தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு :

தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு :

தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதால், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


காலிப் பணியிடங்கள் : 34

கணிணி இயக்குபவர் - 02 காலிப்பணியிடங்கள்

வடிவமைப்பாளர் - 02 காலிப்பணியிடங்கள்

தட்டச்சர் - 02 காலிப்பணியிடங்கள்

தறி மேற்பார்வையாளர் - 02 காலிப்பணியிடங்கள்

அலுவலக உதவியாளர் - 02 காலிப்பணியிடங்கள்

அடை கட்டுபவர் - 03 காலிப்பணியிடங்கள்

இளநிலை எழுத்தர் - 08 காலிப்பணியிடங்கள்

விற்பனையாளர் - 13 காலிப்பணியிடங்கள்

சம்பளம் :

ரூ. 4,000 முதல் 32,970 வரை சம்பளமாக கொடுக்கப்படும்.

கல்வித் தகுதி :

8-வது / 10-வது / டிப்ளமோ / டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிமுறை படி வயது வரம்பில் சலுகைகள் கொடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை, துணை இயக்குநர் அலுவலகம், 824, கே.எஸ்.பார்த்தசாரதி தெரு, காமாட்சியம்மன் காலனி, ஓரிக்கை காஞ்சிபுரம் - 631 501 என்ற முகவரியில் வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://bit.ly/33BMDLp பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

கைத்தறி மற்றும் துணிநூல் துறை, துணை இயக்குநர் அலுவலகம்,
824, கே.எஸ்.பார்த்தசாரதி தெரு,
காமாட்சியம்மன் காலனி, ஓரிக்கை
காஞ்சிபுரம் - 631 501

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.12.2019 மாலை 5.45 மணி வரை


வேலைப்பளு அதிகமென்றோ..வேலை பார்க்கும் இடத்தில் மன உளைச்சலென்றோ தயவு செய்து எங்கேயும் எவரிடமும் புலம்பாதீர்கள்..!!

வேலைப்பளு அதிகமென்றோ..வேலை பார்க்கும் இடத்தில் மன உளைச்சலென்றோ தயவு செய்து எங்கேயும் எவரிடமும் புலம்பாதீர்கள்..!!


🔸 நீங்கள் இப்படிச் சலித்துக் கொண்டு செய்யும் இந்த வேலை தான் உங்களுக்கு... உங்களுக்கென ஒரு சமூக அந்தஸ்தையும்.. உற்றார் உறவினர் மத்தியில் மரியாதையையும்.. உங்களுக்கொரு தனித்த அடையாளத்தையும்.. இதையெல்லாவற்றை விடவும் நீங்கள் தலை நிமிர்ந்து வாழத் தேவையான சம்பளம்..பணம்..காசு..எனும் வாழ்வாதாரத்தை உங்களுக்கு வழங்கியது என்பதை மறந்து விட வேண்டாம்..!! 
🔹 வேலை கிடைக்காத வேலையில்லா பட்டதாரிகள் நிறைந்த தேசமிது..!! வேலை கிடைத்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் உங்களது வேலை சார்ந்த மன உளைச்சலை விடவும்.. வேலை கிடைக்காத வேலையில்லாதவனின் மனப் போராட்டம்.. வலி.. வேதனை.. ரணம்.. அவமானம்..துயரம்..துக்கம்..மிக மிகப் பெரியது..!! கடலளவு கண்ணீரைச் சுமந்தபடி.. தனக்கென்று ஒரு நிரந்தர வருமானம் தரும் வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவனின் மனநிலையை.. அதன் வீரியத்தை வெறும் வெற்று வார்த்தைகளால் சொல்லி விட முடியாது..!! இங்கு எல்லோருக்கும் பிடித்த வேலை கிடைத்து விடுவதில்லை..!! பெரும்பாலும் கிடைத்த வேலையைத் தான் செய்து கொண்டிருப்பதால் இயல்பாக உருவாகும் சலிப்பும் சோர்வும் தான் நீங்கள் குறிப்பிடும் அந்த வொர்க் பிரஷர்... ப்ரொஃபஷெனல் ஸ்ட்ரெஸ்..!! உண்மையில் வேலைப் பளுவென்பது நீங்கள் பெற்ற சிசு அதை நீங்கள் அள்ளியெடுத்துக் கொஞ்சும் போது உங்கள் நெஞ்சில் அது தன் பிஞ்சுக் கால்களால் எட்டி உதைப்பதற்கிணையான ஆனந்த வலி.. இன்பச் சுமை..!! ஒரு நொடி கண் மூடி யோசித்துப் பாருங்கள்... இந்த வேலையில்லாமல் நீங்கள் ஒரு செல்லாக்காசென்பது புலப்படும்..!!

🔸 வேலைக்குச் செல்லத் தகுந்த அத்தனை தகுதிகளும் நிரம்பியிருந்தும் ஏதேதோ காரணங்களால் வேலைக்குச் செல்லும் வாய்ப்பேயமையாமல் முழு நேரமும் குடும்பத்தை கவனிக்கும் பெண்களுக்கு கடைசி வரையிலும் உங்களைப் போல் ஆஃபிஸ் சென்று வருவது ஒரு கனவாகவே கரைந்து மறைந்து அவர்கள் நிராசையாகவே செத்து மடிவதும் நீங்கள் வாழும் இதே நாட்டின் நிலை தான் என்பதையுணரும் போது.. வேலைக்குச் சென்று வரும் நீங்கள் எத்தனை பெரிய வரம் பெற்றவர்கள் என்பது உங்களுக்கே புரியும்..!!

🔹 வேலைக்குச் செல்லும் உங்களுக்கு நிகராக.. இல்லையில்லை உங்களை விடவும் மிக அதிக ஸ்ட்ரெஸ் மன உளைச்சல் வீட்டோடு இருந்து வீட்டையும் தன் வீட்டு வேலைகளையும் மேலாண்மை செய்யும் குடும்பத் தலைவிகளுக்கு உண்டு..!! தான் அதுநாள் வரை செய்து கொண்டிருந்த வேலை பறி போனவர்களுக்கும்.. குடும்பத்தை கவனிப்பதற்காக வேலையை விட்டு விலகியவர்களுக்கும் வேலையின் அருமை என்னவென்று உணர்வுப்பூர்வமாகத் தெரிந்திருக்கும்..!!

🔸 படிப்பு முடிந்து உடனே அல்லது படித்துக் கொண்டிருக்கும் போதே மிக இளம் வயதில் திருமணம் முடிந்து.. குழந்தைகள் பெற்று வளர்த்து அதன் பிறகும் தீராத வேட்கையோடு வேலையொன்றை எட்டிப் பிடிக்கப் போராடும் நம்பிக்கை நிறைந்த மனிதர்களின் போராட்டத்திற்கு முன்பு உங்கள் வேலைப்பளுவெல்லாம் தூசுக்குச் சமம்..!! அதை வேலைப் பளு.. சுமை..ஸ்ட்ரெஸ் எனக் குறிப்பிடாதீர்கள்..!! கொஞ்சம் கூடுதல் வேலை என்பது ரசித்து இன்முகத்தோடு நீங்கள் ஏற்க வேண்டிய உங்களுக்கான வெகுமதியாகும்..!! இதையெல்லாமும் கடந்து நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலை உங்கள் ரத்தத்தை உறிஞ்சுகிறதென நீங்கள் நினைத்தால் இப்போதே அந்த வேலையிலிருந்து வெளியேறி உங்கள் மன உடல் வலிமைக்குத் தகுந்த வேறொரு வேலையைத் தேடத் தொடங்குங்கள்..!!

🔹 வேலையென்பது வேலை மட்டுமேயல்ல அது நம் வாழ்க்கையின் ஆதாரம் அஸ்திவாரம்..!! எதற்காகவும் உங்கள் உத்யோகத்தைச் சபிக்காதீர்கள்..!! வேலையென்பது சாபமல்ல..நீங்கள் உழைப்பதற்குக் கிடைத்த வாய்ப்பு.. வசதி..வரம்..!!


ஏர்டெல், Jio, வோடபோன் & ஐடியா கட்டண சேவை 47% வரை உயர்வு..!

ஏர்டெல், Jio, வோடபோன் & ஐடியா கட்டண சேவை 47% வரை உயர்வு..!

இந்தியாவின் முக்கிய வயர்லெஸ் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான வோடபோன் ஐடியா தனது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்கை அறிவித்துள்ளது!

டெல்லி: நாட்டின் மூன்று தனியார் தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களான வோடபோன் ஐடியா லிமிடெட், பாரதி ஏர்டெல் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் ஆகியவை தங்களது ப்ரீபெய்ட் அழைப்பு மற்றும் தரவு சேவைகளின் விலையை உயர்த்துவதாகக் கூறி, நீடித்த கட்டணப் போரை முடிவுக்கு கொண்டு வந்து, உலகின் மிகக் குறைந்த விகிதங்களுக்கு இழுத்தன.


ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று ஆபரேட்டர்கள் அறிவித்த பெரும்பாலான திட்டங்களின் அதிகரிப்பு 15-47% வரம்பில் உள்ளது. வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்களுக்கான புதிய கட்டணங்கள் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோவின் திருத்தப்பட்ட கட்டணங்கள் டிசம்பர் 6 முதல் நடைமுறைக்கு வரும்.
மூன்று ஆபரேட்டர்களின் கட்டண உயர்வு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அதன் முதல் முறையாகும், பல வருட போட்டிகளுக்குப் பிறகு அழைப்புகள் மற்றும் தரவு சேவைகளின் விலைகள் ராக் அடிப்பகுதியை உறுதி செய்தன. இந்நிலையில் வோடபோன்-ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனம் பிரிப்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கான மொபைல் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணத்தை வரும் டிசம்பர் 3ம் தேதி அதிகாலை 12.00 மணி முதல் நாடு முழுவதும் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது உள்ள கட்டணத்தை விட 42 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ள இந்த நிதி ஆண்டிற்கான காலாண்டின் முடிவில், ரூ.50,921 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ள இந்நிறுவனம், இழப்புகளை சரி செய்வதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வோடபோன் ஐடியாவின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ்:

காம்போ வவுச்சர்ஸ் (28 நாட்கள்):

1. ரூ. 49 - ரூ.38 டாக் டைம், 100 எம்பி டேட்டா, 2.5 ப/நொடி டேரிஃப்.

2. ரூ. 79 - ரூ. 64 டாக் டைம், 200 எம்பி டேட்டா, 1 ப/நொடி டேரிஃப்.

ஏர்டெல்லின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ் :

1. ரூ.19 - 2 நாட்கள், வரம்பற்ற கால், 100 எஸ்எம்எஸ், 150 எம்பி டேட்டா.

2. ரூ.49 - 28 நாட்கள், ரூ. 38.52 டாக் டைம், 100 எம்பி டேட்டா ( ஒரு நாளுக்கு 50 பைசா விலை உயர்வு)

3. ரூ.79 - 28 நாட்கள், ரூ. 63.95 டாக் டைம், 200 எம்பி டேட்டா ( ஒரு நாளுக்கு 50 பைசா விலை உயர்வு)


மூடும் நிலைக்குத் தள்ளப்படும் அரசுப் பள்ளிகள்!

மூடும் நிலைக்குத் தள்ளப்படும் அரசுப் பள்ளிகள்!


தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தில் அரசு நிதியுடன் 25 சதவீதம் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு தாரைவார்க்கப்படுவதால், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து பள்ளிகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது.

அண்டை மாநிலங்களைப் போல பள்ளிகளைத் தரம் உயர்த்தி மாணவர் சேர்க்கையை மேம்படுத்த வேண்டுமென கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இல் அறிமுகமான நிலையில், தமிழகத்தில் 2017-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் அளவில், ஏழைத் தொழிலாளர்களின் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும். இவர்களுக்கான பள்ளிக் கட்டணத்தை மாநில அரசு கணக்கிட்டு தனியார் பள்ளிகளுக்கு வழங்கி வருகிறது.

2019-ஆம் ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2018-19-ஆம் கல்வியாண்டில் ஒரு லட்சத்துககும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் படித்து வந்த இந்த மாணவர்கள் கல்வி அதிகாரிகள் முன்னிலையில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இந்தத் திட்டத்தில் 5 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், இதற்காக ரூ.900 கோடி அரசு செலவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், சுமார் 1,000 அரசுப் பள்ளிகளை மூட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் கைவிடப்படும் நிலையும் உருவாகியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக, ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டாலும் தனியார் பள்ளி மோகத்தால் அது பலனளிக்கவில்லை. இருப்பினும், ஆசிரியர்களின் விடா முயற்சியால் அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தனியார் பள்ளிகளில் அரசு செலுத்தும் கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம், போதிய மாணவர் சேர்க்கை இல்லை எனக் கூறி தனியார் பள்ளிகள் திடீரென மூடப்படுவது போன்ற காரணங்களால் அரசுப் பள்ளிக்கே மீண்டும் வருகின்றனர். ஆனால், மாணவர்கள் எண்ணிக்கை போதிய அளவில் இல்லை எனக் கூறி, கிராமப்புற அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அந்த மாணவர்கள் சொந்த கிராமத்தில் பயில முடியாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

நிகழ் கல்வியாண்டில் மட்டும் 46 அரசு தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிகிறது. 10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 1,500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக செயல்படுவதால், அடுத்த கல்வியாண்டில் அவை மூடப்படும் அபாயம் உள்ளது. போதிய மாணவர்கள் இன்றி சுமார் 2 ஆயிரம் பள்ளிகளை நூலகங்களாக மாற்றவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால், கிராமப்புற மாணவர்களுக்கு போதி மரங்களாக திகழும் அரசுப் பள்ளிகள் இல்லாத நிலை ஏற்படும். மேலும், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தியே தொடக்கக் கல்வியை பெறும் நிலைக்கு கிராமப்புற மாணவர்கள் தள்ளப்படுவர்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அப்படியே ஏற்பதால், தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்களில் எல்கேஜி முதல் ஒன்றாம் வகுப்பு வரை அதிகளவில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்களுக்கான கல்விக் கட்டணமாக அரசு சார்பில் ஆண்டுக்கு ரூ.120 கோடி செலவிடப்படுகிறது.

இதைக் கைவிட்டு அந்தப் பணத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தரமான கல்வியை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்று விகிதாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டும். தொடக்கப் பள்ளிகளை அருகிலுள்ள உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஆசிரியர் கூட்டமைப்பினர் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் அந்த மாநில அரசின் நடவடிக்கையால், அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 3.47 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

கர்நாடக அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கோரியும், அரசு, நிதிஉதவி பெறும் பள்ளிகள் இல்லாத இடங்களில் மட்டும் தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாணவர்கள் சேர்க்கையை செயல்படுத்தினால் போதும் எனக் கூறி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கையை நிறுத்திவைத்துள்ளது. தமிழக அரசும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.


TNPSC - Group 4 - Certificate Verification List Published (Exam Date - 01.09.2019)

TNPSC - Group 4 - Certificate Verification List Published (Exam Date - 01.09.2019)

Click Here - TNPSC - Group 4 - Certificate Verification List

சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு



*சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

*மழை காரணமாக நாளை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து

*தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாண்டியன் அறிவிப்பு




Tnfusrc தமிழ்நாடு வன சீருடை பணியாளர்கள் தேர்வுக்குழுமம் வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

Tnfusrc தமிழ்நாடு வன சீருடை பணியாளர்கள் தேர்வுக்குழுமம் வேலைவாய்ப்பு அறிவிப்பு!!


TNFUSRC - 320 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
03/12/2019 தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு
www.forests.tn.gov.in/



03.12.2019 அனைத்துவகை தலைமை ஆசிரியர்கள் கூட்டம் - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!

03.12.2019 அனைத்துவகை தலைமை ஆசிரியர்கள் கூட்டம் - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!

03/12/2019 அன்று காலை நடைபெற உள்ள அனைத்துவகை தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்.





டிச.5 முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் வளத்தல் பயிற்சி தொடக்கம்!

டிச.5 முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் வளத்தல் பயிற்சி தொடக்கம்!


மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத் திறன் வளத்தல் திறனுக்காக 1 முதல் 5 ஆம் வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு 5.12.2019 முதல் 13.12.2019 வரையும் மற்றும் 6 முதல் 8-ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 16.12.2019 முதல் 23.12.2019 வரை ஒரு நாள் பயிற்சி வழங்க மாநில திட்ட இயக்குநரின் உத்தரவு செயல்முறைகள்.



 



பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு இணையான பட்டப்படிப்புகள்!!

பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு இணையான பட்டப்படிப்புகள்!!


அரசாணை எண் : 133
நாள் : 04/06/2012.

பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு இணையான படிப்புகள் எவை என்பன குறித்து அரசாணை 133 மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.






Flash News : குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!!

Flash News : குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட    குருப் 2 தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள

http://www.tnpsc.gov.in/results.html


கணினி ஆசிரியர் தேர்வில் கூட்டு காப்பி அம்பளம் ..

கணினி ஆசிரியர் தேர்வில் கூட்டு காப்பி அம்பளம் ..



கணினி ஆசிரியர் தேர்வில் கூட்டு காப்பி அம்பளம் ..!காப்பி அடித்தவருக்கு வேலை கொடுக்க துடிக்கும் அரசு!
கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி, 822 கணினி ஆசிரியர் பணிக்கான மறுபோட்டித் தேர்வு ஆன்லைனில் நடந்தது. பெரும் குழப்பங்களுக்கு நடுவே இதற்கான முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆயிரத்து 560 பேர் இடம்பெற்ற அந்த பட்டியலை ஆய்வு செய்த தேர்வர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். வரிசையாக பல தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானது எப்படி என்றும் ஒரே அறையில் தேர்வு எழுதியவர்கள் மட்டும் தேர்வானது எப்படி சாத்தியம் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தேர்வர்களுடைய இன சுழற்சி முறையை வெளிப்படையாக அறிவிக்காதது ஏன்? என்றும் அவர்கள் சந்தேகிக்கின்றனர்.  இதனிடையே, அவசரகதியில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதியை முடிவு செய்து, உடனடியாக இறுதிப் பட்டியலை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


கனமழை : நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை ..!

கனமழை : நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை ..!

தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை திங்கள் கிழமை ( 02.12.2019) கீழ்காணும் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* தூத்துக்குடி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

* புதுச்சேரி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் இரண்டு நாள்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தொடர்ந்து கன பெய்து வருவதால் சாலைகள் மற்றும் வீடுகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.இதனால் நாளை புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது


01.01.2020 முதல் 4% அகவிலைப்படி உயர வாய்ப்பு!

01.01.2020 முதல் 4% அகவிலைப்படி உயர வாய்ப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வு குறியீட்டு எண்ணின் அடிப்படையில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்துவது வழக்கம்.

இதன்படி தற்போதைய விலைவாசி உயர்வு புள்ளிகளின் அடிப்படையில், 01.01.2020 முதல் 4% அகவிலைப்படி உயரும் என கணிக்கப் பட்டுள்ளது.

4% அகவிலைப்படி உயர்வு உறுதியானால், தற்போது 17% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள், ஜனவரி முதல் 21% அகவிலைப்படி பெறுவார்கள்.

அரசு ஊழியர்களுக்கான, வருமான வரிக்கான கணக்கீடுகள் பிப்ரவரி மாதம் இறுதி செய்யப் படுவதால், இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி முதல் மார்ச் வரை நிலுவைத் தொகையாகவும், ஏப்ரல் மாதம் முதல் ஊதியத்துடனும் வழங்கப் படும்.

மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அளித்ததும், அதனைப் பின்பற்றி மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும்.

எனினும், அகவிலைப்படி உயர்வு பற்றிய துல்லியமான கணக்கீடு ஜனவரி 31 ஆம் தேதி தான் தெரிய வரும்.



Flash News நாளை நடைபெற இருந்த Nmms தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

Flash News நாளை நடைபெற இருந்த Nmms தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது



தொடர் மழையின் காரணமாக

மாணவர் நலன் கருதி 

 நாளை நடைபெற இருந்த NMMs  தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. -தேர்வுத்துறை இயக்குனர் 


10 ம் - வகுப்பு வினாத்தாளில் மாற்றம்!!

10 ம் - வகுப்பு வினாத்தாளில் மாற்றம்!!

எந்த பல்கலைக்கழக M.Phil மற்றும் Ph.D பட்டங்களுக்கு ( Full Time / Part Time ) ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு உண்டு? - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

எந்த பல்கலைக்கழக M.Phil மற்றும் Ph.D பட்டங்களுக்கு ( Full Time / Part Time ) ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு உண்டு? - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive