ஊரக வளர்ச்சித்துறை சாலை ஆய்வாளர் தேர்வு: விடுபட்ட சான்றிதழ்களை பதிவேற்ற இறுதி வாய்ப்பு


1343494

ஊரக வளர்ச்சித்துறை சாலை ஆய்வாளர் தேர்வில் விடுபட்ட சான்றிதழ்களை பதிவேற்ற விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் சான்றிதழ் பதிவேற்றம் செய்த விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.


அப்போது சில விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களை குறைபாடாக மற்றும் சரியாக பதிவேற்றம் செய்யாமல் இருந்தது கண்டறியப்பட்டது. எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அவர்கள் தங்களின் விடுபட்ட சான்றிதழ்கள் மற்றும் சரியான சான்றிதழ்களை டிசம்பர் 27-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுகுறித்து அவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது,

எனவே, அவர்கள் அனைவரும் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் தங்களின் ஒருமுறை பதிவு (ஓடிஆர்) வாயிலாக பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive