 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டு விதிகளின்படி, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

👉விண்ணப்பிப்பவர்கள் தங்களுக்கென பயன்பாட்டிலுள்ள மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண் போன்றவற்றைப் பதிவு செய்யும் போது அவசியம் அளிக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே அனைத்துத் தகவல்களும் பரிமாற்றம் செய்யப்படும்.

இவர்களுக்கான எழுத்துத் தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இவர்களுக்கு மூன்று மணி நேரம் ஒதுக்கப்படும்" என அதில் கூறப்பட்டுள்ளது.


இயக்குனர் மற்றும் அதனையொத்த பணியிட மாறுதல் ஆணை

இயக்குனர் மற்றும் அதனையொத்த பணியிட மாறுதல் ஆணை

புதிய மாவட்டங்கள் உதயம் வாழ்த்துக்கவிதை - ஆசிரியர் திரு சீனி.தனஞ்செழியன்

புதிய மாவட்டங்கள் உதயம் வாழ்த்துக்கவிதை - ஆசிரியர் திரு சீனி.தனஞ்செழியன்



புதிய உதயங்கள்

வேலூர் தாயின் தொப்புள்கொடியிலிருந்து உயிர்ப்பெற்றது இருமாவட்டக் குழந்தைகள்

புரட்சியின் சொந்தக்காரி போர்க்குண வித்துக்காரி என்பதால்

ஒரே தருணத்தில் இரட்டைக்குழந்தைக்குத் தாயாகி நிற்கிறாள்

வீரம் விளந்த மண்ணில் 

இராணியொருத்தி மகுடம் சூட

மலைமுகட்டின் அடியொற்றி திருப்பத்தூரானும் உதயமாகி விட்டான்

இஃதொரு விசித்திர விடியல்

கிழக்கிலும் மேற்கிலுமாய் புதியதோர் உதயம்

இவ்வளவு நாளாய் தாங்கி நின்ற மையப்புள்ளி அவள் 

அவளன்பிற்கு  என்றுமே வைக்க இயலாது முற்றுப்புள்ளி

இருகண்களின் இடையிலவள் எப்போதும் நெற்றிக்கண்ணே

எங்கள் வேர்நிலம் எப்போதும் வீரம்விளைந்த அவள் மண்ணே

பிள்ளைகள் தழைக்க

வழிகோலிய உனக்கு எங்கள் ஆயிரம் வந்தனங்கள்

நீ

ஒன்றை இரண்டாக்கியவள்

இப்போது 

ஒன்றையும் முத்தமிழ்போல் மூன்றாக்கிய வசியக்காரி

தாய்ப்பிள்ளை உறவெப்போதும் மாறாது

இருப்போம் நாங்களும் நன்றி மறவாது

இனிய குழந்தைகளுக்கு இன்று பெயர் சூட்டு விழா

அனைவரும் திரளாய் பங்கெடுப்போம் நம் குடும்ப விழாவில்

புத்தொளி பரவட்டும் நம் அனைவரின் வாழ்வில்

இன்ற வேலூரில் இருந்து இராணிப்பேட்டை, திருப்பத்தூர் புதிய மாவட்டங்களின் உதய விழா

நிறைய அன்புடன்,

சீனி.தனஞ்செழியன்,

முதுகலைத்தமிழாசிரியர்,

அஆமேநிப, திருவலம்.

வேலூர் மாவட்டம்.


அரசின் தவறான கொள்கையால், 60,000 கணினி ஆசிரியர்கள் நிலை கேள்விக்குறி

அரசின் தவறான கொள்கையால், 60,000 கணினி ஆசிரியர்கள் நிலை கேள்விக்குறி


1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 6வது பாடமாக சேர்க்கப்படுமா?

சிறப்பு செய்தி
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சமச்சீர் பாடத்திட்டத்தை உருவாக்கி, அதில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடத்தை தனிப்பாடமாக கொண்டு வந்து செயல்படுத்தினார். பின்னர் வந்த அதிமுக அரசின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி கொண்டு வந்த கணினி அறிவியல் பாட புத்தகம் தவறாக உள்ளது என கூறி பல லட்சம் புத்தகங்களை வெளியில் விடாமல் அழித்தார். அதன் பிறகு தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் கணினி பாடத்தை அறிவியல் பாடத்துடன் மூன்று பக்கமாக இணைத்து, வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த 1992 முதல் 2019 வரை சுமார் 60 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். தமிழக அரசு, கடந்த 2014ம் ஆண்டு கணினி ஆசிரியர்களை, கணினி பயிற்றுனர்கள் என கூறி, பணியில் சேருவதற்கு இளங்கலை மட்டும் இருந்தால் போதுமானது என்றனர். ஆனால், கடந்த மார்ச் மாதம் முதுகலை படிப்பு வேண்டும் என அரசாணையை மாற்றினர். இதனால் சுமார் 30 ஆயிரம் கணினி ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
இதனால் உரிய வேலை கிடைக்காததால் கணினி படித்து முடித்துள்ள ஆசிரியர்கள் பெரும்பாலானோர் மாற்று வேலைக்கு சென்று விட்டனர். மத்திய அரசு கடந்த 2011ம் ஆண்டு கணினி அறிவியல் பாடத்திற்கு என ரூ.900 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால், அந்த நிதியை கொண்டு 2019ல் தான் 7 ஆயிரம் பள்ளிகளில் ஆய்வகத்தை அமைத்தனர். கேரளா போன்ற மற்ற மாநிலங்களில் மத்திய அரசு நிதியை கொண்டு 1 முதல் 12ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் தனிப்பாடமாக உள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளில் கேரளா மாநிலத்தில் அரசு பள்ளிகளில் சுமார் 4.30 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் கணினி அறிவியல் பாடங்களை பற்றி, அரசு பள்ளிகளில் இல்லாதால், சுமார் 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. இதனால் பெரும்பாலான பள்ளிகள் மூடு விழா நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்கள் உள்ளன. மற்ற மாநிலங்களில் கணினி பாடத்தை 6 வது பாடமாக கூடுதலாக சேர்த்துள்ளனர். அங்கு 1 முதல் 12ம் வகுப்பு வரை கணினி பாடம் இருக்கும் நிலையில், கணினி பாடத்தை தமிழ், ஆங்கிலம் பாடம் போல் கட்டாயமாக்கியுள்ளனர்.
கணினி பாடத்தில் தேர்ச்சி பெற்றால் தான் 11 ஆம் வகுப்பிற்கு செல்ல முடியும் என்ற உத்தரவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தளவிற்கு மற்ற மாநிலங்களில் கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு, அம்மாநில அரசுகள் ஊக்கப்படுத்தி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடம் இருந்தாலும், அறிவியல் பாடப்புத்தகத்தில் மூன்று பக்கங்களை மட்டும் இணைத்துள்ளனர். அதிலும் தனியார் பள்ளிகளில் எல்கேஜி படிக்கும் மாணவர்களுக்குள்ள கணினி பாடங்கள் மட்டுமே, தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உள்ளது. மாணவன், அடிப்படை கணினி அறிவை, 10ம் வகுப்பு வரை படிக்காமல் வந்து விட்டு, 11ம் வகுப்பிற்கு செல்லும் போது, கணினியை பற்றி தெரியாததால், தேர்ச்சி பெறமுடியாத நிலை உள்ளது. இதனால் தனியார் பள்ளிகளுடன், அரசு பள்ளி மாணவர்கள் போட்டி போட முடியாமல் அரசு பள்ளி மாணவர்கள் வாழ்க்கையை இழந்து தவிக்கிறார்கள். தனியார் பள்ளிகளில், கணினி லேப் உள்பட அனைத்து வசதிகள் உள்ளதால், பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகள் வருங்காலத்தில் கணினி படிப்பில் உயர வேண்டும் என தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால், அரசு பள்ளிகளில் பெருமளவு சேர்க்கை குறைந்து விடுகிறது.
தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தை கொண்டு வந்தாலும், கூடுதலாக கணினி பாடத்தை சேர்க்காததால், அரசு பள்ளி மாணவர்கள் மற்ற தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட சிரமப்படுகிறார்கள். கணினி படிப்பிற்காக மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கியும், தமிழக அரசு, அந்த நிதியை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமல், கிடப்பில் போட்டு வருவது, மாணவர்களின் கணினி அறிவை முடக்குவதாகும். கேரளா போன்ற மற்ற மாநிலங்களில் உள்ளது போல் 1ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக உருவாக்க வேண்டும். அப்போது தான் வருங்காலத்தில் வெளி மாநிலத்தோடும், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு துறைகளில் போட்டிபோட முடியும். அடிப்படை கணினி அறிவியல் பாடம் தெரிந்த ப்ளஸ் 2 படித்து முடித்த மாணவனுக்கு தமிழக அரசு வழங்கும் கணினி பயன்படும். ஆனால் கணினி அறிவியல் பற்றி தெரியாததால், பெரும்பாலான மாணவர்கள், தமிழக அரசு வழங்கும் கணினியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதும், படம், சினிமா பாட்டுக்கள் கேட்பதற்கும் தான் பயன்படுத்துகின்றனர்.
தற்போது, தமிழக அரசு கணினி லேப் உள்ள பள்ளிகளில், கணினி ஆசிரியரை நியமிக்காமல், ஏற்கனவே உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்து கணினி பாடத்தை, மாணவர்களுக்கு வகுப்பெடுக்க முடிவு செய்துள்ளனர். இதனால் அந்த ஆசிரியருக்கு கூடுதல் பணிச்சுமையுடன், மாணவர்களுக்கு தரமான முறையில் கணினி பாடத்தை பற்றி கூற முடியாது. உலகம் முழுவதும் கணினி அறிவியல் மயமாகி, முன்னேறி வருகிறது. ஆனால், தமிழகம் மட்டும் தான் கணினியில் பின்னோக்கியுள்ளது. கணினி பாடத்தை தமிழக அரசு ஏன் ஊக்கப்படுத்துவதற்கு முயற்சி எடுக்க தயங்குகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்பு வரை 6 வது பாடமாக கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வர வேண்டும், அனைத்து பள்ளிகளிலும் கணினி ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக கணினி ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கியும், எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாததால், தமிழகத்திலுள்ள 60ஆயிரம் கணினி ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
SOURCE: www.dinakaran.com/News_Detail.asp?Nid=544620



நாளை ( 30.11.2019 ) சனிக்கிழமை பள்ளி வேலை நாள் அறிவிப்பு.

நாளை ( 30.11.2019 ) சனிக்கிழமை பள்ளி வேலை நாள் அறிவிப்பு.

நடைபெறுமா உள்ளாட்சித் தேர்தல்? உச்சநீதி மன்றத்தில் குவியும் வழக்குகள்!!

நடைபெறுமா உள்ளாட்சித் தேர்தல்? உச்சநீதி மன்றத்தில் குவியும் வழக்குகள்!!



இன்னும் ஒரு மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. எப்போது வேண்டுமானலும் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவிக்க வாய்ப்புள்ளது. ஆனால்
திடீர் என்று உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி திமுக சார்பில் வழக்கு தொடுத்துள்ளது.தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தேர்தல் நடத்த கூடாது. இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் தேர்தல் நடத்த கூடாது என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.




பள்ளிகளில் Aptitude Test நடத்த உத்தரவு - CEO தலைமையில் குழு - SPD Proceedings

பள்ளிகளில் Aptitude Test நடத்த உத்தரவு - CEO தலைமையில் குழு - SPD Proceedings

பள்ளி வேலை நாட்களை திட்டமிடல்!

பள்ளி வேலை நாட்களை திட்டமிடல்!


திருச்சி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு:

திருச்சி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நவம்பர் மாதம் வரை 116 வேலை நாட்கள் வருகிறது.

டிசம்பர் முதல் ஏப்ரல் 20 வரையிலான காலத்தில், அரசு விடுமுறைகள், பருவத் தேர்வு விடுமுறைகள் மற்றும் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு தவிர்த்து பள்ளி வேலை நாட்களை கணக்கிட்டுப் பார்த்தால், கீழ்க் கண்ட விவரப் படி அமையும்.

நவம்பர் வரை 116

டிசம்பர் 16

ஜனவரி 19

பிப்ரவரி 20

மார்ச் 21

ஏப்ரல் 11

ஆக மொத்தம் பள்ளி இறுதி வேலை நாளான ஏப்ரல் 20 அன்று, 203 வேலை நாட்களே பள்ளி இயங்கியதாக கணக்கு வரும்.

இதை நிவர்த்தி செய்ய 7 சனிக்கிழமைகள் பள்ளி வேலை செய்தாக வேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் ஜனவரி மாதம் வைகுண்ட ஏகாதசி, ஏப்ரல் மாதம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா மற்றும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் தேர்த்திருவிழா போன்ற விழாக்களுக்கு உள்ளூர்  விடுமுறை விடப்படுவது வழக்கம்.

சில கிராமங்களில் தை மாதம் முதல் அறுவடைத் திருவிழா என்ற வகையில் உள்ளூர் கிராமக் கோவில் திருவிழாக்கள் நடைபெறும்.

இந்த விழாக்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம்.

இது மட்டுமின்றி உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் இறுதி வாரத்தில் முதல் கட்டமாகவும், ஜனவரி மாதம் இரண்டாம் கட்டமாகவும் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 இரண்டாம் கட்டத் தேர்தல் பள்ளி வேலை நாட்களில் நடைபெற்றால், பள்ளி வேலை நாட்கள் இன்னும் குறைய வாய்ப்புள்ளது.

ஆகவே, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தற்போதே பள்ளி வேலை நாட்களை கணக்கீடு செய்து, அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படா விட்டால், ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை, அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்க வேண்டிய சூழலுக்கு உட்பட நேரும்.

ஆகவே தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளி வேலை நாட்களை கணக்கீடு செய்து, ஏப்ரல் 20 ஆம் தேதி 210 வேலை நாட்கள் என்ற இலக்கை அடைய, தற்போதே திட்டமிட்டு, வட்டாரக் கல்வி அலுவலர்களின் அனுமதி பெற்று குறைவுபடும் நாட்களுக்கு ஏற்ப, சனிக்கிழமைகளில் பள்ளி இயங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது நன்று.



Recent Posts

Total Pageviews

Code