TNPSC - தட்டச்சர் பதவிக்கு சான்று சரிபார்ப்பு தேதி வெளியீடு!

TNPSC - தட்டச்சர் பதவிக்கு சான்று சரிபார்ப்பு தேதி வெளியீடு!

 


குரூப் 4 பதவியில் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகள்(2018-2019, 2019-2020 ஆண்டுக்கானது) அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு எழுத்து தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்றது. 


எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண் விவரங்கள் கடந்த நவம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வில் உள்ள தட்டச்சர் மற்றும் சுருக்கு எழுத்து தட்டச்சர்(கிரேடு 3) பதவிகளுக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் முறையே கடந்த மார்ச் 20ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை மற்றும் ஏப்ரல் 2ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை நடைபெற இருந்தது.


கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக இவ்விரு பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது. 


தற்போது தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற நவம்பர் 2ம் தேதி முதல் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) பதவிக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நவம்பர் 28ம் தேதி முதல் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 


விண்ணப்பதாரர்களுக்கு தேதி மற்றும் நேரம் குறித்து எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் மூலமாக தனியே தகவல் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் கோரிய கல்விச்சான்று மற்றும் அனைத்து இன்றியமையாத சான்றிதழ்களை நேரில் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive