பள்ளிகளில் மாணவர்கள் பாத பூஜை செய்யக் கூடாது - CEO சுற்றறிக்கை

1111d

பள்ளிகளில் பாத பூஜை என்ற பெயரில் எந்த நிகழ்வும் மேற்கொள்ளக்கூடாது என்று  சுற்றறிக்கை

பள்ளிகளில் ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பாத பூஜை என்ற பெயரில் எந்த நிகழ்வும் மேற்கொள்ளக்கூடாது என்று அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் லீலாவதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பள்ளிகளில் பொறுத்தேர்வுக்கு முன் பெற்றோர்களுக்கு பாத பூஜை என்ற பெயரில் நடைபெறும் கொடுமைகளை தவிர்க்க வேண்டும் என்று புகார் மனு பெறப்பட்டது.

தமிழகத்தில் உள்ள பல தனியார் பள்ளிகளில், பள்ளி தேர்வுக்கு முன்பு மாணவர்கள் பாத பூஜை என்ற பெயரில் சடங்குகள் செய்து வருவது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எழுந்து வருகின்றன.

பாத பூஜை தொடர்பான புகார்கள் வந்ததை அடுத்து, தற்போது அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive