இம்மையும், மறுமையும் இதிகாசங்கள் தாண்டி ஒளிரும் மெய்ப்பொருள் ஒளியானவரே...!
ஆதாம் ஏவாள் தொடங்கி, அகிலம் அனைத்தையும் அன்பால் அட்கொண்ட பரமபிதாவே....!
சமாதானமும், சந்தோஷமும் சகல விருத்தியாய் வாரிவழங்கும் ஜீவநதியே...!
சாந்தமும், கிருபையும் சமத்துவமாய் மலரச்செய்த மனித வடிவுரு மாசிலனே...!
நீதிமொழிகளும், நித்திய ஜெபமும் தம்புயங்களாகத் தாங்கும் தீர்க்க
தரிசனத் திறத்தோனே....!
புவிதனில் படர்ந்த பாவங்கள் போக்க,
மறுமை எடுத்து
தளிரும் ஞாலத்தில்,
துளிர்ந்து
மிளிர்ந்து
ஒளிர்ந்து
வருக எம் கர்த்தாவே...!
நின் மேய்ப்பலில் வளரும் உள்ளங்கள்,
ஜீவ காருண்யம் எய்வது திண்ணங்கள்...!
புனித வேதாகம கட்டகளைகளை
கசடறக் கற்று,
அறம் மறவாது
வளம் பெருக
வரம் செய்து
கரம் தருவாயாக...
பண்பு நிறைசால் பரிசுத்தரே...!
நின் திருநாமம் முன்நிறுத்தி,
இனிய உள்ளம் கனிந்த கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை
உரித்தாக்கி மகிழ்கின்றேன்.
"வாழ்த்துப்பண்:
ஆ.சந்துரு,
பட்டதாரி ஆசிரியர்,
கதிரிமில்ஸ் மேல்நிலைப்பள்ளி,
கோவை.