14.12.2024 முதல் lms.tnsed தளத்தில் பயிற்சியினை ஆசிரியர்கள் எவ்வாறு பெறுவது? வழிமுறைகள் வெளியீடு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, December 13, 2024

14.12.2024 முதல் lms.tnsed தளத்தில் பயிற்சியினை ஆசிரியர்கள் எவ்வாறு பெறுவது? வழிமுறைகள் வெளியீடு.


14.12.2024 அன்று முதல் lms.tnsed.com தளத்தின் மூலம் கீழ்காண் வழிமுறைகளை பின்பற்றி பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

கற்போர் மேலாண்மைத் திட்டம் (LMS) - இணையவழிப் பயிற்சி

உள்நுழைதலும் பயிற்சியை முடித்தலும் சார்ந்த குறிப்புகள்

  1. LMS தளத்தினுள் நுழைதல் 

  • LMS தளத்தினுள் நுழைய https://lms.tnsed.com/login/ என்னும் இணைப்பைப் பயன்படுத்துக.

  • உங்களுடைய EMIS பயனர் அடையாள எண்ணையும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தி உள்நுழைக. 

  1. பயிற்சியின் கட்டமைப்பு

  • பயிற்சியானது, ஏழு கட்டகங்களைக் கொண்டது. 

  • ஒவ்வொரு கட்டகத்திலும் முன்-திறனறி மதிப்பீடு, பயிற்சிக்கான பாடப்பொருள், பின்-திறனறி மதிப்பீடு ஆகியவை உள்ளன. 

  • ஏழு கட்டகங்களின் இறுதியிலும் இடம்பெற்றுள்ள பின்னூட்டத்திற்கான வினாக்களுக்கு விடையளிக்கவேண்டும். 

  1. கட்டகத்தின் படிநிலை வளர்ச்சி

  • பயிற்சியின் ஒவ்வொரு பகுதியும் அதற்கு முந்தைய பகுதியை நிறைவு செய்த பின்னரே, தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்ளும் வகையில் கட்டகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  1. கட்டகத்தை நிறைவுசெய்வதற்கான அளவுகோல்கள்

  • கட்டகங்களில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பகுதிகள், வினாடிவினாக்கள், பின்னூட்டப் படிவங்கள் ஆகியவற்றை முழுமையாக முடித்தபின்னரே பயிற்சியை நிறைவு செய்ததாகக் கருதப்படும்.

  1. சான்றிதழ்

  • பயிற்சியை நிறைவு செய்வதற்கு எடுத்துக்கொண்ட காலஅளவையும் கணக்கில்கொண்டு, பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ் உருவாகும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


Post Top Ad